ப்ளாக்கர் CAPTCHA - இருக்கு ஆனா இல்லை

CAPTCHA என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதாகும்.இணையத்தில் குறிப்பிட்டஉள்ளீட்டை செய்யும்போது (உதாரணத்திற்கு பின்னூட்டம் இடுவது), உள்ளீட்டை செய்பவர் மனிதர் தான் என்பதை உறுதி செய்வதற்காக பயன்படுகிறது.

கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய Captcha (ப்ளாக்கரில் இல்லை)

ப்ளாக்கரில் வாசகர்கள் பின்னூட்டம் இடும்போது இதை செயல்படுத்தும் வசதி உள்ளது. பெரும்பாலான பதிவர்கள் இந்த வசதியை வைக்க விரும்புவதில்லை.

சமீபத்தில் பிளாக்கர் தளம் பின்னூட்டம் இடும் முறையில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது நமது தளத்தில் பெயர் சொல்ல விரும்பாதவர்கள் (அனானிமஸ் :) ) பின்னூட்டம் இடும் வசதியை வைத்திருந்தால், Captcha வசதியை நாம் நீக்கியிருந்தாலும் அனானிமஸ் கண்டிப்பாக Captcha-வை டைப் செய்ய வேண்டும்.

இந்த மாற்றத்தைக் கொண்டு வரும்போது சிறு பிழையும் ஏற்பட்டுள்ளது. பின்னுள்ள படத்தைப் பாருங்கள்.


Comment Location என்பது பின்னூட்டப் பெட்டியின் தோற்றத்தை தேர்வு செய்வதாகும்.
  • Embedded - பதிவின் கீழே பின்னூட்டப் பெட்டி இருக்கும். (இத்தளத்தில் இருப்பது போல) 
  • Full Page - Post a Comment என்பதை க்ளிக் செய்தால் தனி பக்கத்தில் பின்னூட்ட பெட்டி வரும்.
  • Pop-up window - Post a Comment என்பதை க்ளிக் செய்தால் Pop-up window-ல் பின்னூட்ட பெட்டி வரும். 
  • Hide - இதனை தேர்வு செய்தால் யாரும் பின்னூட்டம் இடமுடியாது.
இதில் Embed என்பதை தேர்வு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் "Full Page" அல்லது "Pop-up Window" என்பதை தேர்வு செய்தால் தான் பிரச்சனை.

நீங்கள் Captcha வசதியை  நீக்கியிருந்தாலும் வாசகர்களுக்கு Captcha தெரியும். ஆனால், Captcha தெரிந்தாலும் வாசகர்கள் Captcha எழுத்துக்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை சிம்பிளாக இப்படியும் சொல்லலாம்,  "இருக்கு... ஆனா இல்லை...."


இந்த பிழை பற்றி கூகுளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரியாகும் வரை "Embedded" வசதியை தேர்வு செய்வது தான் இப்போதைய ஒரே வழி.

Update: இந்த பிழை சரி செய்யப்பட்டுவிட்டது.

ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா?

ஆறு மாதம் கழித்து புதியதொரு பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! இந்த இடைவெளியில் பதிவெதுவும் எழுதாவிட்டாலும் தினமும் வருகை தரும் வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!இது "நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?" பதிவின் தொடர்ச்சி ஆகும். அந்த பதிவில் பாஸ்வோர்ட் மறந்துவிட்டால் திரும்பப் பெற வழி ஒன்றினை சொல்லியிருந்தேன். தற்போது அது வேலை செய்யவில்லை (என்று நினைக்கிறேன்). கூகுள் பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது.

மறந்த பாஸ்வோர்டை திரும்பப் பெற

https://admin.google.com/blogname.com/ForgotAdminAccountInfo

என்ற முகவரிக்கு செல்லவும்.

blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும்.

அங்கே காட்டும் Word Verification-ஐ சரியாக கொடுத்தால், உங்கள் பாஸ்வோர்டை மாற்றுவதற்கு இணைப்பு ஒன்று நீங்கள் முன்னர் கொடுத்த மின்னஞ்சலுக்கு வரும். அதன் மூலம் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை!


ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த ஒரு நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தளத்தில் மால்வேர் இருக்கும் அபாயம் இருக்கிறது.

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற பதிவில் இருந்த நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், கூகுள் க்ரோமில் அந்த பக்கத்தை பார்க்கும்போது மேலே படத்தில் உள்ளது போல மால்வேர் எச்சரிக்கை வரும்.

காரணம், அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிரல் abu-farhan.com தளத்திலிருந்த எடுக்கப்பட்ட நிரல் ஆகும். அபு ஃபர்ஹான் தளம் மால்வேறினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த தளத்தில் உள்ள நிரலை பயன்படுத்தினாலும் இந்த எச்சரிக்கை வருகிறது.

இதனை தவிர்க்க, அந்த நிரலை உங்கள் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கவும். அதற்கு பதிலாக வேறொரு நிரலையும் அந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

நான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!


Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers