இனி அனைவருக்கும் புதிய ஜிமெயில்


ஜிமெயில் கடந்த அக்டோபர் மாதம் எளிதாக மெயில் அனுப்புவதற்கு புதிய வசதியை (New Compose) கொண்டுவந்தது. இதைப் பற்றி இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது இந்த வசதியை கட்டாயமாக  கொண்டுவந்துள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (27/03/2013)


இந்த வாரம்  (27/03/2013) "பிட்..பைட்..மெகா பைட்" பகுதியில் சற்று வித்தியாசமாக, இன்றைய தேதியை குறிக்கும் விதத்தில் இருபத்தி ஏழு தொழில்நுட்ப குறுஞ்செய்திகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி


Threaded Comments பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது யாராவது கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. ப்ளாக்கரில் கூட Threaded Comments வசதி உள்ளது. தற்போது பேஸ்புக் தளம் இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளது.

யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட் செய்ய...


வீடியோ என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையான ஒன்று யூட்யூப். யூட்யூப் தளத்திற்கு தற்போது மாதம் நூறு கோடி பயனாளர்கள் வருகை தருகிறார்கள். வீடியோக்களை பகிர உதவும் யூட்யூப் தளத்தில் புகைப்படங்களை பகிரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

மீண்டும் பதில்! உங்கள் கேள்வி என்ன?


பதில் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனைப் பற்றி பார்த்தோம் அல்லவா? இறைவனின் உதவியால்  தற்போது பதில் தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. தற்போது புதிய வடிவத்தில் சில மாற்றங்களுடன் வந்துள்ளது.

கூகிளை அழிக்கும் Zergs, காப்பாற்ற தயாரா?


 Zerg என்பது StarCraft என்னும் ஆன்லைன் விளையாட்டில் வரும் வேற்றுகிரக எதிரி உயிரினமாகும்[பார்க்க: மேலுள்ள படம்]. அது O வடிவில் இருக்கும். தற்போது இரண்டு O-க்கள் கூகிளை அழித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் அவைகளை தடுத்து கூகிளை காப்பற்ற முடியும். நீங்கள் தயாரா?

பிட்.. பைட்... மெகாபைட்....! (20/03/2013)

Google Keep
இந்த வாரம் (20/03/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பதில் - பிரச்சனை - மன்னிப்பு


'கற்போம்' பிரபுகிருஷ்ணாவும், நானும் இணைந்து தொழில்நுட்பம் தொடர்பான கேள்வி-பதில் தளமாக பதில் தளத்தை உருவாக்கினோம். இது பற்றி கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! என்ற பதிவில் சொல்லியிருந்தேன். தற்போது அந்த தளத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உடான்ஸ் திரட்டியில் மால்வேர்


நமது பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு செல்ல திரட்டிகள் உதவுகிறது. முன்னணி தமிழ் திரட்டிகள் சில இருக்கும் நிலையில் வேறு சில திரட்டிகளும் அதிகம் உள்ளன. அதில் ஒன்று உடான்ஸ்/யுடான்ஸ் திரட்டி. தற்போது அந்த திரட்டியில் மால்வேர் உள்ளதாக எச்சரிக்கை செய்கிறது கூகுள்.

கூகுள் ரீடருக்கு மூடுவிழா


தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது  "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும்.

புதிய யூட்யூப் சேனல் டிசைன் - One Channel

யூட்யூப் தளம் சேனல் வடிவமைப்பை மாற்றி One Channel என்ற புதிய வடிவமைப்பை கொடுத்துள்ளது. இது பற்றி கடந்த மாதம்  பிட்.. பைட்... மெகாபைட்....! பகுதியில் பார்த்தோம். ஒரு சில சேனல்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த டிசைன் தற்போது அனைத்து சேனல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

கூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க!

துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன?

 நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்தால், சில ப்ளாக்கர் வலைத்தளங்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம். அதாவது சில வலைப்பூக்கள் தொடர்ந்து Refresh ஆகிக் கொண்டிருக்கும். இதனால் வாசகர்கள் அந்த தளத்தை சரியாக படிக்க முடியாது, பின்னூட்டம் இட முடியாது. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

பிட்.. பைட்... மெகாபைட்....! (06/03/2013)


இந்த வாரம் (06/03/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் டேக் செய்ய போறீங்களா?


பேஸ்புக்கில் உள்ள Photo Tag வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த அல்லது நண்பர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிரும்போது அந்த போட்டோவில் உள்ள நண்பர்களை குறிப்பதற்கு இது பயன்படுகிறது. ஆனால் அதிகமானவர்கள் தொடர்பில்லாத பொதுவான புகைப்படங்களில் நண்பர்களை டேக் செய்கிறார்கள். இதனால் அந்த நண்பர்களுக்கு பிரச்சனை வரும் என்று உங்களுக்கு தெரியுமா?

மீண்டும் ஜாவா எச்சரிக்கை!


கணினி மற்றும் இணைய பயன்பாடுகள் அதிகமானவற்றுக்கு பயன்படும் மென்பொருள்களில் ஒன்று ஜாவா (Java). சமீபத்தில் ஜாவாவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! என்ற பதிவில் பார்த்தோம் அல்லவா?

Harlem Shake - நடனமாடும் யூட்யூப்


Harlem Shake என்பது தற்போது இணையத்தில் பிரபலமாகிவரும் நடனம் ஆகும். 30 நொடிகள் நீளம் கொண்ட இந்த வீடியோவில் கூட்டமாக சிலர் இருக்கும் இடத்தில் ஒருவர் மட்டும் 15 நொடிகள் தனியாக ஆடுவார். மீதி பதினைந்து நொடிகள் அனைவரும் சேர்ந்து ஆடுவர்.

ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் பிரச்சனை


ப்ளாக்கர் தளத்தில் புதிதாக ப்ளாக் ஒன்றை தொடங்கினால் அதன் முகவரி நீங்கள் கொடுக்கும் பெயருடன் சேர்த்து .blogspot.om என்று முடியும். இதற்கு பதிலாக .blogspot என்றில்லாமல் வெறும் .com, .net போன்ற முகவரிகளை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தலாம். இதற்கு கஸ்டம் டொமைன் (Custom Domain) என்று பெயர்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers