ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்

நீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை மொபைலில் நிறுவுவது பற்றி அறிந்திருப்பீர்கள். கணினி மூலம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவும் வசதியையும் கூகுள் தந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.

கூகுள் ப்ளே மூலம் அப்ளிகேசன்களை நிறுவுதல்:

உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் எந்த கூகுள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறீர்களோ? அந்த மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு கூகுள் ப்ளே தளத்தில் (https://play.google.com/) உள்நுழையுங்கள். உங்களுக்கு விருப்பமான அப்ளிகேசன் அல்லது கேம் பக்கத்திற்கு சென்றால் கீழே உள்ளது போல இருக்கும்.

உங்கள் மொபைலுக்கு அந்த அப்ளிகேசன் அல்லது கேம் ஏற்றதா? என்று சொல்லும். ஏற்றதாக இருந்தால் INSTALL பட்டனை அழுத்துங்கள்.

பிறகு அப்ளிகேசன் விலை, கொள்ளளவு, அனுமதிகள் (Permissions) போன்ற  தகவல்களை காட்டும். பார்த்த பிறகு INSTALL என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அந்த அப்ளிகேசன் விரைவில் உங்கள் மொபைலில் நிறுவப்படும் என்று சொல்லும். பிறகு OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! பிறகு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அந்த அப்ளிகேசன் உங்கள் மொபைலில் தானாக நிறுவப்படும்.

கூகுள் நிறுவனம் ஜெல்லி பீன் என்னும் புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்ட போது Google Play தளத்தையும் மாற்றம் செய்துள்ளது. அதில் ஒன்றாக கூகுள் ப்ளே தளத்தில் இருந்து அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை நீக்கும் வசதியை தந்துள்ளது. இறைவன் நாடினால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  Instagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்

12 thoughts on “ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்”

  1. கூகிள் பல வசதி தந்துகொண்டு உள்ளான் ஆப்பிள் என்ன பண்ணுறாங்க…இந்த வசதியில் இரண்டிலும் இணைய இணைப்பு தேவை அதனால் மொபைல் மட்டும் பயன்படுத்தலாம்….இது அனைத்து ஆன்ட்ராய் வேர்சியன்க்கும் பொருந்தும் தானே…..

  2. ஆன்ட்ராய் ஆகிய நான் அப்படியே ஆப்பிள் கவ்வி சாப்பிட்டு விடுவேன்…எனக்கு முன்னடி ஆப்பிள் சும்மா என சொல்லுது…

  3. மனிதனைப்போல் அப்பிளை உண்ணும் இயந்திரமனிதனை பார்த்ததும் நியத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும்?

  4. நான் ஆன்ட்ராய்ட் பயன்பாட்டுக்கு புதுசு. சில சந்தேகங்கள்:

    1. நீங்கள் சொன்ன வழியில் இன்ஸ்டால் செய்யும்போது போன் சர்வீஸின் பாண்ட்வித் வீணாவதால் APK Downloader எனும் chrome extension ஐ பயன்படுத்தி APK பைல்களை கணினியில் இறக்கி போனில் இன்ஸ்டால் செய்திருக்கிறேன். இருந்தும் எனது போன் கூகுள் அக்கவுன்ட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இப்போது நான் போனில் இணையத்துடன் தொடர்பு கொண்டால் போனில் இருக்கும் apps தானாகவே google play account உடன் sync ஆகி, google playயில் காட்டப்படுமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரச்சனை வருமா?

    2. Android rooting என்றால் iPhone jailbreak போலவா? அதாவது, பொதவாக பயன்படுத்த முடியாத வசதிகளை hack செய்து பயன்படுத்துவதா? இதன் நாமாக செய்வது எப்படி? eஎனது HTC Desireஇல் NAND lock என்று இருப்பதை எடுப்பது எப்படி?