இலவசமாக பதிவேற்ற Google Sites

Google Sites

நமது பதிவுகளில் ஆடியோ, பவர்பாய்ன்ட், பிடிஎஃப் போன்ற கோப்புகளை இணைக்க வேண்டுமானால் முதலில் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு தான் அதனை Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் நமது பதிவுகளில் இணைக்க முடியும்.

நமது கோப்புகளை பதிவேற்றம் செய்ய பல தளங்கள் இருந்தாலும், பெரும்பாலானவைகள் நேரடி சுட்டியை தருவதில்லை. ஒரு சில தளங்களே அவ்வசதியை தருகின்றன. நேரடி சுட்டி இருந்தால் தான் Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் அதனை பதிவுகளில் இணைக்க முடியும். இலவசமாக நமது ஃபைல்களை அப்லோட் செய்யும் வசதியை தரும் Google Sites பற்றி இங்கு பார்ப்போம். கூகிள் சைட்ஸ் பற்றி விரிவாக பார்க்க போவதில்லை. நமக்கு தேவையான பதிவேற்றம் வசதியை  பற்றி மட்டும் பார்ப்போம்.

1. முதலில் https://sites.google.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.

2. Create அல்லது Create Site என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. பிறகு வரும் பக்கத்தில் உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்து, தளத்திற்கான பெயரையும், முகவரியையும் கொடுத்து, கீழே படத்தில் உள்ள எழுத்துக்களை பெட்டியில் எழுதி Create என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

4. பிறகு வரும் பக்கத்தில், வலது புறம் மேலே New Page என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும் அல்லது கீபோர்டில் C கீயை அழுத்தவும்.

5. அங்கு Name your page என்ற இடத்தில் பக்கத்திற்கான பெயரை கொடுத்து, Select a template to use என்ற இடத்தில் File Cabinet என்பதை தேர்வு செய்யவும். Select a location என்ற இடத்தில் எதுவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். பிறகு மேலே Create என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

6. பிறகு வரும் பக்கத்தில் Add File என்பதை க்ளிக் செய்தால் pop-up விண்டோ திறக்கும். அதில் Add a file from என்ற இடத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்ய நினைக்கும் ஃபைலை கணினியிலிருந்து அல்லது வேறொரு இணையத்திலிருந்து (காப்பிரைட் ஃபைலை பயன்படுத்தக் கூடாது) தேர்ந்தெடுத்து UPLOAD என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.

7. உங்கள் கோப்பு அப்லோட் ஆகிவிடும். அதில் Download என்ற இடத்தில் கர்சரை (Cursor) வைத்து Right Click செய்து, Copy Link Location என்பதை க்ளிக் செய்யவும்.

நீங்கள் காப்பி செய்த முகவரி பின்வருவது போல இருக்கும்.

https://sites.google.com/site/bloggernanban/files/computerShortcuts.pdf?attredirects=0&d=1

இதில் .pdf என்பது வரை மட்டும் குறித்துக் கொண்டால் போதும். அதற்கு பின்னால் உள்ளவைகள் தேவையில்லை.

இதையும் படிங்க:  பிளாக்கருக்கு தேவையான Random Posts Widget

இனி கோப்புகளை நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்பது பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.

இது வரை எழுதிய பதிவுகளில் கூகிள் சைட்ஸ் பயன்படும் பதிவுகள்:

ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..

ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற

உங்கள் கருத்தை தனித்துக் காட்ட..

ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிட

நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..

ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..


பிற்சேர்க்கை:

Google Sites தளத்தில் ஒரு கணக்கு மூலம் அதிகபட்சமாக எத்தனை தளங்கள் தொடங்கலாம் என்று விதியில்லை. ஆனால் ஒரு கணக்கு மூலம் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து தளங்கள் (பக்கங்கள் அல்ல) மட்டுமே உருவாக்கலாம்.
ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 20Mb
ஒரு  தளத்தில் மொத்தக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 100Mb

41 thoughts on “இலவசமாக பதிவேற்ற Google Sites”

  1. கேள்வி கேட்டா மறக்காம
    பதில் எழுதினதோட நிக்காம
    எல்லோருக்கும் பயன்படும்படி
    பதிவாவே போட்டுடீங்களே!

