கிட்காட் – ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய புதிய தகவல்களை இங்கே பார்ப்போம். கிட்காட் பதிப்பு வெளியாகும்வரை புதிய தகவல்கள் இந்த பதிவில் புதுப்பிக்கப்படும்.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்
ஆண்ட்ராய்ட் பதிப்புகளின் பெயர்கள் இனிப்பின் பெயர்களாகவும், ஆங்கில எழுத்துக்களின் (Alphabets) வரிசைப்படியும் அமைந்திருக்கும்.
- Android 1.5 Cupcake
- Android 1.6 Donut
- Android 2.0 Eclair
- Android 2.2 Froyo
- Android 2.3 Gingerbread
- Android 3.0 Honeycomb
- Android 4.0 Ice Cream Sandwich
- Android 4.1 Jelly Bean
ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பை பிரபலப்படுத்த முதல்கட்டமாக கிட் காட் சாக்லேட்டின் தயாரிப்பாளரான நெஸ்ட்லே நிறுவனத்துடன் இணைந்து போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் படத்துடன்கூடிய கிட் காட் சாக்லேட்டில் பிரத்யேக எண்கள் இருக்கும். அதனை
www.android.com/kitkat என்ற முகவரிக்கு சென்று உங்கள் விவரத்துடன் கொடுத்தால் புதிய நெக்ஸஸ் டேப்லட் பரிசாக பெறும் வாய்ப்பை பெறலாம்.
ஜெல்லி பீன் தோற்றத்திலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளதாக இணையத்தில் பரவும் சில புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் android.com தளத்தில் “It’s our goal with Android KitKat to make an amazing Android experience available for everybody.“ என்று தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் குறைந்தபட்சம் 512 MB Ram கொண்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இதை பயன்படுத்தலாம் என நம்பப்படுகின்றது. இதுமட்டும் உண்மையானால் நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக அமையும்.
புதிய தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்….!
புதிய தகவலுக்கு நன்றி நண்பா
தொழில்நுட்ப தகவல் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா !!!
தெரிந்து கொண்டேன் பிறர்க்கும் தெரிவிப்பேன்
அருமை..அருமை,
This comment has been removed by a blog administrator.
Sorry sir! By mistake i touched remove content on my mobile… 🙁
Thanks brother
Thanks brother
its ok basith.don't feel otherwise. Thanks
I Created a blog with a help of you intruction.thank you.I am studied in class 8th.fast cricket news available in my site http://www.indiancricketics.blogspot.com
http://indiancricketics.blogspot.in/ come to this site
சுவாரஸ்யமான தகவல். அப்படின்னா அடுத்த அப்டேட் 'L' எழுத்துல வரும். Lollypop ஆ இருக்குமோ?
Read your post and left a comment.