உடான்ஸ் திரட்டியில் மால்வேர்

நமது பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு செல்ல திரட்டிகள் உதவுகிறது. முன்னணி தமிழ் திரட்டிகள் சில இருக்கும் நிலையில் வேறு சில திரட்டிகளும் அதிகம் உள்ளன. அதில் ஒன்று உடான்ஸ்/யுடான்ஸ் திரட்டி. தற்போது அந்த திரட்டியில் மால்வேர் உள்ளதாக எச்சரிக்கை செய்கிறது கூகுள்.

கூகுள் குரோம் உலவியில் உடான்ஸ் திரட்டியின் ஓட்டுப்பட்டை இருக்கும் தளங்களை திறந்தால் சில சமயம் பின்வருமாறு எச்சரிக்கை காட்டும்.

Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on .blogspot.com.

Content from udanz.com, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware. Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion.

அதனால் அந்த தளங்களை திறக்க முடியாது.

பயர்பாக்ஸ் உலவியில் உடான்ஸ் தளத்தை திறந்தால் பின்வருமாறு காட்டும்.

மேலும் கூகுளில் தற்போது udanz.com என்று தேடி பார்த்தால் பின்வருமாறு காட்டும்,

Udanz முகவரிக்கு கீழே This site may harm your computer என்று காட்டும்.

ஒரு தளத்தில் மால்வேர் உள்ளதா? இல்லையா? என்பதை பார்க்க உதவும் Google Safe Browsing தளத்திலும் மால்வேர் உள்ளதாகவே காட்டுகிறது.

http://www.google.com/safebrowsing/diagnostic?site=udanz.com

இதன் மூலம் உடான்ஸ் திரட்டியில் மால்வேர் உள்ளது உறுதியாகிறது. இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

உடான்ஸ் திரட்டியின் ஓட்டுப்பட்டை உங்கள் ப்ளாக்கில் இருந்தால் நீக்கிவிடுங்கள்.

Blogger Dashboard => Templates பகுதிக்கு சென்று, Edit Html என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து கீழே உள்ள உடான்ஸ் நிரலை நீக்கிவிடுங்கள்.

<script expr:src=’ &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ‘ language=’javascript’ type=’text/javascript’/>

பிறகு Save கொடுங்கள். உடான்ஸ் ஓட்டுப்பட்டையை நீக்குவது மட்டுமே தற்போதுள்ள பாதுகாப்பு வழி!

Edit Html பகுதிக்கு போகும் போதும் வார்னிங் காட்டினால், Advanced என்பதை க்ளிக் செய்து, Prcodeed at your own risk என்பதை(இரண்டு முறை) க்ளிக் செய்தால் உள்ளே போகலாம்.

டிஸ்கி: காலையில் எழுந்ததும், பேஸ்புக்கை திறந்ததும் சகோதரர் ஒருவர் இது பற்றி கேட்டார். ஓட்டுப்பட்டையை நீக்குமாறு சொல்லிவிட்டு, அலுவலகம் வந்துவிட்டேன். திண்டுக்கல் தனபாலன் சாரிடமிருந்து இது பற்றி எச்சரிக்கை மெயில் வந்திருந்தது. எப்போதும் பதிவர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் தனபாலன் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

24 thoughts on “உடான்ஸ் திரட்டியில் மால்வேர்”

 1. உண்மைதான் நண்பரே பதிவிட்டு வியு பேஜ் கொடுத்ததும் குரோம் எச்சரிக்கை செய்தது. உடனே ஓட்டுப்பட்டையையும் நிரலியையும் நீக்கிவிட்டேன்! நல்ல விழிப்புணர்வு பதிவு! தனபாலன் சாருக்கும் எனது நன்றிகள்!

 2. நானும் இப்போதே அந்த அவஸ்தையை அனுபவித்து ஐயோ போச்சி என் பிளாக் என நினைத்த நேரத்தில் தங்கள் பதிவின் மூலம் (கூகில் ப்ளஸ்சில்) சரி செய்தேன் . மிக்க நன்றிங்க. சகோதரர் தனபாலன் அவர்களுக்கும்.

