அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கூகுள் , ஆப்பிள், நோக்கியா போன்ற செல்போன் நிறுவனங்கள் கடைகள் (stores) திறந்துவிட்டது. தற்போது பேஸ்புக் நிறுவனமும் Facebook App Center என்ற பெயரில் கடை திறக்கப் போகிறது. இன்னும் திறக்கபடாத அந்த கடையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
ஏற்கனவே கடைகளை திறந்திருக்கும் கூகுள் (ஆன்ட்ராய்ட்), ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தனக்கென்ற தனி இயங்குதளங்களை வைத்திருக்கின்றன. அதனால் அவற்றுக்கான பிரத்யேகமான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை விற்பனை செய்து வருகின்றன. அதில் இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆனால் பேஸ்புக் என்பது சமூக வலையமைப்பு தளமாகும். அதற்கென்று தனி இயங்குதளம் கிடையாது. பிறகு எப்படி கடை திறக்கிறது?
உண்மையில் Facebook App Center என்பது கணினி, ஆன்ட்ராய், ஐபோன் மென்பொருள்களை காட்சிப்பொருளாக (Showcase) வைக்க போகிறது. அதாவது ஆண்ட்ராய்ட், ஐபோன்களுக்கான சமூக அப்ளிகேசன்களை (Social Apps) தேடுவதற்கான தளமாக இது அமையுமென பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது. அதுவும் பேஸ்புக் மூலம் உள்நுழையும் (Facebook Login Button) வசதியை கொண்ட அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை மட்டுமே காட்சிப்படுத்தப் போகிறது. இதனால் பேஸ்புக் தளமும் வளர்ச்சி அடையும்.
மேலும் இயங்குதளம் சாராத, எந்த இயங்குதளத்திலும் பயன்படுத்தக் கூடிய அப்ளிகேசன்களை விற்பனைக்கு வைக்க போகிறது.
இது முதல் தகவல் மட்டுமே! இதனை அறிமுகப்படுத்தப்பட்டப் பின் இறைவன் நாடினால் விரிவாக எழுதுகிறேன்.
வலைச்சரம் தளத்தைப் பற்றி அனைவரும் அறிவீர்கள். வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ. இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். என்னுடைய பதிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
புதிய தகவலுக்கு நன்றிகள் நண்பா
ஏற்கனவே பேஸ்புக் அபார வளர்ச்சியை எட்டிவிட்டது, இன்னும் தன்னை வளர்த்துக்கொள்ள பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த நாள்தோறும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது போல ..!
புதிய தகவலுக்கு நன்றிகள் நண்பா
http://puthiyaminnal.blogspot.in/
இது என் ப்ளாக் .இதை போடுவீர்களா?
இப்ப Facebook உம் கடை விரிக்குதா?
பார்ப்போம்!
good news
புதிய தகவல் நன்றி சகோதரா and u can help me i cannot register recommened to u the bottom slide in blogger.
வந்த உடனே நாமளும் ரெண்டு கிலோ அப்ளிகேசன் வாங்கிடனும். 😛
நன்றி அண்ணா
"புதிய தகவல் ! நன்றி நண்பரே !"