ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடாபோன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தன. அதற்கு முக்கிய காரணம் ஜியோவின் மலிவு விலைக்கட்டணங்கள் தான். தற்போது ஜியோவின் போட்டியை சமாளிக்க புதிய கட்டண விதிகளை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள்.
இதுவரை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் கார்டின் வாலிடிட்டியை தவிர்த்து உங்கள் சிம் கார்டின் வாலிடிட்டி 2030 ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது இந்த வாலிடிட்டியை நீக்கியுள்ளது ஏர்டெல், வோடாபோன்,டோகோமோ நிறுவனங்கள்.
இனி நீங்கள் ரீசார்ஜ் செய்யும் கார்டின் வாலிடிட்டி வரை தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உங்கள் மெயின் அக்கவுண்டில் பணம் இருந்தாலும் 30 நாளில் அவுட்கோயிங் கட் ஆகிவிடும். 45 நாளில் இன்கமிங் காலும் கட் ஆகிவிடும்.
இதனால் இனி நீங்கள் குறைந்தபட்ச ரீசார்ஜ் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும்.
ஏர்டெல், வோடாபோன் பயனாளர்கள் குறைந்தபட்சம் 35 ருபாய் Recharge செய்தாக வேண்டும். இதன் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஜியோவின் வருகையால் ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அதான் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
You must log in to post a comment.