இனி இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்யலாம்

பிரபல சமூக அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராம் தற்போது வீடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தாலே போதும்.

instagram video chat

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த வாரம் தான் யூட்யூபிற்கு போட்டியாக IGTV என்னும் புதிய வீடியோ வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த அதிகபட்ச வீடியோ அளவான ஒரு நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றியது.

இந்த IGTV வசதியை இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனிலிருந்தே பயன்படுத்தலாம், அல்லது இதற்காகவே உள்ள ஆன்டிராய்ட் அல்லது ஐஓஎஸ் ஆப் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

தற்போது உங்கள் நண்பர்களுடன் வீடியோவில் பேசுவதற்கு வீடியோ கால்லிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் நான்கு நண்பர்களுடன் நீங்கள் வீடியோ சாட் செய்யலாம். மேலும் உங்கள் டைம்லைனை பார்த்துக்கொண்டே வீடியோ சாட் செய்யலாம்.

வீடியோ கால் செய்வதற்கு Direct Inbox பகுதிக்கு சென்று உங்கள் நண்பர்களின் மெஸேஜ் திறந்து பார்த்தால் வலது பக்கம் கேமரா ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோ சாட் செய்யலாம்.

தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் செய்திகளை தெரிந்துக்கொள்ள மறக்காமல் நமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்: https://www.facebook.com/bloggernanban

இதையும் படிங்க:  மீண்டும் பதில்! உங்கள் கேள்வி என்ன?