இணைய பாதுகாப்பு #2 – Personal Informations

முதல் பகுதி: இணைய பாதுகாப்பு #1 – Passwords

இணைய பாதுகாப்பில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது தனிப்பட்ட தகவல்கள் (Personal Informations). இணையத்தில் நமது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதின் மூலம் நம்முடைய ஆபத்திற்கு நாமே பாதை அமைக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இணையத்தை பொறுத்தவரை எதுவும் இலவசமில்லை என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ளவேண்டும். இலவசமாக நாம் பெறும் (கிட்டத்தட்ட) அனைத்து வசதிகளுக்கும் நாம் நம்முடைய தகவல்களை தாரைவார்க்கிறோம். மேலும் இணையத்தில் ஒருமுறை நமது தகவல்களை பதிந்துவிட்டால் மீண்டும் அதனை அழிப்பது மிகவும் கடினமாகும். அதனால் நமது தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும்.

நமது தகவலை பாதுகாக்க சில வழிகள்:

1. நீங்கள் ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவு செய்யாதீர்கள்.

2.  சில தளங்களில் இணைவதற்கு கணக்கு ஒன்று பதிவு செய்தால் தான் இணைய முடியும் அல்லது மேலதிக வசதிகளை பெற முடியும். அப்படி பதிவு செய்யும்போது சில தகல்களை கொடுத்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். அவற்றில் * என்ற குறியீடு இருக்கும். அப்படி இருக்கும் போது, அதனை மட்டும் பூர்ர்த்தி செய்யுங்கள். மேலதிக தகவல்களை கொடுக்காதீர்கள்.

3. உங்களுக்கு நம்பிக்கை இல்லாத தளங்களில் கணக்கு தொடங்கும்போது உங்களது உண்மையான தொலைபேசி எண், வீட்டு முகவரி, பின்கோட்  போன்றவற்றை கொடுக்காதீர்கள்.

4. இணையம் மூலம் பழக்கமான முன்பின் தெரியாதவர்களிடம்  உங்கள் சொந்தப் பிரச்சனைகளையும், தொடர்பு முகவரிகளையும் பகிரும் போது கவனம் தேவை.

5. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தேவையில்லாத அப்ளிகேசன்ஸ் மற்றும் விளையாட்டுக்களை பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்துவதால் பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் விவரங்கள அனைத்தையும் அவர்களுக்கு தெரிவிக்கிறீர்கள்.

 6. சில நேரங்களில் உங்கள் நண்பர்களிடமிருந்து சுட்டியுடன் கூடிய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் அந்த மின்னஞ்சல்களை உண்மையிலேயே உங்கள் நண்பர் அனுப்பியிருக்க மாட்டார். அவர் பயன்படுத்தும் மென்பொருள்கள் ஏதாவது அனுப்பியிருக்கும். அவைகள் எரித (Spam) மின்னஞ்சல்கள் ஆகும். அதனை உடனே அழித்துவிடுங்கள்.

7. சமூக வலைப்பின்னல் தளங்களில்  நமது தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது முடிந்தவரை பொதுவில் பகிராமல் நண்பர்களுக்கு மட்டும் பகிரவும்.

8. சமூக வலைப்பின்னல் தளங்களில் உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களை நண்பர்களாக இணைக்க வேண்டாம்.

நம்முடைய தகவல்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:

1. இணையதளங்களில் சேரும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை கொடுப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் நம்முடைய தகவல்களை அவர்கள் பல நிறுவனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு விற்றுவிடுகிரார்கள். இதன் மூலம் அந்த  நிறுவனங்கள் நமது மின்னஞ்சல்கள், தொலைப்பேசிகள் மூலம் அவர்களின் பொருட்களை விற்பதற்கு தொல்லை தருவார்கள். உங்கள் எரித (spam) மின்னஞ்சல்களை பார்த்தாலே தெரியும். எனக்கு வரும் எரித மின்னஞ்சல்களில் சிலவற்றுக்கு காரணம், வேலைவாய்ப்பு தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ப்ளாக் தொடர்பான சில ஆங்கில தளங்களிலும் என்னுடைய மின்னஞ்சல்களை பகிர்ந்தது.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-13]

2. உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பொதுவில் பகிர்வதால் உங்களுக்கு தேவையில்லாத தொல்லைகளும், பிரச்சனைகளும் வரலாம். இவைகள் பல குற்றங்களுக்கு காரணமாக அமையலாம்.

இப்படி இன்னும் நிறைய உள்ளது. சில காரணங்களால் விரிவாக எழுத முடியவில்லை. அதனால் நமது பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது எம்பதை உணர்ந்து, நமது தனிப்பட்ட தகவல்களில் கவனமாக இருப்போம்.

