ஆப்பிள் iOS 6 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது iOS இயங்குதளத்தின் ஆறாவது பதிப்பின் அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய பதிப்பு வரும் செப்டம்பர் மாதம் பயனாளர்களுக்கு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் ஐபோனின் அடுத்த பதிப்பாக iPhone 5 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. iOS ஆறாம் பதிப்பின் சிறப்பம்சங்கள் பற்றி சகோ. சின்னமலை அவர்கள் எழுதியுள்ளதை இங்கே பார்ப்போம்.

 MAPS:-

 இது கூகிளுக்கு எதிராகவே ஆப்பிள் சொந்தமாய் மாப்ஸ் ஆரம்பித்து
உள்ளான். இது கூகிள்க்கு ஆரம்பத்தில் ஒரு ஆப்பாய் இருந்தாலும் OFFLINE MAP விட்டு பின்னிடான். யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும். அதை கேள்வி பட்டதில் இருந்து ஆப்பிள் மாப்ஸ் வசதியை ரொம்ப மேம்படுத்தி உள்ளார்களாம். FLYOVER ன்னு ஆகாயத்தில் இருந்து தொங்கிகிட்டு பார்க்கும் வசதி, ஒவ்வொரு TURNING POINTகும் TURNING NAVIGATION CURSOR வசதியோடு 3D வசதி உண்டு. 3Dயில் பார்க்க ரொம்பவே சூப்பர் இருக்கு. TRAFFIC நிலைமையை உடனுக்குடன்
அறிவிக்கும், நாம போகும் நேரத்தை குறைக்க டிராபிக் இருந்து வேறு எந்த
பாதையில் செல்ல என்பதையும் UPDATE செய்யும் வசதி. விபத்து, வேலை (சீரமைப்பு பணி) நடைபெற்றால் அதன் விவரத்தையும் அளிக்கும்.

SIRI:-

கூகிள் இப்ப ஜெல்லி பீனில் இந்த வசதியை கொண்டு வந்து விட்டனர் (ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்த வசதி உள்ளது). IOS6ல் இருந்து SIRI VOICE
அதிகபடியான மொழிகள்,மற்றும் நாடுகளில் செயல்படும் படி உருவாக்கபட்டு
உள்ளது. இதில் உள்ள சில வசதிகள்,

SPORT – நமக்கு பிடித்த விளையாடினை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதில் பெறலாம். அந்த டீம் உள்ள PLAYER NAME, SCORE ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.

MOVIES – நமக்கு எந்த படத்தை பற்றி விவரம் தேவையோ அதை பற்றி தேடாமலேயே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.அந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ், ட்ரைலர், ROTTEN TOMATOES RATING AND REVIEW தெரிந்துக் கொள்ளலாம்.

RESTAURANTS – நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள RESTAURANTS LOCATION, எத்தனை வகையான சாப்பாட்டு உள்ளது, விலை, அந்த சாப்பாட்டு IMAGE வரை காட்டும். அப்படியே அங்க ஒரு TABLE கூட புக் செய்து கொள்ளலாம்.

FACEBOOK :- 

IOS6ல் FACEBOOK AND TWITTER APPLICATION ஒரு சில வசதியோடு தருகின்றனர். நம்ம மொபைல் உள்ள போட்டோ அல்லது கேமராவில் பிடித்த போட்டோவை அப்படியே FACEBOOK AND TWITTERல் SHARE செய்து கொள்ளலாம் SIRI VOICE மூலம் நம்முடைய STATUS UPDATE செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ஒரு பதிவு ஒன்பது பலன்கள்

PHOTO STREAM:-

நம்ம மொபைல் உள்ள போட்டோவை இணையத்தில் பகிரும் வசதி. அப்படியே போட்டோவை ICLOUDல் SHARE செய்து கொண்டு ஆப்பிள் டிவியில்
போட்டோ STREAMஆக காணலாம். மற்றவர்கள் அந்த இமேஜ்ல் கமெண்ட் மற்றும் லைக் செய்யலாம்.

PASSBOOK:-

AIR TICKET, GIFT CARD, MOVIE TICKET என பெற்று கொள்ளும் வசதி இதில் உள்ளது. (அதுக்கு இதில் பணம் இருக்கனும்).

FACETIME:-

வீடியோ காலிங் வசதி தற்போது 3G மூலமாகவும் பயன்படுத்தலாம்.

PHONE CALLING:-

முக்கியமான வேலையில் இருக்கும் பொது ஏதாவது கால் வந்தால்
அதை கட் செய்யாமல் தடுக்கும் வசதி உள்ளது. கால் வரும்போதே அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப, REMINDER செட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க DO NOT DISTURB வசதி (போன்க்கு மட்டும் தான்).

SAFARI:-

ICLOUD TAB என ஒரு வசதி தந்து உள்ளனர் அதில் நாம் செல்லும் இணைய
பக்கத்தினை TRACK செய்து கொள்ளும் பின்னர் OFFLINEல் அந்த பக்கத்தினை
படித்து கொள்ளலாம்.

சின்னமலை
About the Guest Author:
அஜித் ரசிகரான சகோ. சின்னமலை அவர்கள் தல போல வருமா? என்னும் தளத்தில் தொழில்நுட்பம் பற்றியும், சினிமா பற்றியும் குழந்தைத்தனமான பேச்சு நடையில் எழுதி வருகிறார். மேலும் Tamilan Tablet என்னும் ஆங்கில தளத்திலும் எழுதி வருகிறார். (படத்தில் இருப்பது அவர் அல்ல)

நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும். 

22 thoughts on “ஆப்பிள் iOS 6 சிறப்பம்சங்கள்”

  1. வாழ்த்துக்கள் சின்ன மலை!

    //குழந்தைத்தனமான பேச்சு நடையில்//
    ஹி ஹி ஹி 😉

    //படத்தில் இருப்பது அவர் அல்ல//
    ஹா ஹா ஹா! 😀

  2. நல்ல பதிவு.

    //படத்தில் இருப்பது அவர் அல்ல//

    படத்துல பெரிய மலையா இருக்கும் போதே தெரிஞ்சது 😉

  3. ஆப்பிள் மேப்ஸ் கூகுளை விட சிறப்பாக இருக்கும் என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது. பல வருடங்கள் விடாமுயற்சியில் துளித்துளியாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தெருத்தெருவாக கமராவுடன் சைக்கிள், வேன் அனுப்பி திரட்டிய தகவலுடன் உருவாக்கப்பட்ட கூகுள் மேப்ஸ் எங்கே, வெறும் வீம்புக்கு கூகுளுடன் கோபித்துக்கொண்டு வெந்தும் வேகாமலும் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மேப்ஸ் எங்கே? இந்த லிங்க் பாருங்கள்:

    http://gizmodo.com/5918176/google-maps-vs-apple-maps-a-side-by-side-comparison

  4. அண்ணா எழுத வாய்ப்பு தந்த உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்…ரொம்ப நன்றி அண்ணா…தமிழ்மணம் டாப் இருபது லிஸ்டில் உங்களுக்கு கிழே நானும் வந்துட்டேன்…குருவுக்கு கிழே தான் எப்பவும் சிஷ்யன்…

  5. நண்பா யார் ஆப்பிள் மேப்ஸ் கூகிள் விட சிறப்பு சொன்னது அவர்கள் இது போல வசதி வைத்து உள்ளார்கள் என தான் உள்ளது…எப்பவும் கூகிள் மேப்ஸ் தான் சிறந்தது….நீங்கள் குடுத்த லிங்க் பார்த்தேன் நன்றாகவே உள்ளது…..கூகிள் பரம ரசிகன் போல இப்படி டென்ஷன் ஆகிடீங்க….

  6. // குழந்தைத்தனமான பேச்சு நடையில் எழுதி வருகிறார்.// உண்மை உண்மை உண்மை

    //மேலும் Tamilan Tablet என்னும் ஆங்கில தளத்திலும் எழுதி வருகிறார். // பாஸ் சொல்லவே இல்ல… அவ்ளோ பெரிய அப்படக்கரா நீங்க …

    வாழ்த்துக்கள் நண்பா… உங்களுக்கும் வாய்ப்பு கொடுத்த பிளாக்கர் நண்பனுக்கும்

  7. என்ன குழந்தை என்றே முடிவு பண்ணிடிங்க….அய்யோ நான் எல்லாம் ஆங்கில தளம் எல்லாம் எழுதவே இல்லை நண்பா அதை பார்த்தல் சிரிப்பிர்கள்…