நாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.
அதிகமான தளங்களில் உலவு ஓட்டுபட்டைகளை காண முடியும். தற்போது உலவு தளம் அதன் டொமைனை புதுபிக்காததால் உலவு ஓட்டுப்பட்டை வைத்திருக்கும் அனைத்து தளங்களும் உலவு தளத்திற்கு சென்று, பின்வருமாறு செய்தி காட்டுகிறது.
இதனை தவிர்ப்பதற்கு உங்கள் தளத்தில் இருந்து உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும். பிழை சரி செய்யப்பட்ட பிறகு ஓட்டு பட்டையை வைத்துக் கொள்ளலாம்.
பழைய ப்ளாக்கர் தளத்தில் Edit Html பக்கத்திற்கு சென்று Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.
புதிய ப்ளாக்கர் தளத்தில் Template பக்கத்திற்கு சென்று Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.
அதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில் Proceed என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
அதில்
Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு “Cntrl + F” அழுத்தி பின்வரும் உலவு ஓட்டுபட்டையின் நிரலை தேடி கவனமாக Delete செய்யுங்கள்.
<script
type='text/javascript'>submit_url =
"<data:post.url/>"</script> <script
src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
பிறகு Save Template என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!
தகவல்: உலவு தளத்தினர் ewebguru.com தளத்தின் மூலம் டொமைன் வாங்கியுள்ளார்கள் என நினைக்கிறேன். உலவு முகவரி 2013-ஆம் ஆண்டு தான் காலாவதியாகிறது. உலவு தளத்தினர் ewebguru.com தளத்தில் டொமைனை புதுப்பித்தால் தான் தளம் வேலை செய்யும்.
உடனே தகவல் தந்தமைக்கு நன்றி!
நண்பா, நீங்கள் உபயோகப்படுத்தும் ஒட்டுப்பட்டைகளின் Code-ஐ அளிக்க முடியுமா? நச்சென்று இருக்கிறது! 🙂
thanks brother
உலவு பட்டையை நான் வெகு நாட்களுக்கு முன்பே நீக்கி விட்டேன். அது இருந்தால் பதிவு வர அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
Tha.ma 5
சில பதிவுகளுக்குப் போய்
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியைக் காட்ட
குழம்பிப்போனேன்
குழப்பம் நீக்கியமைக்கு மனமார்ந்த நன்றி
பிரயோசனமான பதிவு நண்பா
தகவலுக்கு நன்றி நண்பா…
நண்பர் அதை ஏற்கனவே ஒரு பதிவில் போட்டு உள்ளாரே
உண்மை நண்பா நானே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் ..நேற்று மதியம் என் வலைப்பூவை அனுகையில் இந்த பிழை செய்தி வந்தது …உழவு ஓட்டு பட்டையை நீக்கிய பின்பே இந்த பிரச்சனை சரியானது …நல்லதொரு பதிவின் மூலம் நிறைய வலைப்பூக்களை காப்பாற்றி உள்ளீர்கள் …உங்களது சேவைக்கு மினமார்ந்த நன்றி நண்பா…
@Karthik Somalinga
நண்பா! கீழுள்ள பதிவில் நான் பயன்படுத்தும் ஓட்டுபட்டைகளின் நிரல்கள் உள்ளது. அதில் யுடான்ஸ் மட்டும் நான் பயன்படுத்தவில்லை.
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html
@கவிதை நாடன்
நன்றி நண்பரே!
@Abdul & கவிதை நாடன்:
ஆமாம், அந்த பதிவில் உள்ளதைத்தான் இப்போது பயன் படுத்துகிறேன்! ஆனால், நான் கேட்பது தற்போதைய டேபிள் format-ஐ! குறிப்பாக தமிழ்மணம் பட்டை சிறியதாக இருப்பது நன்றாக உள்ளது! 🙂
அதில் யுடான்ஸ் பட்டையை நீக்கிவிட்டு பாருங்கள் நண்பா!
முதல் வரிசையில் உள்ள அனைத்து திரட்டிகளின் அளவைப் பொறுத்து தமிழ்மணம் ஓட்டு பட்டை அளவு மாறும்.
நான் எப்போதே எடுத்து விட்டேன். நமக்கு பிடித்த தளத்தை திறக்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை ஆகும். "waiting for ulavu.com" என்றே இருக்கும். ஏன் என்று தெரியாது. நிறைய தளங்களில் (உலவு பட்டையை முதலில் நீக்கவும்) இதை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், பல பேர் இதை எடுக்கவில்லை. உங்களின் விளக்கமான பதிவிற்கு பின், இப்போது எடுத்து விடுவார்கள் ! நன்றி நண்பரே !
மிகமிக பயனுள்ள பதிவு நண்பா.
உலவு பட்டை இருந்த போது தளம் லோட் ஆக அதிக நேரம் எடுத்தது. எனவே, சில வாரங்களுக்கு முன்பே நீக்கி விட்டேன்!!
தகவலுக்கு நன்றி!
நண்பரே என்னுடைய வலைத்தளத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி தான் வருகிறது.உலவு.காம் என்று ஒரு பக்கம் தெரிகிறது.
இருப்பினும் நீங்கள் சொல்லியது போல் என்னால் அதை நீக்க முடியவில்லை. ஏனெனில் என்னால் Template பக்கத்திற்கு சென்று Edit HTML என்பதை க்ளிக் செய்தாலே இந்த பக்கம் தான் வருகிறது.
என்ன செய்வதென்றே தெரியவில்லை…
உதவி தேவை நண்பரே…
நான் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்துவது இல்லை….என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே என்னால் உளவு account use பண்ண முடிவதில்லை…
மிக்க நன்றி பயனுள்ள பதிவு பதிவர்களுக்கு
thakavalukku nandri nanba
Thanks for this information. Please share about reliable directories available for English blogs
மிக்க நன்றி சார், இதுபோல என் தளத்தில் வந்தது, என் குழப்பத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி!!!!
தகவலுக்கு நன்றி நண்பரே..!
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோதரரே..
அத்துடன் எனக்கும் ஒரு சின்ன தகவல் தெரிய
வேண்டும் .எனது தளம் சில மாதங்களுக்கு முன்பிருந்து
.com என்பதற்குப் பதிலாக blogspot . ch என மாறியுள்ளது
இதனை மாற்ற முற்பட்டு எனது தளத்தில் நிறுவி இருந்த
ஓட்டுப் பட்டைகள் நீங்கி விட்டது .புதிதாக ஓட்டுப்
பட்டைகளை நிறுவும்போது நான் என்ன மாற்றம் செய்ய
வேண்டும்?….அதனை எவ்வாறு செய்வது ?…
எனது URL இப்போதும் .ch என்றே உள்ளது .முடிந்தால்
தகவல் சொல்லுங்கள் சகோ .
ஓட்டுபட்டையை சாதாரணமாக நிறுவுங்கள் சகோ.! பிறகு கீழுள்ள பதிவில் உள்ள படி செய்யுங்கள். அது போதும்.
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
பலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி
வாழ்த்துக்கள் சகோ எளிமையான முறையில் எம்
போன்றவர்களும் தங்கள் தகவலைப் புரிந்துகொண்டு
மிக சிறப்பாக தொழில்படும் வண்ணம் பல அரிய
பயனுள்ள தகவலை வழங்கி வருவதுகண்டு பெரு
மகிழ்வு கொள்வதுடன் உங்களிற்கு எனது மனமார்ந்த
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .இன்னொரு
தடவையாக தங்களின் தகவலை வைத்துக்கொண்டு என்
தளத்திற்கு தேவையான மாற்றங்களை துணிந்து செய்து
வெற்றியும் அடைந்துவிட்டேன்!!…….ஆனால் தமிழ்மணம்
மட்டும் இணைக்க முடியாமல் உள்ளது .இதற்கும் தங்கள்
உதவியை எதிர்பார்க்கின்றேன் சகோ……..மிக்க நன்றி சகோ .
நான் உலவை நீக்கி ரொம்ப நாளாச்சு… லோடிங் லோடிங் பிரச்சனையில்…
வாழ்த்துக்கு நன்றி சகோ.!
தற்போது தமிழ்மணம் தளம் வேலை செய்யவில்லை. அதனால் ஓட்டுபட்டை தெரியாது.
தமிழ்மணம் ஓட்டுபட்டை சேர்க்க கீழுள்ள பதிவை பார்க்கவும்.
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html
என்னுடைய தளத்திலும் இந்த பிழை செய்தி காட்டியது. உலவு பட்டை நீக்கியதும் பிளாக் திறந்தது. இது குறித்து நானும் பதிவிட்டேன்! நன்றி நண்பரே!
உலவு பட்டையை நீக்கிவிட்டேன். பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
உங்களின் தகவலை கண்டு மாற்றிவிட்டேன் தகவலுக்கு நன்றி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…
வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/3.html) சென்று பார்க்கவும். நன்றி !
This comment has been removed by the author.