இந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு g|india

கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளை பற்றியும், இணையத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் வணிக பயனர்கள், வலை உருவாக்குநர்கள் (Web Developers) தெரிந்துக் கொள்வதற்காக அவ்வப்போது G|Days என்ற பெயரில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தும். அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கத்தை தற்போது இந்தியாவில் நடத்தப் போகிறது.

நிகழ்ச்சி  பற்றிய விவரங்கள்:

கூகுள் இந்தியா – G|india

G|Chennai – 19 / 20 July
G|Bangalore – 2 / 3 August
G|Byderabad – 13 / 14 August
G|Mumbai – 6 / 7 September
G|Delhi – 13 / 14 September

ஒவ்வொரு நகரிலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தின் முதல் நாள் வணிக பயனர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் பயன்படும் வகையில் இருக்கும். இரண்டாம் நாள் வலை உருவாக்குனர்கள்(Web Developers),  வலைத்தளம் வைத்திருப்பவர்கள், மென்பொருள் உருவாக்குனர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.

முதல் நாள் பேசப்படும் தலைப்புகள்: AdWords, AdSense, Analytics, Google Apps, Google+ University Programs, Women in Technology, and YouTube

இரண்டாம் நாள் தலைப்புகள்: Android, App Engine, Chrome Extensions, Google Apps, Google Web Toolkit (GWT), Google API’s (Maps, YouTube, Google+), HTML5 and Website Optimization

நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளுக்கு தான் நாம் விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தேடுக்கப்படுபவர்களுக்கு நிகழ்ச்சி நடக்கும் சில வாரங்களுக்கு முன் மின்னஞ்சலில் அழைப்பிதழ் அனுப்புவார்கள். கட்டணம் எதுவும் தேவையில்லை.

நீங்களும் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

கடந்த வருடம் துபாயில் நடந்த G|UAE நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள்.

இதற்கு நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எனக்கு அழைப்பிதல் வரவில்லை. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:  கூகுள் மாற்றங்களும், ரகசியங்களும்

20 thoughts on “இந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு g|india”

  1. கட்டணம் எதுவும் தேவையில்லை. //

    சரி நண்பா முயற்சிப்போம்

    Reply
  2. சூப்பர், நெறைய கத்துக்கலாம் போல இருக்கே?! அப்புறம், சோறு போடுவாங்களா? 😀

    Reply
  3. மூணாவது படத்தில ஏதையோ சாப்பிட்டுகிட்டு இருக்காங்களே தலைவா.., அதை பார்த்திட்டு மறுபடியும் இப்படி கேட்டா பாசித் பாய் என்னா பண்ணுவாரு ..,

    போட்டோவில இருக்குற எல்லாத்தையும் ஒரு தடவ உத்து பாருங்க பாஸ் எந்த மூஞ்சியாவது சோறு சாப்பிடுற மூஞ்சி மாதிரி இருக்கா, பீசா, டர்கர் ச்சே பர்கர் தான் குடுப்பாங்கன்னு நினைக்கிறேன் 😀

    Reply
  4. ஒருவேளை அழைப்பிதலை பெரிய பெரிய அப்பர் டக்கர்களுக்குத்தான் அனுப்புவார்களோ என்னவோ..?

    Reply
  5. உண்மையில் இது அருமையான தகவல் அண்ணா…அனைவர்க்கும் பயன்படும்
    முதல் நாள் பேசப்படும் தலைப்புகள்: AdWords, AdSense,
    இரண்டாம் நாள் தலைப்புகள்: Android, App Engine, Chrome Extensions
    இதில் எதை தேர்வு செய்யலாம் தங்களின் கருத்தினை சொல்லவும்…

    Reply
  6. // இதற்கு நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எனக்கு அழைப்பிதல் வரவில்லை //

    மொதல்ல இத சொல்லுங்க, நான் அந்த புகைப்படங்களில் நீங்கள் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்…

    Reply
  7. Thanks for the information Abdul Basith. I have registered also for the Chennai event on 19th July. The message said that the invitation will be sent (if selected) two weeks before the event.

    Reply
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்

    அப்துல் பாசித் ….

    எனக்கு july 12th 10:45 AM மணிக்கு … googlegdayreg@wizcraftworld.com இந்த மெயில் ID மூலம் எனக்கு INVITATION வந்துருக்கு ….

    உங்களுக்கு ஈமெயில் ID மூலம் FORWARD பண்ணிருக்கேன் … பாத்துட்டு எனக்கு ஆலோசனை சொல்லுங்க … இன்ஷா அல்லாஹ் …

    Reply

Leave a Reply