 3. பாசித்,

  உடான்ஸ் பற்றிய மால்வேர் செய்தி எனக்கும் வந்தது, எனக்கு ஒரு சந்தேகம்,

  உடான்ஸ் திரட்டியில் மால்வேர் தற்பொது தான் ஒட்டியிருக்கிறது என வைத்துக்கொண்டாலும் ,உடான்ஸ் கருவிப்பட்டை முன்னரே இணைக்கப்பட்டது ,அதில் எப்படி வந்து மால்வேர் ஒட்டும், முன்னரே கருவிப்பட்டைக்கான நிரலியில் மால்வேர் சேர்க்கப்பட்டால் தான் உண்டு.

  மேலும் உடான்ஸ் கருவிப்பட்டைக்கான ஜாவா ஸ்கிரிப்ட் நிரலியில் பார்த்தாலும் எதுவும் அபாயமாக இல்லை. எனவே அதில் மால்வேர் எங்கே இருக்க முடியும்?

  அப்படி இருக்கும் போது கருவிப்பட்டை வைத்திருக்கும் வலைப்பதிவை எல்லாம் மால்வேர் இருக்குனு கூகிள் குரோம் எச்சரிக்கை செய்யுது.

  தற்சமயம் உடான்ஸ் தளத்தில் மால்வேர் தாக்கி இருக்கலாம்,எனவே உடான்ஸ் யுஆரெல் ஐ கூகிள் மால்வேர் என பட்டியலிட்டு,கருவிப்பட்டையில் உடான்ஸ் முகவரி இருப்பதால் அதுவும் தணிக்கையாகிறது. எனவே கருவிப்பட்டை இருப்பதால் நமக்கு பிரச்சினை வர வழியில்லை என்றே சொல்லலாம்.

  உடான்ஸ் திரட்டி கேபிள் சங்கரால் நடத்தப்படுகிறது ,எனவே அவர் மால்வேர் எல்லாம் போடவாய்ப்பில்லை, தளத்தில் இருக்கும் பிரச்சினை சரியானால் ,சரியாகிவிடும்.

  கருவிப்பட்டை இருப்பதை நினைத்து ரொம்ப கிலியாக தேவையில்லை.

  இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானேனு நினைக்கலாம், சிலர் கருவிப்பட்டை இருந்தாலே கணினியை களவாடிக்கிட்டு போயிடும் போலனு ரொம்ப பீதியாகி இருக்கலாம் என சொன்னேன்.

 4. நான் கணினித் துறையை சார்ந்தவன் இல்லை என்பதால் மால்வேர், ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் பற்றி ஆழமாக தெரியாது.

  //உடான்ஸ் திரட்டி கேபிள் சங்கரால் நடத்தப்படுகிறது ,எனவே அவர் மால்வேர் எல்லாம் போடவாய்ப்பில்லை, //

  மால்வேரை அவர் போட்டார் என்றெல்லாம் சொல்லவில்லை, உடான்ஸ் திரட்டியில் மால்வேரி இருப்பதாக (கூகுள் சொன்னதை) சொன்னேன்.

  //தளத்தில் இருக்கும் பிரச்சினை சரியானால் ,சரியாகிவிடும்.//

  அதை தான் நானும் சொல்ல வருகிறேன். சரியாகும்வரை தற்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு வழி ஓட்டுப்பட்டையை நீக்குவது மட்டுமே!

  ஏனெனில், அதை நீக்கும்வரை ஓட்டுப்பட்டை வைத்திருப்பவர்கள் கூகுள் க்ரோமில் Blogger Dashboard செல்லும் போதெல்லாம் எச்சரிக்கை காட்டிக் கொண்டே இருக்கும்.

  இந்த பிரச்சனை எதனால் ஏற்பட்டது? கூகுள் தவறாக சொல்கிறதா? என்பதை உடான்ஸ் தளத்தினர் தான் ஆராய வேண்டும்.

  அதுவரை,

  நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்பச் செயல்.

