அட்டகாசமான கூகுள் பார்

தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் ஒன்று புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லது புதுமையாக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். முன்னது புது வசதிகளை கொடுப்பது. பின்னது புது தோற்றத்தைக் கொடுப்பது. தற்போது கூகுள் இரண்டாவதை செய்திருக்கிறது.

கூகுள் தளங்களில் மேலே இருக்கும் Navigation Bar-ஐப் பற்றி உங்களுக்கு தெரியும். கூகுளின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்ல உதவுகிறது. இதன் தோற்றத்தை பலமுறை மாற்றியுள்ள கூகுள், தற்போதும் அட்டகாசமான முறையில் மாற்றியுள்ளது.

இதனை பார்க்கும் முன் பழைய கூகுள் பார்களைப் பற்றிய பதிவுகள்:

கூகிளின் புதிய தோற்றம் – New Google Bar

சோதனையில் இருக்கும் புதிய Google Bar

நீங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது மேலே உங்கள் பெயருக்கு பக்கத்தில் Apps என்ற ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்தால் கூகுள் தளங்களின் ஐகான்களைக் காட்டும்.
அதில் More என்பதை அழுத்தினாலோ அல்லது மவுசில் உள்ள சக்கரத்தை கீழே நகர்த்தினாலோ மேலும் சில ஐகான்ளைக் காட்டும்.
இந்த புதிய தோற்றம் உங்களுக்கு பிடித்துள்ளதா?
இதையும் படிங்க:  ப்ளாக்கர் நண்பன் Version 4.0

5 thoughts on “அட்டகாசமான கூகுள் பார்”