இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்

ஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

கூகிள் மேப் (Google Map) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கண்முன்னே காட்டும் அதிசய தளம். இது வரை இதில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முப்பரிணாம பார்வை (3D View), தெருக்களின் பார்வை (Street View), சாட்டிலைட் பார்வை (Satellite View) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ஹெலிகாப்டர் பார்வை (Helicopter View).

ஏற்கனவே கூகிள் மேப்பில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கான வழியை காட்டும் வசதி உள்ளது. தற்போது அந்த வழியினை ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பது அல்லது பயணிப்பது போன்றும் காட்டுகிறது.

இதனை பயன்படுத்த, maps.google.com என்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு இடது புறம்    என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
பிறகு  A என்ற இடத்தில் நீங்கள் எங்கிருந்து செல்ல வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்கவும்.
B என்ற இடத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுக்கவும். பிறகு Get Direction என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
 அவ்வாறு கொடுத்தப்பின், இரண்டு இடத்திற்குமான வழியின் வரைபடத்தை காட்டும்.
இடதுபுறம் அந்த வழிகளின் முழு விவரத்தையும் காட்டும். அங்கு 3d என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும்.
அதனை க்ளிக் செய்தவுடன் நீங்கள் வானிலிருந்து  செல்வது போன்று நகரும். இது தான் ஹெலிகாப்டர் பார்வையாம். இப்படி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு, அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்யலாம்.
சரி, நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வழியில் டீ, காபி குடிக்க என்ன செய்யுறதுன்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் பிரச்சனையில்லை. அந்த வரைபடத்தில் கீழே இடதுபுறம் Play/Pause பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, டீ, காபி குடிக்க செல்லலாம். அப்படியே அந்த இடத்தில் பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் செல்லலாம்.
உதாரணத்திற்கு, சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மெரீனா கடற்கரைக்கு பயணிக்கும் வீடியோவை பாருங்கள்.


இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற தயாரா?
பிற்சேர்க்கை:
இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் இணைய உலவியில் Google Earth Plugin-ஐ நிறுவியிருக்க வேண்டும். அதனை நிறுவ இங்கே க்ளிக் செய்யவும்.

26 thoughts on “இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்”

  1. //Prabu Krishna said… 1

    நான் திங்கள் கிழமை சுத்தறேன் சகோ. ரூம்ல இணையம் கொஞ்சம் ஸ்பீட் கம்மி.//

    ……

    //Music ROFL B-)//

    ஹாஹாஹா.. நானே இன்னும் அதை கேட்கலை சகோ! கூகிள் தான் கொடுத்தது. அதுவும் Copyright இல்லாமலே..

    //ஐயா நானும் ஹெலிகாப்டர்ல போயிட்டேன். நோ மனி பட் ஐ காட் ஹனி.
    //

    நன்றி சகோ.!

  2. நான் சுத்திப்பாக்க கெளம்பிட்டேன், என்ன இணைய வேகம்தான் பத்தல,
    நல்ல விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா……

    இன்று என் வலையில் விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்
    http://vigneshms.blogspot.com/2011/09/8.html..
    வந்து கருத்துக்களை கூறுங்கள்…

  3. //stalin said… 4

    இதனை பயன்படுத்த, maps.google.com என்ற முகவரிக்கு செல்லவும்.

    நன்றி நண்பரே//

    நன்றி நண்பரே!

  4. //சேலம் தேவா said… 5

    நண்பா..எனக்கு 3D Option வரல…என்ன பண்ணணும்..?!//

    நீங்கள் என்ன இணைய உலவி பயன்படுத்துகிறீர்கள் நண்பா? எந்த Version?

  5. //அன்னு said…

    சகோ.பாஸித், அப்படியே எங்க வீட்டுக்கும் வந்துட்டு போங்க…. ஹெ ஹெ ஹே//

    முகவரி சொன்னா வரேன் சகோதரி!

    🙂 🙂 🙂

  6. //Heart Rider said… 8

    நான் சுத்திப்பாக்க கெளம்பிட்டேன், என்ன இணைய வேகம்தான் பத்தல,
    நல்ல விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா……

    இன்று என் வலையில் விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்
    http://vigneshms.blogspot.com/2011/09/8.html..
    வந்து கருத்துக்களை கூறுங்கள்…//

    நன்றி நண்பா!

    எடுத்த உடன் Pause பட்டன் அழுத்தி விடுங்கள். load ஆனா பிறகு Pause பட்டன் அழுத்துங்கள்.

  7. நண்பா… முன்பல்லாம் என் ஊரே கிளியரா தெரியாது… இப்ப என் வீடு வரை பார்க்க முடிகிறது நண்பா……… சூப்பர் நண்பா.. இருங்க காணோளி பாத்துட்டு வாரேன்

  8. //மாய உலகம் said… 17

    நண்பா… முன்பல்லாம் என் ஊரே கிளியரா தெரியாது… இப்ப என் வீடு வரை பார்க்க முடிகிறது நண்பா……… சூப்பர் நண்பா.. இருங்க காணோளி பாத்துட்டு வாரேன்//

    சரி நண்பா!

    //ஆஹா பீச்சுல கொண்டு போயி ஹெலிக்காப்டர்லயே இறக்கிவிட்டீங்களே நண்பா… சூப்பர் :-)//

    ஹிஹிஹிஹி…

    //maps.google.com இந்த தளத்திற்கும் நன்றி நண்பா… கூகுள் வாழ்க//

    நன்றி நண்பா!