    உங்களால எப்படி முடியுது?
    நன்றி தல!…
    மாஷா அல்லாஹ்!
    எல்லாப்புகழும் இறைவனுக்கே!

  2. //சம்பத்குமார் said… 6

    கூகுள் தளங்கள் பற்றிய அருமையான விளக்கத்துடன் பதிவிட்டதற்கு மிக்க நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பா!

  3. //மாய உலகம் said… 11

    அவசியமான பதிவு வாழ்த்துக்களுடன் நன்றி நண்பரே!
    //

    நன்றி நண்பரே!

  4. //சீனுவாசன்.கு said… 12

    கேள்வி கேட்டா மறக்காம
    பதில் எழுதினதோட நிக்காம
    எல்லோருக்கும் பயன்படும்படி
    பதிவாவே போட்டுடீங்களே!

    உங்களால எப்படி முடியுது?
    நன்றி தல!…
    மாஷா அல்லாஹ்!
    எல்லாப்புகழும் இறைவனுக்//

    🙂 🙂 🙂

    இந்த பதிவில் குறிப்பிட்ட பதிவுகளை எழுதும் போதெல்லாம் இதை பற்றி எழுதனும்னு நினைத்தேன். ஆனால் சோம்பல் காரணமாக எழுதவில்லை. உங்கள் மெயிலுக்கு பிறகு எழுதிவிட்டேன். நன்றி நண்பரே!

  5. //♠புதுவை சிவா♠ said… 13

    நமது வலைதளத்திற்கு நம்முடைய லோகோவுடன் கூடிய நிரலி அமைப்பது எப்படி?

    நன்றி !
    //

    <a href="http://yourblogurl.com&quot; target="_blank"><img src="http://example.com/pic.jpg"/></a&gt;

    இதில் http://yourblogurl.com என்பதற்கு பதிலாக உங்கள் தல முகவரியையும், http://example.com/pic.jpg என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியையும் கொடுக்கவும்.

  6. ஸலாம் சகோ..
    இது குறித்து நானே உங்களிடம் கேட்கலாம்,அல்லது உங்கள் தளத்தில் இருந்தால் தேடலாம் என்றிருந்தேன்..மாஷா அல்லாஹ் நீங்களே சொல்லிவிட்டீர்கள்…

    இதில் ஜிபி லிமிட் ஏதும் இருக்கா இல்லை எவ்ளோ வேண்டுமானாலும் ஏற்றலாமா??

    சொல்லுங்கள்ள்//

    அன்புடன்
    ரஜின்

  7. //ஸலாம் சகோ..
    இது குறித்து நானே உங்களிடம் கேட்கலாம்,அல்லது உங்கள் தளத்தில் இருந்தால் தேடலாம் என்றிருந்தேன்..மாஷா அல்லாஹ் நீங்களே சொல்லிவிட்டீர்கள்…

    இதில் ஜிபி லிமிட் ஏதும் இருக்கா இல்லை எவ்ளோ வேண்டுமானாலும் ஏற்றலாமா??

    சொல்லுங்கள்ள்//

    அன்புடன்
    ரஜின்//

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 20Mb

    ஒரு தளத்தில் மொத்தக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 100Mb

    தற்போது பதிவில் இதனை சேர்த்துள்ளேன்.

    நன்றி சகோ.!

  8. //jayachandran said… 37

    Nandri nanba….
    i dont know to type in tamil, thats why iam saying in english.. sorry bhai
    //

    எந்த மொழியில் சொன்னாலும் பரவாயில்லை. நன்றி நண்பா!

  9. //Namadevan. said… 38

    Very very thanks basith.To day i opened a site for uploading and downloading in google sites.It works well.Pl write further on how to upload jpg and pdf files in our blog early. Eagerly awaiting your post regarding this matter Basith.Thanks once again.//

    Thank you sir!