பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

பேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

  1. பேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
  2. வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Show URL" என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  3. அந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.
  4. அதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.
  5. புதிய முகவரி இப்படி இருக்கும்.  https://m.facebook.com/whatzupvidz/videos/826508124099459/
  6. இப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
  7. வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Save Video as" என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற HTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers