அதிபயங்கர நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகத்தில் எங்கு அநியாயம் (?) நடந்தாலும் பொங்கி எழும் அமெரிக்காவின் போர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான இணையத்தாக்குதல் (Cyber Attack) தொடுப்பதற்காக உருவாக்கிய Stuxnet என்னும் வைரஸை உருவாக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
ஈரானின் அணு ஆராய்ச்சியை சீர் குலைப்பதற்காக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது Stuxnet என்னும் வைரஸ் (Worm) “Olympic Games” என்னும் ரகசிய குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டது. பராக் ஒபாமா அதிபராக ஆன பின்பும் Stuxnet சோதனை தொடர்ந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு ஈரானில் உள்ள ஒரு உளவாளி மூலம் அந்த வைரஸை ஒரு பென் ட்ரைவ் மூலம் ஈரான் அணு ஆராய்ச்சி கூடத்தில் நிறுவப்பட்டது. வைரஸ் பாதித்ததால் அணு ஆராய்ச்சியில் தாமதம் ஏற்பட்டது.
2010-ஆம் ஆண்டு ஈரான் பொறியாளர் ஒருவர் வைரஸ் பாதித்த கணினி மூலம் இணையத்தை பயன்படுத்திய போது அது இணையத்தில் பரவத் தொடங்கியது. அந்த வைரஸ் குறிப்பிடும்படியான சேதத்தை உருவாக்கலாம் எனவும், இந்த வைரஸ் பற்றியும் இதன் நோக்கம் பற்றியும் இணைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டால் என்னவாகும் எனவும் ஒபாமா கவலைப்பட்டார். இருந்தாலும் இந்த வைரஸ் ஈரான் ஆராய்ச்சியை தொடர்ந்து தாக்கி வருவதால் அதனை தொடர்ந்தார்.
இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளை (Industrial control systems) தாக்கத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான், இந்தோனேசியா, இந்தியா ஆகியவைகள் குறிப்பிடத்தக்கவையாகும். இது ஒரு புறம் இருக்க Flame என்ற பெயரில் இன்னொரு வைரஸ் தற்போது ஈரானை தாக்கி வருகிறது. இதற்கும் அமெரிக்கா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவை பல்வேறு ஹேக்கர்கள் இணையத்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, இப்போது அரசாங்கமே இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளதால் இது போன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்கள்:
1. “Confront and Conceal: Obama’s Secret Wars and Surprising Use of American Power” – Upcoming Book
OH!MY GOD
ஸலாம் சகோ.அப்துல் பாசித்…
தமிழுலகுக்கு முற்றிலும் புதிய தகவல்கள் பகிர்ந்து உள்ளீர்கள்..! நன்றி சகோ..! மேட்டரை படித்த பின், என்னமோ வித்தியாசமா புதுசா நடக்குது என்று புரிகிறது..! ஆக மொத்தத்தில், இப்போவெல்லாம் சண்டை கூட ஹை டெக்..! என்னமோ போங்க..!
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம்!! நயவஞ்சக யுத்தம்..
சண்டை இப்படில்லாம் கூட போடலாமா 🙂
அமெரிக்கா திருந்துவதாக இல்லை.
என்ன ஒரு நக்கபிச்சைதனம் உலகத்தில் கொடுரமான முறையில் இவர்களுடைய தந்தரங்களை பயன்படுத்திகிறார்கள்.
இந்த அமெரிக்ககாரங்கள திருத்தவே முடியாதா
இந்த அமெரிக்ககாரங்கள திருத்தவே முடியாதா
so sad…!
இப்படி செஞ்சு அமேரிக்கா என்ன பேரு வாங்க போகுது?
வல்லரசுகளின் மொள்ளமாரித்தனம்!
இந்தியாவையுமா? வெரிகுட். அடேய் ‘மண்ணு மோகனு’ இதான் நீ எங்களயெல்லாம் காப்பாத்துற லட்சனமா?
அட கடவுளே !
அமெரிக்காகாரன் ஆட்டம் போடுவதற்கு அவனது இயங்குதளத்தையே பலரும் சார்ந்திருப்பதும் காரணம்!!
திறமூல இயங்குதளங்களுக்கு (OS) லினக்ஸ்க்கு மாறுங்கள்!!
லினக்ஸ் பக்கம் மாறிவிட்டால் அவர்கள் கொட்டம் அடங்கும்!