ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்

இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

1. உங்களுடைய  மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும்.
2. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.
3. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.
4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும்.  அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.
5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் “Keep Me signed in”, “Keep me logged in” என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள். 
எனக்கு தெரிந்தவற்றை மட்டும் தான் இங்கு சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதாவது இதை பற்றி தெரிந்தால் சொல்லலாம்.

22 thoughts on “ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்”

  1. Browsing Center க்கு செல்பவர்கள்,

    FireFoxஆக இருந்தால் Tools –>> StartPrivateBrowsing என்று கொடுக்கவும்.

    Chromeஆக இருந்தால் Settingsஇல் New incognito Window என்பதை கொடுக்கவும்.

    கொடுத்துப்பாருங்கள் , அது என்ன என்பது வரும் புதிய Windowல் வரும். அதை வாசித்து விட்டு தொடரவும்.

    Singout கொடுக்க மறந்தாலும் இனி கவலை பாடாமல் செல்லலாம்…

    முடிந்தவரை Inbuild Keyboardஐ உபயோகிக்கவும்…

  2. //# கவிதை வீதி # சௌந்தர் said… 1

    நல்ல அறிவுரை மற்றும் தகவல்கள்…
    நன்றி..
    //

    நன்றி நண்பா!

  3. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 4

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்.
    அவசியமான நல்ல எச்சரிக்கைகள். நன்றி.
    //

    வ அலைக்கும் ஸலாம்.
    நன்றி சகோ.

  4. //WiNnY… said… 7

    Browsing Center க்கு செல்பவர்கள்,

    FireFoxஆக இருந்தால் Tools –>> StartPrivateBrowsing என்று கொடுக்கவும்.

    Chromeஆக இருந்தால் Settingsஇல் New incognito Window என்பதை கொடுக்கவும்.

    கொடுத்துப்பாருங்கள் , அது என்ன என்பது வரும் புதிய Windowல் வரும். அதை வாசித்து விட்டு தொடரவும்.

    Singout கொடுக்க மறந்தாலும் இனி கவலை பாடாமல் செல்லலாம்…

    முடிந்தவரை Inbuild Keyboardஐ உபயோகிக்கவும்…
    //

    தகவலுக்கு நன்றி நண்பா!

  5. //மு.ஜபருல்லாஹ் said… 8

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    எச்சரிக்கைக்கும் அறிவுரைக்கும் நன்றி சகோதரா….
    //

    நன்றி சகோ.!

  6. தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது,முதல் தகவல் எனக்கு முற்றிலம் புதிது.தங்கள் பணி தொடரட்டும்