ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் – Android 4.1 Jelly Bean

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் ஆன்ட்ராய்ட் பற்றிய அறிமுகத்தையும், இதுவரை வெளிவந்த பதிப்புகளின் பெயரையும் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் பதிப்புகளுக்கு உணவின் பெயரை வைக்கும் கூகுள் தற்போது ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பாக ஜெல்லி பீன் (Android 4.1 – Jelly Bean)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Android 4.1 Jelly Bean (ஜெல்லி பீன்):

ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் பெரிய அளவில் புதுப்பித்தல் இல்லையென்றாலும் பல புதிய வசதிகளுடனும், புதிய வேகத்திறனுடனும் அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் முதல் டேப்லட் Nexus 7-ல் முதன் முதலாக ஜெல்லி பீனை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் மத்தியில் Nexus 7-னுடன் சேர்த்து Samsung Galaxy Nexus, Nexus S மொபைல்கள் மற்றும் Motorola Xoom டேப்லட்டில் ஜெல்லி பீன் வெளியாகிறது. மற்ற ஆன்ட்ராய்ட் சாதனங்களில் வெளிவர தாமதமாகலாம்.

ஜெல்லி பீன் சிறப்பம்சங்கள்:
Google Now:

Google Now என்பது சரியான தகவலை சரியான நேரத்தில் கொடுக்கும் வசதி. வானிலை நிலவரம், விமானத்தின் நிலை, உங்களுக்கு பிடித்த விளையாட்டு அணியின் ஸ்கோர் நீங்கள் நின்றுக் கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பஸ் எப்போது வரும் போன்ற நிலவரங்கள் தானாக அப்டேட் செய்யப்படும். Search Box-ல் தொடுவது மூலம் அல்லது திரையில் கீழிருந்து மேலே தள்ளுவது மூலம் இந்த தகவல்களை பார்த்துக் கொள்ளலாம். இந்த தகவல்கள் நீங்கள் இருக்கும் இடம் மற்றும் நீங்கள் தேடியவைகளைக் கொண்டு புதுப்பிக்கப்படும்.


Fast & smooth:

இதுவரை வந்த ஆன்ட்ராய்ட் பதிப்புகளை விட வேகமான திறனுடனும், மென்மையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது ஜெல்லி பீன்.

Resizable Widgets:

ஆண்ட்ராய்ட் முகப்பு திரையில் முன்பு அளவை பொறுத்து சில widget-களை மட்டும் தான் வைக்க முடியும். தற்போது Widget-களை நமக்கு விருப்பமான அளவில் மாற்றிக் கொள்ளலாம். இதனால் அதிகமான widget-களை முகப்பு திரையில் வைத்திருக்க முடியும்.

 Improved Notifications:

Notification பகுதி தற்போது மெருகூட்டப்பட்டுள்ளது. அதில் புகைப்படமும் வரும். மின்னஞ்சல்கள் வந்தால் subject-ல் உள்ளவற்றையும் காட்டும்.

Smarter Keyboard:

ஆன்ட்ராய்ட் டிக்சனரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று கணித்து சொல்லும்.

Android Beam:

முந்தைய பதிப்பான ஐஸ்க்ரீம் சாண்ட்விச்சில் அறிமுகம் செய்த NFC (Near-Field Communication) தொழில்நுட்பத்தை  மேம்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ப்ளூடூத் போன்றதாகும். இரண்டு ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கு இடையே புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாறிக்கொள்வதற்கு பயன்படுகிறது. இரண்டு மொபைல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து புகைப்படங்கள், வீடியோக்களை தொடுவதன் மூலம் அனுப்பலாம்.

இதையும் படிங்க:  ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா?

மேலும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெல்லி பீனில் இருந்து ஆன்ட்ராய்ட் மொபைல்களில் Flash வேலை செய்யாது. அதற்கு பதிலாக HTML5 பயன்படுத்தப்படுகிறது.

ஜெல்லி பீன் பற்றி மேலோட்டமாகவே எழுதியுள்ளேன். முழுமையான வசதிகளை பார்க்க கீழுள்ள வீடியோவை பாருங்கள்.

11 thoughts on “ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் – Android 4.1 Jelly Bean”

  1. ஜெல்லி பீன் பார்க்கவே அழகாய் உள்ளது இதில் ofline map வசதி உள்ளதாய்கேள்விபட்டேனே…இது பெரிய அளவில் ஹிட் ஆகும்…

  2. நல்லா இருக்கும் போல இருக்கே….

    எங்க ஊரில் இருந்து பக்கத்து ஊருக்கு எத்தனை மணிக்கு பஸ் என்று காட்டினால் நல்லாத் தான் இருக்கும்.. காட்டுங்களா?