ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்

ஆப்பிள் – இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பழத்தை விட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். என்ன தான் ஆன்ட்ராய்ட் முன்னேறி வந்தாலும் இன்னும் முடிசூடா மன்னனாகவே இருக்கிறது. அந்த ஆப்பிளுக்கும் AntiSec ஹேக்கர்ஸ் எனப்படும் இணையக் கொள்ளையர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.

ஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் கணக்கு (Apple ID) கொடுக்கப்படும். இந்த கணக்கை வைத்து தான் மியூசிக் (iTunes), அப்ளிகேசன் மற்றும் கேம்கள் (App Store), மின்னனு புத்தகங்கள் (iBookstore) ஆகியவற்றை வாங்கி பதிவிறக்கம் செய்ய முடியும்.

தற்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (பன்னிரண்டு லட்சம்) ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை AntiSec என்னும் ஹேக்கர் குழுமம் திருடி இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க எஃப்.பி.ஐ (FBI) அதிகாரி ஒருவரின் மடிக்கணினியை AntiSec குழுவினர் ஹேக் செய்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் ஆப்பிள் பயனாளர்களின் முழுப்பெயர், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் ஒரு போல்டரில் இருந்தது.

ஆனால் எஃப்.பி.ஐ (FBI) இதனை மறுத்துள்ளது. திருடப்பட்ட கணக்குகள் FBI அதிகாரியின் கணினியில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளது.

நீங்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தினால் கடவுச்சொற்களை உடனே மாற்றுங்கள்.

அந்த கணக்குகள் எஃப்.பி.ஐ அதிகாரி கணினியில் இருந்து திருடப்பட்டது என்றால், அவர்கள் ஏன் ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை வைத்திருக்க வேண்டும்?

இல்லையென்றால், வேறு எங்கிருந்து திருடப்பட்டது?

இதையும் படிங்க:  ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?

24 thoughts on “ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்”

 1. அஸ்ஸலாமு அலைக்கும், சகோ.அப்துல் பாஸித். "ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த…" —–தலைப்பில்… ஏதோ… வில்லன் ஆப்பிள் போலவும்… சரியான செயலை செய்த ஹீரோ ஆண்டிசெக் போலவும் காட்டி உள்ளீர்கள்..! ஆப்பிள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எதிரியான கதையை அடுத்த பதிவா போடுவீங்களா சகோ..?

 2. நோக்கம் ஆப்பிள் பயனாளர்களை காப்பது என்றால்… "ஆப்பிள் பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!" என்று போட்டிருக்கலாம்.

  இல்லை…

  நோக்கம் ஆண்டிசெக்கின் மென்பொருள் அறிவை சிலாகிப்பது என்றால்… "கண்டிக்கத்தக்க வன்செயல் மூலம் ஆப்பிளை மிஞ்சிக்காட்டிய ஆண்டிசெக்" என்று கூட போட்டிருக்கலாம்.

 3. வ அலைக்கும் ஸலாம் சகோ.!

  நான் ஆன்ட்ராய்ட் பக்கம் இருப்பதால் "ஆப்பிளுக்கே ஆப்பு" என்று தலைப்பு வைத்தேன்.

  பயனாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் கடவுச்சொல்லை மாற்ற பதிவில் சொல்லியுள்ளேன்.

  🙂 🙂 🙂

 4. நண்பரே! மீள்பதிவிடுவதை பற்றி கேட்டிருந்தேனே.. ஆப்பிள் பயனார்கள் மட்டுமல்ல,வேறு எந்த பயனார்களாக இருந்தாலும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது நல்லது என்று முன்ஜாக்கிரதை முத்தன்ணா சொல்லியிருக்கிறாறாம். 🙂

 5. Post Edit சென்று வலதுபுறம் Published on என்று இருக்கும். அதில் Set date and time என்பதை தேர்வு செய்து இன்றைய தேதி & நேரத்தைக் கொடுத்து Save செய்ய வேண்டும்.

 6. மிக்க நன்றி நண்பா…
  இது எனக்கு மிகவும் தேவைப்படுகின்ற ஒன்று, உங்கள் மூலம் இன்று அறிந்து கொண்டேன்.
  என்றும் அன்புடன்
  தமிழ்நேசன்.

 7. வேறெந்த போன்களிலும் இல்லாத பெட்டர் க்குவாலிட்டி ஆப்பிளில் "டச்" ஸ்கிரீன் தான் fabulous… ஆல்சோ பிக்சர்ஸ் க்குவாலிட்டி (நான் உணர்ந்த வகையில்)

  இப்பிடிபட்ட ஆப்பிளை ஆட்டையை போட்டவர்களை கண்டித்து எனது வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்…. அங்ங்ங்! 🙂

 8. ///அண்ணே நீங்க ஆப்பிள் வச்சுரீகிங்களா..///—–குற்றவாளிகளை கண்டிக்க நடுநிலையோடு நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும் சகோ.உழவன் ராஜா. பாதிக்கக்கப்பட்டவராக இருக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, ஆண்டி செக்கிருக்கு எனது வன்மையான கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

  ஒருவேளை… நாளை இந்த ஆண்டிசெக் ஆண்ட்ராய்டுக்கும் கூட "ஆப்பு" வைக்கலாம்..! அப்போதும் இங்கே வந்து… "குற்றவாளி ஆண்டிசெக்கிற்கு எனது கண்டனம்" என்ற பிளாக்கர் நண்பனின் சோக பதிவில் எனது கண்டனத்தையும் இறைநாடினால் அவசியம் பதிவேன்.

 9. இன்லிடி திரட்டி மீண்டும் வேலை செய்யவில்லை தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது ஆகையால் உடனே நீக்கவும்

 10. //
  குற்றவாளிகளை கண்டிக்க நடுநிலையோடு நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும் சகோ.உழவன் ராஜா. பாதிக்கக்கப்பட்டவராக இருக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன்.
  //

  i liked this comment!

 11. ஆப்பிளுக்கே ஆப்பா …??!! நம்பவேமுடியல..ஆங்.
  எப்பவும் என் ஓட்டு ஆன்ரைடுக்கே (சாம்சங்)

 12. இது போல ஏதாவது நடந்துடுமோ என்று தாங்க நான் ஆப்பிளே வாங்குனதில்லை.
  நமக்கு என்னிக்கும் மா, பலா, வாழை, அன்னாசி, அப்புறம் நிறைய சப்போ(ர்)ட்டா இருக்கே!

 13. \ஒருவேளை… நாளை இந்த ஆண்டிசெக் ஆண்ட்ராய்டுக்கும் கூட "ஆப்பு" வைக்கலாம்..! \

  ஆண்ட்ராய்டு திறமூலமாய் (Open Source) இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை!