இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views)

ப்ளாக்கர் தளம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ப்ளாக்கை நீங்கள் விதவிதமான டிசைன்களில் பார்க்கலாம், படிக்கலாம். இதற்கு Dynamic Views என பெயரிட்டுள்ளார்கள்.


தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

1. Flip Card
2. Mosaic
3. Sidebar
4. Snapshot
5. Timeline

கீழே உள்ள படங்களை பாருங்கள்: (படங்களை பெரிதாக காண படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)

1. Flip Card View

2. Mosaic View

3. Sidebar View

  
4. Snapshot View

5.Timeline View

உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?

Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,

http://bloggernanban.blogspot.com/view

இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:

1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில் None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.


2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் “Yes” என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.

இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.

இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog

இதையும் படிங்க:  நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..

18 thoughts on “இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views)”

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    சகோ.அப்துல் பாஸித்…!
    இவ்ளோ மேட்டர் இருக்கா பிளாக்கரில்..?
    ஒருநாள் பொறுமையா உக்காந்து எல்லாத்தையும் ஒவ்வொன்னா பிரிச்சு மாட்டனும்..! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

  2. //# கவிதை வீதி # சௌந்தர் said…

    உண்மையில் நல்லாயிருக்குங்க…

    என்னுடைய பிளாக்கையும் இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்…
    இத்தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி…
    //

    நன்றி நண்பா!

  3. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said…

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    சகோ.அப்துல் பாஸித்…!
    இவ்ளோ மேட்டர் இருக்கா பிளாக்கரில்..?
    ஒருநாள் பொறுமையா உக்காந்து எல்லாத்தையும் ஒவ்வொன்னா பிரிச்சு மாட்டனும்..! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
    //
    வ அலைக்கும் ஸலாம் ..
    நன்றி சகோ.!

  4. //சிநேகிதி said…

    புதிய தகவல் தந்தமைக்கு நன்றி
    //
    //
    டைம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
    //

    நன்றி சகோதரி!