 5. மால்வேரின் தன்மையைப் பொருத்து அதன் செயல்பாடு மாறுபடும். தற்போதைய நிலைமையில் இந்த மால்வேர் நமது தளத்தை திறக்க விடுவதில்லை. குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எச்சரிக்கை செய்தி தருகிறது,எச்சரிக்கைகளை தாண்டி வேண்டுமானால் செல்ல முடியும். இது போன்ற தளங்கள் நமது கணினியைத் தாக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எல்லாமே .bat .dll மற்றும் சில ரிஜிஸ்டர் மதிப்புகளை மாற்றும் நேரத்தில் இருந்து கணினியில் பிரச்னை ஆரம்பிக்கிறது.

  .bat .dll பைல்கள் நாம் அசந்த நேரத்தில் உள்ளே வர வாய்ப்பு உள்ளது, ஆனால் ரிஜிஸ்டர் மதிப்புகள் நாம் அசராத நேரத்தில் கூட நமக்கு தெரியாமல் மாறலாம்.

  ஒரு வருடம் வலைதள நிர்வாக துறையில் வேலைசெய்த பொழுது, ஒரு நாள் மிக மோசமாக இந்தத் தாக்குதலுக்கு உள்ளானோம். வாய்ப்பு கிடைத்தால் அந்த அனுபவம் பற்றி விளக்கமாக பதிவு செய்கிறேன்.

  மொத்தத்தில் இது ஆபத்து தான். ஆபத்தின் அளவை ஆராயாமல் சொல்லி விட முடியாது…

  அற்புதமான பதிவு.

  காலையில் தனபாலன் சார் என்னிடம் சொல்லியிரா விட்டால் கொஞ்ச நேரத்திற்கு மண்டையை பிய்த்து இருப்பேன். என்று அறிந்து கொள்வதற்கு முன் காண நேரத்தில் போன் செய்து பிரச்சனையைப் பற்றி கூறினார்…..

  நன்றி தனபாலன் சார்… நன்றி பிளாக்கர் நண்பன்

 6. // உடான்ஸ் முகவரி இருப்பதால் அதுவும் தணிக்கையாகிறது. எனவே கருவிப்பட்டை இருப்பதால் நமக்கு பிரச்சினை வர வழியில்லை என்றே சொல்லலாம்.//

  நாம் பதிவர்கள் என்பதால் நமக்கு SEO என்ற பிரச்னை கிடையாது. SEO தேவைப்படும் வலைதளங்களுக்கு இது ஒரு பின்னடைவு. SEO செயல்பாட்டை, மதிப்பை, தரத்தை மால்வேர்கள் குறைத்து விடும்,சமயத்தில் அடிமட்டத்திற்கு தள்ளி விடும். சில சமயங்களில் போட்டி கம்பெனிகளால் இது போன்ற மால்வேர் பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்பு உண்டு

 7. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
  உடான்ஸ் திரட்டியில் அதிகமாக ஆபாச பதிவுகள் இணைக்கப்பட்டு வருவதாகவும், 'அதில் போய் நமது பதிவை திரட்ட வேண்டுமா' என்றும் சில தயக்கம் இருந்து வந்தது. கருவிப்பட்டையை நீக்கி விடலாம் என்ற முடிவில் உறுதியான போது… அப்பாடா… ஏதோ ஒரு ரூபத்தில் தானாக வந்தது யுடான்சில் இருந்து விடுதலை..! வெல்கம்..!

 8. காலையில் எனது தளத்திலும் இந்தக் குழப்பம் இருந்தது
  அதனால் எனக்கு தெரிந்த ஒரு வரிடம் உதவி பெற்று நீக்கிவிட்டேன் .
  மிக்க நன்றி சகோதரா இப் பகிர்வுக்கு.

 9. இப்பத்தான் பதிவுலகுக்கே நுழைந்திருக்கிறேன். ஒட்டுப்பட்டை என்றால் என்னவென்றே முழுதாகதெரியவில்லை. இருந்தாலும் நன்றி. உடான்ஸ்பார்ட்டிக்கிட்ட உஷாராகீறேன்.

 10. நீங்கள் சொன்ன தளங்களில் எந்த பிரச்சனையும் இல்லை சகோ! மீண்டும் செக் செய்து பாருங்கள்!