1st Image Credit: http://www.gearfuse.com/
2nd Image Credit: www.tumblr.com/

17 thoughts on “இணைய பாதுகாப்பு #2 – Personal Informations”

 1. பலர் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை பட்ட பிறகு அலறுகிறார்கள், பயனுள்ள பதிவு.. பதிவுலக தமிழ்மண களேபரத்தில் வெளியிட்டு விட்டீர்கள் ஒருநாள் கழித்து வெளியிட்டு இருக்கலாம்

 2. //Heart Rider said… 1

  பலர் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை பட்ட பிறகு அலறுகிறார்கள், பயனுள்ள பதிவு.. //

  நன்றி நண்பா!

  //பதிவுலக தமிழ்மண களேபரத்தில் வெளியிட்டு விட்டீர்கள் ஒருநாள் கழித்து வெளியிட்டு இருக்கலாம்//

  இல்லை நண்பா. தமிழ்மணத்தின் விளக்கத்திற்கு பின் நான் இந்த பிரச்சனையை விட்டுவிட்டேன். கடந்த பதிவில் இதனை சொல்லியுள்ளேன். மேலும் இதனை பெரிதாக்க விரும்பவில்லை.

 3. சில நேரங்களில் உங்கள் நண்பர்களிடமிருந்து சுட்டியுடன் கூடிய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் அந்த மின்னஞ்சல்களை உண்மையிலேயே உங்கள் நண்பர் அனுப்பியிருக்க மாட்டார். அவர் பயன்படுத்தும் மென்பொருள்கள் ஏதாவது அனுப்பியிருக்கும். அவைகள் எரித (Spam) மின்னஞ்சல்கள் ஆகும். அதனை உடனே அழித்துவிடுங்கள்.//

  இப்போது தான் புரிகிறது நண்பா …

  நன்றி சகோ …..

 4. ""இல்லை நண்பா. தமிழ்மணத்தின் விளக்கத்திற்கு பின் நான் இந்த பிரச்சனையை விட்டுவிட்டேன். கடந்த பதிவில் இதனை சொல்லியுள்ளேன். மேலும் இதனை பெரிதாக்க விரும்பவில்லை""

  பிறர் செய்த தவறை மன்னிப்பது நல்ல மனசு அதையே நீங்கள் மறக்க நினைப்பது உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு

  வாழ்த்துகள் நண்பா

 5. உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பொதுவில் பகிர்வதால் உங்களுக்கு தேவையில்லாத தொல்லைகளும், பிரச்சனைகளும் வரலாம். இவைகள் பல குற்றங்களுக்கு காரணமாக அமையலாம்.//

  மிகவும் உண்மை நண்பா!

 6. அவசிய பகிர்வு நண்பரே!…. முக்கியமாக பதிவுலகில் இருப்பவர்கள் கவனிக்க பட வேண்டிய பதிவு… மிக்க நன்றி நண்பரே!

 7. //Prabu Krishna said… 3

  நல்ல வேளை நான் சில தளங்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் தவிர்த்து வருகிறேன்.

  நன்றி சகோ.//

  நன்றி சகோ.!

 8. //stalin said… 4

  சில நேரங்களில் உங்கள் நண்பர்களிடமிருந்து சுட்டியுடன் கூடிய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் அந்த மின்னஞ்சல்களை உண்மையிலேயே உங்கள் நண்பர் அனுப்பியிருக்க மாட்டார். அவர் பயன்படுத்தும் மென்பொருள்கள் ஏதாவது அனுப்பியிருக்கும். அவைகள் எரித (Spam) மின்னஞ்சல்கள் ஆகும். அதனை உடனே அழித்துவிடுங்கள்.//

  இப்போது தான் புரிகிறது நண்பா …

  நன்றி சகோ ….//

  நன்றி சகோ.!

 9. //ஆமினா said… 7

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நல்ல பகிர்வு சகோ

  வாழ்த்துக்கள்
  //

  வ அலைக்கும் ஸலாம்

  நன்றி சகோ.!

 10. //♠புதுவை சிவா♠ said… 8

  ""இல்லை நண்பா. தமிழ்மணத்தின் விளக்கத்திற்கு பின் நான் இந்த பிரச்சனையை விட்டுவிட்டேன். கடந்த பதிவில் இதனை சொல்லியுள்ளேன். மேலும் இதனை பெரிதாக்க விரும்பவில்லை""

  பிறர் செய்த தவறை மன்னிப்பது நல்ல மனசு அதையே நீங்கள் மறக்க நினைப்பது உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு

  வாழ்த்துகள் நண்பா//

  நன்றி நண்பா!

 11. //மாய உலகம் said… 9

  அவசிய பகிர்வு நண்பரே!…. முக்கியமாக பதிவுலகில் இருப்பவர்கள் கவனிக்க பட வேண்டிய பதிவு… மிக்க நன்றி நண்பரே!//

  //உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பொதுவில் பகிர்வதால் உங்களுக்கு தேவையில்லாத தொல்லைகளும், பிரச்சனைகளும் வரலாம். இவைகள் பல குற்றங்களுக்கு காரணமாக அமையலாம்.//

  மிகவும் உண்மை நண்பா!//

  நன்றி நண்பா!