யூட்யூபில் களமிறங்கும் ப்ளாக்கர் நண்பன்

ப்ளாக்கர் நண்பன் - இணையத்தில் எனக்கென்று ஒரு பெயரையும், உங்களைப் போன்ற பல நண்பர்களையும் பெற்றுக்கொடுத்தது. கடந்த எட்டு வருடங்களாக உங்களை எழுத்து வழியாக சந்தித்த நான் தற்போது "ப்ளாக்கர் நண்பன்" யூட்யூப் சேனல் மூலம் குரல் வழியாக சந்திக்கவுள்ளேன்.ப்ளாக்கர் நண்பன் சேனலில் முதல் வீடியோவாக "ஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி?" என்ற வீடியோ.இதற்கெல்லாமா வீடியோ என்று நீங்கள் நினைத்தால், வீடியோவில் 1:16 நேரத்தில் உள்ளதை மறக்காமல் பாருங்கள்.

ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு நீங்கள் கொடுத்த அதே ஆதரவை ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலுக்கும் Subscribe செய்து கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சேனலை subscribe செய்ய : https://goo.gl/9LUBG7

 மேலும் அடுத்த வீடியோவின் தலைப்பு: "ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகள்"

பேஸ்புக் தகவல் திருட்டு - நடந்தது என்ன?

பொதுவா நாம ரோட்டுல நடந்து போயிட்டு இருக்கும்போது முள் குத்திச்சுன்னா "முள்ளு குத்திடுச்சு"னு சொல்லுவோம். ஆனா உண்மை என்னான்னா முள் அதே இடத்துல தான் இருக்கும். நாம தான் முள் மேல கால வச்சிருப்போம். இதே கதை தான் இப்ப பேஸ்புக் தகவல் திருட்டு கதை.


ஐம்பது மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என்றால் யாரோ சிலர் பேஸ்புக் கணக்கை உங்களுக்கு தெரியாமல் ஹேக் செய்து திருடவில்லை. "எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்", "நான் எப்படி சாவேன்", "என்ன பத்தி மக்கள் என்ன சொல்றாங்க" அப்படின்னு சில பேஸ்புக் Apps இருக்கும் அல்லவா? அவைகளை நீங்க பயன்படுத்தும்போது "உங்கள் தகவல்களை அந்த ஆப்ஸ் டெவலப்பர்கள் தெரிந்துக்கொள்ள நீங்களே அவர்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்."

பொதுவாக பேஸ்புக் விதிப்படி, பயனாளர்கள் கொடுக்கும் தகவல்களை ஆப் டெவலப்பர்கள் மற்றவர்களிடம் சேர் செய்ய கூடாது. ஆனால் Cambridge Analytica நிறுவனம் இப்படி பெறப்பட்ட பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பயன்பாட்டிற்காக ட்ரம்ப் குழுவினருடன் பகிர்ந்துக் கொண்டதால் இது திருட்டு ஆகிறது.

Cambridge Analytica திருட்டு பத்திரிக்கைகளால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஆப் யாரால் உருவாக்கப்பட்டுள்ளது, எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? திருடன் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு, அவன் திருடிவிட்டு சென்றப்பின் புலம்புவதால் எந்தவொரு பயனும் இல்லை.

இனிமேலாவது விளையாட்டு என்ற பெயரில் இது போன்ற ஆப்களை பயன்படுத்துவதை தவிருங்கள்.

ஏற்கனவே இது போன்ற ஆப்களுக்கு நீங்கள் அனுமதி கொடுத்திருந்தால் https://goo.gl/qDwnng என்ற முகவரிக்கு சென்று Remove செய்திடுங்கள்.
எல்லா ஆப்களும் தகவல் திருட்டுக்காக உருவாக்கப்படுவதில்லை. சிலர் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக ஆப்களை உருவாக்குகின்றனர்.

குறிப்பு: தற்போது நீங்கள் பயன்படுத்திய ஆப்களை மூன்று மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் தகவல்களை டெவலபர்கள் அணுக முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers