உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்

கூகிள் இந்தியா வலைத்தளம் நமது தளங்களை சோதனை செய்வதற்காக India Site Clinic என்ற பெயரில் நல்ல வாய்ப்பை நமக்கு தருகிறது. இங்கு நம்முடைய தளங்களை சமர்ப்பித்தால் கூகிள் தேடல் தரக் குழு நம்முடைய தளங்களை ஆராய்ந்து, நம்முடைய தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள்.

இங்கே கிளிக் செய்து உங்கள் தளம் பற்றிய விவரங்களைக் கொடுத்து சமர்ப்பியுங்கள்.

உங்கள் தளத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: May 14th, 2012

இரண்டு நிபந்தனைகள்:

1. உங்கள் தளத்தை Google Webmaster Tool தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். (இது பற்றி அறிய கூகுள் வெப்மாஸ்டர் டூல் தொடர் பதிவுகளைப் பார்க்கவும்)

2. உங்கள் தளம் கூகுள் தர வழிகாட்டல்களின்படி (Quality Guidelines) இருக்க வேண்டும். (இது பற்றிய கூகிள் விளக்கம் ஆங்கிலத்தில் இங்கே)

கவனிக்க:

உங்கள் தளத்தை சமர்ப்பித்தால் பின்னால் அவர்கள் “ஒரு தளம் எப்படி இருக்கக் கூடாது?” என்பதற்கோ, அல்லது “ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும்?” என்பதற்கோ எடுத்துக்காட்டாக உங்கள் தளத்தை முன்னிறுத்திக் காட்டலாம்.

தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்கள் இதில் உங்கள் தளங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.

மேலதிக செய்திகள்:

1. ப்ளாக்கர் டைனமிக் டெம்ப்ளேட்களில் மேலும் சில Gadget-களை பயன்படுத்தும் வசதியை தந்துள்ளது. அவைகள் Translate, Blog List, Link List, List ஆகியவைகள் ஆகும்.

2. நமக்கு வரும் மின்னஞ்சல்கள் வேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு தானாக மொழியாக்கம் செய்யும் வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிலருக்கு மட்டுமே அறிமுகமான இந்த வசதி இன்னும் சில வாரங்களில் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க:  கூகிளின் அதிரடி மாற்றங்கள்

17 thoughts on “உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்”

  1. எனது பதிவினை கூகிள் மருத்துவரிடம் அனுப்பியுள்ளேன்..
    என்ன மருந்து கொடுக்கிறார் என்று பார்ப்போம்!

  2. நானும் அனுப்பியுள்ளேன், என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் ..!

    நல்ல தகவல் நண்பா, பகிர்ந்தமைக்கு நன்றி ..!

  3. வேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு

    /ம் நல்லா இருக்கே

    பகிர்வுக்கு நன்றி சகோ

  4. நானும் என் தளத்தின் தகவல்களையும் அனுப்பி விட்டேன்.

    பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.!