உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?

மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் “தீம்பொருள்” என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

மால்வேர் எப்படி தாக்குகிறது?

மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.

நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? 

இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.

அந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,

http://www.google.com/safebrowsing/diagnostic?site=blogname.com 

என்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள் தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் “Site is listed as suspicious – visiting this web site may harm your computer.” என்று சொல்லும். மேலும்  எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது? என்றும் காட்டும்.

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் ‘Google has not visited this site within the past 90 days’ என்று சொல்லும்.

மால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது?

மால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது. அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால் இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.

அது பற்றிய தொடர்: கூகிள் வெப்மாஸ்டர் டூல்

இதையும் படிங்க:  ப்ளாக்கர் நண்பன் Version 2.0

அதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.

அதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.

பிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

சில முன்னேற்பாடுகள்:

இதனை நீங்கள் முன்னரே படித்திருப்பீர்கள். இப்பதிவுக்கு ஏற்றதென்பதால் இங்கு பகிர்கிறேன்.

1. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் மால்வேர் பாதித்தால் பழையதை பயன்படுத்திக் கொள்ளலாம். டெம்ப்ளேட்டை பேக்அப் எடுக்க,

Dashboard => Template பக்கத்திற்கு சென்று மேலே வலதுபுறம் Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

2. மாதம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ப்ளாக்கை பேக்கப் எடுக்க,

Dashboard => Settings => Other பக்கத்திற்கு சென்று Export Blog என்பதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ததை தேவைப்படும்போது பதிவேற்றம் செய்ய விரும்பினால் Import blog என்பதை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.

3. நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்க திரட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அதற்காக எல்லா திரட்டிகளின் ஓட்டுபட்டைகளையும் இணைக்காதீர்கள்.

4. நமது ப்ளாக்கை அழகுப்படுத்த பல்வேறு விட்ஜட்களை சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கும் முன் கவனமாக இருக்கவும். சமீபத்தில் ஆன்லைன் வாசகர்களை காட்டும் ஒரு நிரலியில் மால்வேர் இருந்தது. அதனால் புதிய தளங்களில் இருந்து விட்ஜட்களை சேர்க்க நினைத்தால் முதலில் அந்த தளத்தை கூகிளில் தேடி பார்க்கவும்.

மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பிற்சேர்க்கை:

மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் பதிவிடும் போதும் உங்கள் ப்ளாக்கை மால்வேர் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் நல்லதொரு ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும். அதனை அடிக்கடி அப்டேட் செய்து வரவும்.

46 thoughts on “உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?”

  1. மிகவும் பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.. ப்ளாக்கிலும் மால்வேர் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். நன்றி

    நம்ம ப்ளாக் பக்கமும் கொஞ்சம் வாங்க…

  2. நண்பா நன்றி நண்பா தகவலுக்கு ,உபயோகமான பதிவு ,செக் செய்து பார்த்தேன் ,'Google has not visited this site within the past 90 days'
    என்று வந்து விட்டது ,மிக்க நன்றி ,பகிர்வுக்கு

  3. சகோ பாஸித் மிக்க நன்றி

    இது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு, இரு முறை மால் வேர் வைரஸ் ஏற்பட்ட்டுள்ளது, தெளிவான விளக்கம்.

    மீண்டும் நன்றி

  4. சமீபத்தில் மால்வேர் பற்றி பார்த்தேன். உங்கள் பதிவின் மூலம் தீர்வை அறிந்தேன் நன்றி சகோ.

  5. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிகவும் உபயோகமான பதிவு சகோதரர். ஜசாக்கல்லாஹ்..

    வஸ்ஸலாம்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  6. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    அருமையாக ஆராய்ந்து திறமையாக அதை பதிவிட்டு உள்ளீர்கள்.
    பதிவர்கள் சகலருக்கும் பயனுள்ள பதிவு.
    பகிர்வுக்கும் தங்கள் சேவைக்கும் மிக்க நன்றி சகோ.

  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மிகவும் அவசியமான பதிவு. நன்றி சகோ. நீங்கள் கொடுத்திருக்கும் படத்தைப் பார்த்தால் உண்மையிலே பயமா இருக்கு :))

  8. //Heart Rider said… 1

    மிகவும் பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.. ப்ளாக்கிலும் மால்வேர் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். நன்றி

    நம்ம ப்ளாக் பக்கமும் கொஞ்சம் வாங்க…//

    நன்றி நண்பா! கண்டிப்பாக வருகிறேன். 🙂 🙂 🙂

  9. //வைரை சதிஷ் said… 3

    நண்பா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா….

    நண்பரே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
    //

    நன்றி நண்பா! கண்டிப்பாக வருகிறேன்.

  10. //Prabu Krishna said… 5

    சமீபத்தில் மால்வேர் பற்றி பார்த்தேன். உங்கள் பதிவின் மூலம் தீர்வை அறிந்தேன் நன்றி சகோ.
    //

    நன்றி சகோ.!

  11. //Jaleela Kamal said… 6

    சகோ பாஸித் மிக்க நன்றி

    இது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு, இரு முறை மால் வேர் வைரஸ் ஏற்பட்ட்டுள்ளது, தெளிவான விளக்கம்.

    மீண்டும் நன்றி//

    நன்றி சகோதரி!

  12. //M.R said… 7

    நண்பா நன்றி நண்பா தகவலுக்கு ,உபயோகமான பதிவு ,செக் செய்து பார்த்தேன் ,'Google has not visited this site within the past 90 days'
    என்று வந்து விட்டது ,மிக்க நன்றி ,பகிர்வுக்கு
    //

    நன்றி நண்பா!

  13. //Aashiq Ahamed said… 9

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிகவும் உபயோகமான பதிவு சகோதரர். ஜசாக்கல்லாஹ்..

    வஸ்ஸலாம்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ//

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

  14. //குடிமகன் said… 11

    மிகவும் பயனுள்ள பதிவு!!

    உங்களது விழிப்புணர்வு சேவை மிகவும் அருமை நண்பரே!//

    நன்றி நண்பரே!

  15. //சம்பத்குமார் said… 12

    பயனுள்ள பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  16. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said… 13

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    அருமையாக ஆராய்ந்து திறமையாக அதை பதிவிட்டு உள்ளீர்கள்.
    பதிவர்கள் சகலருக்கும் பயனுள்ள பதிவு.
    பகிர்வுக்கும் தங்கள் சேவைக்கும் மிக்க நன்றி சகோ.//

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

  17. //ஆயிஷா அபுல் said… 14

    அஸ்ஸலாமு அலைக்கும்

    மிகவும் பயனுள்ள பதிவு.

    என் சிஸ்டமும் கொஞ்சநாளா பிரச்சனை.
    //

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோதரி!

    நல்ல ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும்.

  18. //MHM Nimzath said… 15

    மிகவும் பயனுள்ள தகவல்….//

    நன்றி நண்பா!

    //என்னுடைய Blog ஐயும் பரிசோதித்து விட்டேன்…..இல்லை//

    மிக்க மகிழ்ச்சி நண்பா!

  19. //"என் ராஜபாட்டை"- ராஜா said… 17

    நல்ல தகவல் .. நன்றி//

    நன்றி நண்பா!

    //என் வலையில் மால் வேர் இல்லை//

    மிக்க மகிழ்ச்சி நண்பா!

  20. //ரெவெரி said… 20

    மிகவும் பயனுள்ள பதிவு…பகிர்ந்தமைக்கு நன்றி…நன்றி நண்பரே..
    //

    நன்றி நண்பரே!

  21. //மாய உலகம் said… 21

    ஆஹா லேட்டோ இருங்க நண்பா படித்துவிட்டு வருகிறேன்..//

    லேட்டா வந்தாலும்…. 🙂 🙂 🙂

    //அவசியமான பதிவு நண்பா… மிக்க நன்றி//

    நன்றி நண்பா!

  22. //அஸ்மா said… 23

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… மிகவும் அவசியமான பதிவு. நன்றி சகோ. //

    வ அலைக்கும் ஸலாம். நன்றி சகோ!

    //நீங்கள் கொடுத்திருக்கும் படத்தைப் பார்த்தால் உண்மையிலே பயமா இருக்கு :))//

    அந்த படத்தை விட மால்வேர் அதிகம் பயமுறுத்தும்.

    🙂 🙂 🙂