இந்திய பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் இந்தியா முகப்பு பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இவர் கருத்து சுதந்திரம், சமூக விடுதலை மற்றும் பாலின சமத்துவத்தைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதை இஸ்மத் சுக்தாய் பெற்றார். இன்று, அவர் ஒரு தேசிய பெண்ணிய சின்னமாக கருதப்படுகிறார்.