ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

facebook

இன்றைய உலகில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இணையத்தில் இருக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவைகளை வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் பார்ப்போம்.


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஃபேஸ்புக் தளத்தினை பற்றி.


சமூக வலைபின்னல் தளங்களில் முன்னணியில் இருப்பது ஃபேஸ்புக். கூகிளினால் கூட போட்டி போட முடியவில்லை. ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு சிறப்பம்சம் Like பட்டன். இது நாம் எந்த செய்தியை வேண்டுமானாலும் தமது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்வதற்கான வழி.


இந்த பட்டனை நாம் நம்முடைய வலைப்பதிவில் இணைத்துவிட்டால், நம்முடைய பதிவுகளை படிக்கும் வாசகர்கள், அந்த பதிவு பிடித்திருந்தால் அதை தன் நண்பர்களுக்கும் பகிர்ந்துக் கொள்வார்கள். இதனால் நமக்கு வாசகர்களின் வருகை அதிகரிக்கும்.


இனி பேஸ்புக் பட்டனை எப்படி நம் வலைப்பதிவில் இணைப்பது என்று பார்ப்போம்.


முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


பேஸ்புக் Share பட்டனை சேர்க்க:

1. Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

2.

<div class='post-header-line-1'/>
என்ற code-ஐ தேடவும்.

3. அந்த code-ற்கு கீழே பின்வரும் code-ஐ paste செய்யவும்.


<div style="float:right;padding:4px;">
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>குறிப்பு:


<div class='post-header-line-1'/>
என்ற code உங்கள் டெம்ப்ளேட்டில் இல்லையென்றால்,


<data:post.body/>
என்ற code-ஐத் தேடி அதற்கு முன்னால் paste செய்யவும்.

4. Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் ஒவ்வொரு பதிவின் வலப்புறத்திலும்  பேஸ்புக் Share பட்டன் வந்துவிடும். எத்தனை முறை அந்த பதிவு பகிரப்பட்டுள்ளது என்பதனையும் காட்டும்.

இடதுபுறம் தெரிய:

பேஸ்புக் share பட்டன் பதிவின் இடது புறத்தில் வரவேண்டுமானால், மேலுள்ள code-ற்கு பதிலாக கீழுள்ள code-ஐ paste செய்யவும்.


<div style="float:left;padding:4px;">

<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>

<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>

</div>

இதையும் படிங்க:  நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1

22 thoughts on “ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?”

 1. @BOOBALAN

  இந்த வலைப்பதிவை தொடங்கியதற்கு காரணமே எனக்கு தெரிந்த ப்ளாக்கர் டிப்ஸ்களை பகிர்ந்துக் கொள்வதற்காகத் தான்… தொடர்ந்து வருகை தாருங்கள்…

 2. @Abu Nadeem

  வ அலைக்கும் ஸலாம்…

  உங்கள் பிளாக்கை பார்த்தேன். முகப்பு பக்கத்தில் மட்டும் ஃபேஸ்புக் பட்டன் வருகிறது. பதிவுக்கு சென்றால் பட்டன் தெரியவில்லை.

  Edit html சென்று அதில் உள்ள Code-களை காப்பி செய்து எனக்கு (basith27@gmail.com) அனுப்ப முடியுமா?.

  அதை பார்த்தால் தான் என்ன தவறு என்று தெரியும்.

 3. சலாம்.சகோ..பாஸித்…அருமையான ப்ளாக் குறிப்புகளை வழங்குகிறீர்கள்…மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

 4. //ரஜின் said… 11

  சலாம்.சகோ..பாஸித்…அருமையான ப்ளாக் குறிப்புகளை வழங்குகிறீர்கள்…மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
  //

  வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ..!

 5. //அன்புடன் மலிக்கா said…

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ மிக்க நன்றி . நானும் நீரோடையில் இணைத்துப்பார்த்தேன் வந்துவிட்டது.இதுபோன்ற பதிவுகளுக்கு பாராட்டுகள்..
  //

  வ அலைக்கும் ஸலாம்
  நன்றி சகோ.!

 6. //மாய உலகம் said… 15

  நானும் நீரோடையில் இணைத்துப்பார்த்தேன் வந்துவிட்டது.இதுபோன்ற பதிவுகளுக்கு பாராட்டுகள்..
  ////

  நன்றி நண்பா!

  நீரோடையில்?