அலெக்ஸா மதிப்பை அதிகரிக்கும் டூல்பார்

Browser Toolbar என்பது இணைய உலவிகளில் பயன்படுத்தப்படும் நீட்சி (Extensions) ஆகும். நாம் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்களின் சுட்டிகள் சின்ன சின்ன ஐகான்களாக இருக்கும். கிட்டத்தட்ட புக்மார்க் போன்று தான். ஆனால் மேலும் சில வசதிகள் இருக்கும். அவை அந்த டூல்பாரை வழங்கும் தளத்தை பொறுத்து வேறுபடும்.

கூகிள், யாஹூ, அலெக்ஸா போன்று பல்வேறு தளங்கள் டூல்பார் வசதியை தருகின்றன. அவைகள் ஒவ்வொன்றிலும் பல வசதிகள் உள்ளன. உதாரணத்திற்கு, தேடுபொறி, வானிலை மாற்றங்கள், பங்குச்சந்தை நிலவரம், அண்மைய செய்திகள் இப்படி ஏராளமான வசதிகள் உள்ளன. நாம் ஒரு இணையதளத்தில் உலவும் போது அந்த தளத்தின் மதிப்பை அறிவதற்காக கூகிள் டூல்பாரில் PageRank வசதியும், அலெக்ஸா டூல்பாரில் AlexaRank வசதியும் உள்ளன.

பதிவிற்கு செல்லும் முன்:

பதிவிற்கு செல்லும் முன் டூல்பார் பற்றிய என் கருத்தை சொல்லிவிடுகிறேன். இது போன்ற டூல்பாரை நிறுவுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. காரணம், இது போன்ற டூல்பார்கள் நாம் இணையத்தில் உலவும் தகவலை நம்மை அறியாமலே சேகரிக்கின்றன. இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லையெனினும், நான் உலவும் தகவலை அவர்களுக்கு சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பதிவை பகிரலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்காக தான் “உங்கள் Browser-ல் Toolbar வைத்துள்ளீர்களா?” எனக் கேட்டிருந்தேன். ஓட்டளித்தவர்களில் அதிகமானோர்(64/89) டூல்பார் நிறுவவில்லை என சொல்லியிருந்தார்கள்.


என்னுடைய பரிந்துரை:  டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது.

பிறகு ஏன் இந்த பதிவு? இது ஒரு தகவல் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் செயல்படுத்தலாம்.

நமது தளத்திற்காக அலெக்ஸா டூல்பார்:

நாம் தற்போது பார்க்கவிருப்பது அலெக்ஸா டூல்பார் பற்றி தான். அலெக்ஸா மதிப்பு (Alexa Rank) பற்றி எல்லோரும் அறிவீர்கள் என நினைக்கிறேன். அதைப்பற்றி வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி? என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். நமது தளத்தின் அலெக்ஸா மதிப்பை உயர்த்துவதற்கு அலெக்ஸா டூல்பாரை நிறுவுவதும் ஒரு வழியாகும். தற்போது அலெக்ஸா தளம் நம் தளத்திற்காக நாமே ஒரு டூல்பாரை உருவாக்கும் வசதியை அளித்துள்ளது. இதன் மூலம் நம் தளத்திற்கான டூல்பாரை உருவாக்கி, வாசகர்களுக்கு கொடுக்கலாம். அந்த டூல்பாரை அவர்கள் நிறுவுவதால், அதன் மூலம் நமது அலெக்ஸா மதிப்பு அதிகமாக இல்லையெனினும் ஓரளவு உயர வாய்ப்புள்ளது.

டூல்பாரை உருவாக்குவது எப்படி? (படங்களை பெரிதாக காண, அதன் மீது க்ளிக் செய்யவும்.)

1. முதலில் http://www.alexa.com/toolbar-creator/editor/create/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அலெக்ஸா கணக்கு மூலம் உள்நுழையுங்கள். கணக்கு இல்லையெனில் புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  தேடுபொறி ரகசியங்கள்: உள்இணைப்புகள்

3. Accept Terms என்ற பக்கத்தில் உள்ள “Terms of Use”-ஐ (பொறுமை இருந்தால்) படித்துவிட்டு, கீழே I Accept என்னும் பட்டனைக்ளிக் செய்யுங்கள்.

4. பிறகு உங்கள் டூல்பாருக்கான பெயர் கேட்கும். உங்கள் தளத்தின் பெயரை கொடுத்து “OK” என்பதை க்ளிக் செய்யுங்கள்.

5. பிறகு Your Logo Here என்பதை க்ளிக் செய்யுங்கள்.  

அ. அங்கு URL பகுதியில் உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும்.

ஆ. Appearance என்னும் பகுதியில் மூன்று Options இருக்கும்.


Icon Only – உங்கள் லோகோ மட்டும் தெரிய

Icon & Text – லோகோவுடன் உங்கள் ப்ளாக் பெயரும் தெரிய

Text Only – உங்கள் ப்ளாக் பெயர் மட்டும் தெரிய

உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள்.

இ. Button Icon என்னும் இடத்தில் Drop-Down Box-ல் மூன்று Options இருக்கும்.

Default Icon – பொதுவான ஐகான்

Custom Icon – நீங்கள் உங்கள் கணினியில் ஐகான் வைத்திருந்தால் அதனை தேர்வு செய்ய

Favicon – உங்கள் ப்ளாக்கின் ஃபேவிகான்-ஐ தேர்வு செய்ய

ஈ. Hover Description – மவுசை பட்டனிடம் கொண்டு சென்றால் குறிப்பு காட்ட. உங்கள் ப்ளாக்கின் பெயரையே கொடுக்கலாம்.

பிறகு OK என்பதை க்ளிக் செய்யுங்கள்.

6. பிறகு Add Buttons that drive traffic to your website என்ற பகுதியில் நான்கு Options இருக்கும்.

Link Button – நீங்கள் விரும்பும் இணையதளங்களின் சுட்டியை கொடுக்கலாம்.

Site search Field – உங்கள் தளத்தில் தேடுவதற்கான தேடுபொறி

Rss Button – உங்கள் தளத்தின் செய்தியோடை மூலம் உங்கள் பதிவுகளின் தலைப்பை காட்டும் (Blogspot தளத்திற்கு தற்போது வேலை செய்யவில்லை.)

Menu Button –  Drop Down முறையில் பல சுட்டிகளை இணைக்கலாம்.

7. அடுத்து “Add social networking buttons” பகுதியில் மூன்று Options இருக்கும்.

Facebook Fan Page – உங்களுக்கு ஃபேஸ்புக் பேன் பேஜ் இருந்தால் அதனை இணைக்கலாம்.

Twitter Page – உங்கள் ட்விட்டர் பக்கத்தின் சுட்டியை கொடுக்கலாம்.

Show Tweets – நீங்கள் ட்வீட்டும் செய்திகளை டூல்பாரில் காட்டலாம்.

8.பிறகு Next என்பதை க்ளிக் செய்யவும்.

9. Add Popular Buttons என்ற இடத்தில் இருக்கும் சில பட்டன்களை விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு Next என்பதை க்ளிக் செய்யுங்கள். மீண்டும் Next என்பதை க்ளிக் செய்யுங்கள்.

10. பிறகு உங்கள் டூல்பாருக்கான பக்கம் உருவாகும். அங்கு உங்கள் டூல்பார் பற்றி வாசகர்கள் தெரிந்துக் கொள்வதற்காக ஏதாவது எழுதலாம்.

இதையும் படிங்க:  சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்

11. பிறகு “I’m ready, Publis Now” என்பதை க்ளிக் செய்யுங்கள்.

தற்போது உங்கள் டூல்பார் உருவாகிவிட்டது. அதனை வாசகர்களுக்கு எப்படி தெரிவிப்பது?

இரண்டு வழிகள் இருக்கின்றன.

1. View your Install Page என்பதை க்ளிக் செய்தால், உங்கள் டூல்பாருக்கான பதிவிறக்க பக்கம் வரும். அதன் முகவரியை சுட்டியாக உங்கள் ப்ளாக்கில் தெரிவிக்கலாம்.

2. “Get buttons that promote your toolbar” என்பதை க்ளிக் செய்து, அங்கு Promotional Buttons என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான முறையில் பட்டன் உருவாக்கிக் கொள்ளலாம்.

3. பின் உங்கள் பட்டனுக்கான HTML code இருக்கும். அதனை உங்கள் ப்ளாக்கின் sidebar-ல் வைக்கலாம்.

குறிப்பு:  இந்த டூல்பார் Internet Explorer மற்றும் Mozilla Firefox உலவிகளில் மட்டுமே வேலை செய்யும்.

 ப்ளாக்கர் நண்பன் டூல்பாரை டவுன்லோட் செய்ய: 

Get our toolbar!

நிறுவிய டூல்பாரை நீக்க:

நீங்கள்  நிறுவியுள்ள டூல்பாரை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கிவிடலாம்.


ஃபயர்பாக்ஸில் நீக்குவதற்கு:

Tools ==> Add-ons சென்று, அங்கு Extensions என்பதில், நீங்கள் நிறுவிய டூல்பார் இருக்கும். அதனை க்ளிக் செய்து Uninstall செய்துக் கொள்ளலாம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நீக்குவதற்கு:

Tools ==> Manage Add-ons என்பதை க்ளிக் செய்து, அங்கு Toolbars and extensions என்பதில், நீங்கள் நிறுவியுள்ள Toolbar-ஐ நீக்கிவிடலாம்.

24 thoughts on “அலெக்ஸா மதிப்பை அதிகரிக்கும் டூல்பார்”

 1. நல்ல தகவல் நண்பரே .
  நான் அலெக்சா விட்ஜெட் மட்டுமே பொருத்தியுள்ளேன். டூல் பார் -ஐ நிறுவலாமா என யோசித்து கொண்டிருந்தேன் .எனக்கும் சிறிது தயக்கம் இருந்தது .
  மேலே நீங்கள் சொன்னதை பார்க்கும் பொழுது வேண்டாம் என்றே தோன்றுகிறது .
  பகிர்வுக்கு நன்றி நண்பரே .

 2. என்னுடைய பரிந்துரை: டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது….

  நீங்களே சொல்லிட்டீங்க …அப்பீல் ஏது…
  rajeshnedveera

 3. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ. பதுள பாஸித்..!

  // ப்ளாக்கர் நண்பன் டூல்பாரை டவுன்லோட் செய்ய: //

  —உங்கள் பதிவை படித்து எல்லா சகோவும் இப்படி கிளம்பிவிட்டால்…?
  இப்படி ஒவ்வொருத்தர் டூல்பாரையும் நான் டவுன்லோடு செய்தால்…?
  அப்புறம் என் ஸ்க்ரீன் முழுக்க டூல்பார்கள் மட்டுமே இருக்குமே…?

  அப்புறம் என் ரியல் ஸ்க்ரீன் டூல்பார் சைசுக்கு போய்டுமே…?
  அப்புறம்… நான் என்ன செய்ய…?

  ஹய்யா… இதுக்கு உங்கள் யோசனையான…

  //என்னுடைய பரிந்துரை: டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது.//

  ….இது தான் ஒரே வழி..!

  இந்த பரிந்துரை 'உங்கள் டூல் பாரு'க்கும் பொருந்தும்தானே..!

  ஹாஹ்…ஹாஹ்…ஹா…!!!

 4. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ. பதுள பாஸித்..!

  // ப்ளாக்கர் நண்பன் டூல்பாரை டவுன்லோட் செய்ய: //

  —உங்கள் பதிவை படித்து எல்லா சகோவும் இப்படி கிளம்பிவிட்டால்…?
  இப்படி ஒவ்வொருத்தர் டூல்பாரையும் நான் டவுன்லோடு செய்தால்…?
  அப்புறம் என் ஸ்க்ரீன் முழுக்க டூல்பார்கள் மட்டுமே இருக்குமே…?

  அப்புறம் என் ரியல் ஸ்க்ரீன் டூல்பார் சைசுக்கு போய்டுமே…?
  அப்புறம்… நான் என்ன செய்ய…?

  ஹய்யா… இதுக்கு உங்கள் யோசனையான…

  //என்னுடைய பரிந்துரை: டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது.//

  ….இது தான் ஒரே வழி..!

  இந்த பரிந்துரை 'உங்கள் டூல் பாரு'க்கும் பொருந்தும்தானே..!

  ஹாஹ்…ஹாஹ்…ஹா…!!!

  இதை படித்த பின்பு எனக்கு டூல் பாரு'ம் ஒரு பாரு'ம் வேண்டாம்

 5. டூல்பாரை உருவாக்குவது எப்படி? (படங்களை பெரிதாக காண, அதன் மீது க்ளிக் செய்யவும்.)
  இதெல்லாம் நம்மாலே முடியாதது .இது நல்லது என்றால் நீங்களே செய்து விடுங்கள்

 6. //M.R said… 2

  நல்ல தகவல் நண்பரே .
  நான் அலெக்சா விட்ஜெட் மட்டுமே பொருத்தியுள்ளேன். டூல் பார் -ஐ நிறுவலாமா என யோசித்து கொண்டிருந்தேன் .எனக்கும் சிறிது தயக்கம் இருந்தது .
  மேலே நீங்கள் சொன்னதை பார்க்கும் பொழுது வேண்டாம் என்றே தோன்றுகிறது .
  பகிர்வுக்கு நன்றி நண்பரே .
  //

  நன்றி நண்பரே!

 7. //மாய உலகம் said… 3

  என்னுடைய பரிந்துரை: டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது….

  நீங்களே சொல்லிட்டீங்க …அப்பீல் ஏது…
  rajeshnedveera
  //

  🙂

  நன்றி நண்பா!

 8. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 4

  தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ. பதுள பாஸித்..!

  // ப்ளாக்கர் நண்பன் டூல்பாரை டவுன்லோட் செய்ய: //

  —உங்கள் பதிவை படித்து எல்லா சகோவும் இப்படி கிளம்பிவிட்டால்…?
  இப்படி ஒவ்வொருத்தர் டூல்பாரையும் நான் டவுன்லோடு செய்தால்…?
  அப்புறம் என் ஸ்க்ரீன் முழுக்க டூல்பார்கள் மட்டுமே இருக்குமே…?

  அப்புறம் என் ரியல் ஸ்க்ரீன் டூல்பார் சைசுக்கு போய்டுமே…?
  அப்புறம்… நான் என்ன செய்ய…?

  ஹய்யா… இதுக்கு உங்கள் யோசனையான…

  //என்னுடைய பரிந்துரை: டூல்பார் நிறுவாமல் இருப்பதே சிறந்தது.//

  ….இது தான் ஒரே வழி..!

  இந்த பரிந்துரை 'உங்கள் டூல் பாரு'க்கும் பொருந்தும்தானே..!

  ஹாஹ்…ஹாஹ்…ஹா…!!!
  //

  தங்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக!

  ஆம் சகோ.! நான் சொன்னது என் டூல்பாருக்கும் பொருந்தும். சாம்பிளுக்காகத்தான் ஒரு டூல்பார் உருவாக்கினேன்.

 9. சகோதரர் அவர்களுக்கு
  அலெக்ஸா என்றால் என்னவென்று நேற்று வரை தெரியாது இந்த பதிவை படித்த பிறகு தான் தேரிந்துக் கொண்டேன்

  நன்றி சகோ

 10. //Enayam Thahir said… 13

  அட போங்க சார். எல்லாமே நீங்க சொல்றீங்க. அப்புறம் எதுக்கு ….
  //

  ??????

  நண்பரே! கொஞ்சம் விளக்கமாக சொல்கிறீர்களா?

 11. //ஹைதர் அலி said… 15

  சகோதரர் அவர்களுக்கு
  அலெக்ஸா என்றால் என்னவென்று நேற்று வரை தெரியாது இந்த பதிவை படித்த பிறகு தான் தேரிந்துக் கொண்டேன்

  நன்றி சகோ
  //

  மிக்க மகிழ்ச்சி சகோ!

 12. //paristhiva said… 16

  பதிவுலக நண்பர்களின் தொழில்நுட்ப பதிவுகளை திருடி வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் தளம் http://tech.lankasri.com/ . உங்கள் பதிவுகள் இதில் இருந்தால் முறையீடு செய்யுங்கள்.
  //

  தகவலுக்கு நன்றி நண்பரே! இது எனக்கு முன்னரே தெரியும். எனது பதிவுகளை பொருத்தவரை, யார் வேண்டுமானாலும் மீள்பதிவு செய்துக் கொள்ளலாம் என்பதற்காக "Copyright Unreserved" என்று சொல்லியிருக்கிறேன்.

  மேலும் அந்த தளத்திற்கு சென்ற போது எனக்கு சிரிப்பு தான் வந்தது, கீழ்கண்ட வாசகத்தை படிக்கும்போது:

  எமது செய்தித் தளத்திலிருந்து இலவசமாக செய்திகளைப் பெற்று மீள் வெளியீடு செய்பவர்கள் தயவுசெய்து இத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட வேண்டும்.

 13. //மாணவன் said…

  தெளிவாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே 🙂

  தொடர்ந்து கலக்குங்க….
  //

  நன்றி நண்பரே!