ஆட்சென்ஸில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் கிடைத்தது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இன்று ஆட்சென்ஸ் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம்.

அதற்கு முன்பு ஆட்சென்ஸ் தொடர்பான சில வார்த்தைகளை நீங்கள் தெரிந்துக் கொள்வது அவசியம்.

Estimated Gross Revenue – நீங்கள் ஈட்டிய வருமானம்
Page Views – விளம்பரம் உள்ள பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது
Impressions – எத்தனை விளம்பரங்கள் பார்க்கப்பட்டுள்ளது
Clicks – எத்தனை முறை விளம்பரங்கள் க்ளிக் செய்யப்பட்டுள்ளது
Page CTR – சராசரியாக உங்கள் பக்கத்தில் க்ளிக் செய்யப்படும் விகிதம்
Cost Per Click (CPC) – ஒரு க்ளிக்கிற்கு கிடைக்கும் வருமானம்
Page RPM – ஆயிரம் பார்வைகளுக்கு கிடைக்கும் சராசரி வருமானம்

இது போல மேலும் பல இருக்கின்றன, அவைகளை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

விளம்பரங்கள் க்ளிக் செய்யப்பட்டால் மட்டுமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும். யாருமே நம் தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்யவில்லை என்றால் நமக்கு வருமானமும் இல்லை.

மேலே உள்ள படம் ஆட்சென்ஸ் டாஷ்போர்டில் உள்ள ரிப்போர்ட் ஆகும்.

விளம்பரம் உள்ள பக்கம் 565 முறை பார்க்கப்பட்டுள்ளது. (Page Views)

இதில் 975 விளம்பரங்கள் பார்க்கப்பட்டுள்ளது. (Ad Impressions)

சராசரியாக 1.35 சதவீதம் பேர் விளம்பரங்களை க்ளிக் செய்துள்ளனர். (CTR)

ஒரு க்ளிக்கிற்கு கிடைத்த தொகை 0.08$ (Cost Per Click)

14 விளம்பரங்கள் க்ளிக் செய்யப்பட்டுள்ளது. (Clicks)

இதன் மூலம் கிடைத்த பணம் = 1.17$

மேலே சொன்ன வார்த்தைகளில் Cost Per Click (CPC) மிகவும் முக்கியமாகும்.
ஒரு விளம்பர க்ளிக்கிற்கு நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதாகும்.

இந்த Cost Per Click தொகை, க்ளிக் செய்யப்படும் விளம்பரத்திற்கு விளம்பரதாரர் கொடுக்கும் கட்டணத்தைப் பொறுத்து வேறுபடும்.

இந்தியாவில்
விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களைவிட, அமெரிக்காவில் விளம்பரம் செய்யும்
விளம்பரதாரர்கள் அதிக கட்டணம் செலுத்துகின்றனர். அதனால் உங்கள் தளத்தில்
உள்ள விளம்பரத்தை இந்தியாவில் இருப்பவரைவிட அமெரிக்காவில் வசிப்பவர் க்ளிக்
செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும்.

மேலும்
விளம்பரத்தின் வகையை பொருத்தும் Cost Per Click மாறுபடும். ஒரு புத்தக
விளம்பரத்தைவிட லோன் விளம்பரம் மூலம் அதிக பணம் கிடைக்கும். இதில்
புத்தகம்.லோன் என்பது Keywords ஆகும்.

அதிக பணம் தரும் Keywords
என்று பல இருக்கின்றன. அந்த Keywords தொடர்பான தளங்களை நீங்கள் உருவாக்கி,
அதிக பார்வையாளர்களை பெற்றால் அதிக பணத்தை ஆன்லைனில் சம்பாதிக்கலாம்.

இதையும் படிங்க:  ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

ஆனால் தமிழ் தளம் என்கிற போது தமிழ் விளம்பரதாரர்கள் பெருகும் வரை இந்த ஆங்கில Keywords அதிகம் எடுபடாது. அதனால் அதிக பார்வையாளர்களை பெரும் வகையில் இணையத்தளம் உருவாக்குங்கள்.

ஆட்சென்ஸில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கூகுள் உங்களைவிட ஸ்மார்ட். அதனால் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எவ்வித ஏமாற்று வழிகளையும் பின்பற்றாதீர்கள்!

4 thoughts on “ஆட்சென்ஸில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?”

 1. மிகச் சரியான நேரத்தில் திரும்பி வந்திருக்கிறீர்கள் வாத்தியாரே! வரவு கூட்டும் உங்கள் வருகைக்கு அன்பான நல்வரவு!

  எனக்கு கூகுள் ஆட்சென்ஸ் கிடைத்து விட்டது. நீங்கள் முந்தைய பதிவில் கூறியிருந்த வழிமுறைப்படிதான் இணைந்தேன். அதற்கு முதலில் நன்றி!

  ஆனால், இப்பொழுது எனக்கு ஒரு சிக்கல். என் தளம் இப்பொழுது ‘http’ தளமாக இருக்கிறது. ஆனால், விளம்பரமோ 'https' பதிப்பில்தான் இடம்பெற்றுள்ளது. ஆக, நான் இப்பொழுது ’https’க்கு மாறியாக வேண்டிய நிலை. ஆனால், மாறக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்கான காரணங்களைக் கூறுகிறேன். கனிவு கூர்ந்து நேரம் கிடைக்கையில் விடையளிக்க வேண்டுகிறேன்.

  1. ’http’யிலிருந்து ‘https’க்கு மாறினால் பார்வையாளர் எண்ணிக்கை பாதிக்கப்படுமா? பாதிக்கப்படாது என்றுதான் பிளாகர் கூறுகிறது. பழைய ’http’ இணைப்பை யாராவது சொடுக்கினால் அதே இணைப்பின் தற்பொழுதைய ‘https’ பக்கத்துக்கு அவர்கள் வந்து சேருவார்கள் என்கிறது. ஆனாலும் எனக்குக் கொஞ்சம் தயக்கம். ஏனெனில், எல்லாப் பட்டியலிடுதளங்களிலும் (directories), சமூக ஊடகங்களிலும் தளத்தின் ’http’ முகவரிப் பதிப்பைத்தான் இணைத்திருக்கிறேன். இதுவரை தளத்துக்கு இணையத்தில் கிடைத்துள்ள அத்தனை இணைப்புகளும் (links) ‘http’ முகவரிக்குத்தான் செல்லும். இப்பொழுது திடீரென ’http’யிலிருந்து ‘https’க்கு மாறினால் இவை அத்தனையும் பாதிக்கப்படாதா?

  2. ‘https’ சேவையை பிளாகர் அறிமுகப்படுத்தியபொழுதே நான் அதற்கு மாற முனைந்தேன். ஆனால் அப்படி மாறினால், முகவரிப் பட்டியில் (address bar) நம் தளத்தைப் பாதுகாப்பற்ற (unsecured) தளம் எனக் காட்டுகிறது. இது பற்றி நம் தொழில்நுட்பப் பதிவர் சைபர் சிம்மன் அவர்களைக் கேட்டேன் (அப்பொழுது நீங்கள் இல்லாததினால்). அவர், தளத்தின் html உரையில் ‘http’ முகவரிகள் கலந்திருந்தால் இப்படி ஏற்படும் என்றார். நான் தளத்தில் இணைத்திருக்கும் பல பக்கச் செயலிகள் ‘http’யில்தான் தொடங்குகின்றன. ‘http’ கலக்காமல் தளத்தை வைத்திருக்க வேண்டுமானால், அவற்றையெல்லாம் நான் நீக்க வேண்டியதிருக்குமே! இதற்கு என்ன செய்வது?

  3. நான் தளத்தின் மொழியை எப்பொழுதும் தமிழில்தான் வைத்திருப்பேன். ஆனால் அப்படி வைத்தால், ’earnings’ பட்டியே வர மாட்டேன்கிறது. இப்பொழுதுக்கு தளத்தின் ‘https’ பதிப்பில் விளம்பரங்கள் வரத் தொடங்கி விட்டன. எனவே, தளத்தின் மொழியை மீண்டும் தமிழிலேயே வைத்து விட்டு, ‘earnings’ பட்டி வராவிட்டால் போகட்டும் என வருவாய் விவரங்கள் பார்க்க அந்தப் பக்கத்தை மட்டும் தனியே குறித்து (bookmark செய்து) வைத்துக் கொள்ளலாமா? அல்லது, இப்படிச் செய்தால் விளம்பரங்கள் போய்விடுமா?

  4. ‘https’க்கு மாறாகத் தற்பொழுதைய ‘http’ பதிப்பிலேயே விளம்பரங்கள் வரும்படி செய்ய முடியுமா?

  5. சில ஆண்டுகளுக்கு முன், டொமைன் நாட்டுக்கு ஏற்றபடி மாறாமல் தடுக்கத் தமிழ்ப் பதிவர்கள் நாம் அனைவரும் நம் தளத்தில் ஒரு நிரலியைச் சேர்த்தோமே, அஃது அப்படியே இருக்கலாமா அல்லது ஆட்சென்சில் சேருவதால் அதை நீக்க வேண்டுமா? அதை நீக்குவதாலோ தொடர்ந்து வைத்திருப்பதாலோ ஏதேனும் ஆதாயமோ இழப்போ உண்டா?

  நேரம் கிடைக்கையில் மேற்படி ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டுகிறேன். இதற்கான விடைகளைத் தனிப் பதிவாகவே கூட நீங்கள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்!

  மிக்க நன்றி!

 2. http/https மாற்றத்தால் ஆட்சென்ஸ் பிரச்சனை இல்லை, இரண்டிலும் விளம்பரம் வரும்.

  http/https மாற்றம் SEOவில் மட்டுமே சிறிது பாதிப்பை உண்டாக்கும். அதுவும் போக போக சரி ஆகிவிடும். கவலைப்பட தேவையில்லை.

  //தளத்தின் html உரையில் ‘http’ முகவரிகள் கலந்திருந்தால் இப்படி ஏற்படும் என்றார். நான் தளத்தில் இணைத்திருக்கும் பல பக்கச் செயலிகள் ‘http’யில்தான் தொடங்குகின்றன. ‘http’ கலக்காமல் தளத்தை வைத்திருக்க வேண்டுமானால், அவற்றையெல்லாம் நான் நீக்க வேண்டியதிருக்குமே! //

  ஆம். நாம் எங்கெல்லாம் http என்று கொடுத்திருக்கிறோமோ அங்கெல்லாம் https என்று மாற்ற வேண்டும்.

 3. அடடே! ஆமாம்! இப்பொழுது நீங்கள் சொன்ன பிறகு பார்த்தேன். இப்பொழுது ’http’, ’https’ இரண்டு பதிப்புகளிலுமே விளம்பரங்கள் காணப்படுகின்றன. முதலில் அப்படி இல்லை; ’https’ பதிப்பில் மட்டும்தான் விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தன; அதனால்தான் கேட்டேன். ஆக, ’http’-க்கு மாற இப்பொழுதுக்கு அவசரமில்லை என நினைக்கிறேன். விடையளித்துக் கவலை போக்கியமைக்கு மிக்க நன்றி! அப்படியே நேரம் கிடைக்கையில் 3ஆவது, 5ஆவது ஆகிய கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டுகிறேன்.