Google Play Books - தற்போது இந்தியாவிலும்


ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் சந்தையான கூகுள் ப்ளே தளத்தில் ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்லட்களுக்கான அப்ளிகேசன்கள், விளையாட்டுகள், பாடல்கள், படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. இதுபற்றி கூகிளின் புதிய வசதி: Google Play என்ற பதிவில் முன்னரே பார்த்தோம். ஆனால் அப்ளிகேசன், விளையாட்டுக்களை தவிர மற்றவைகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உள்ளது. தற்போது கூகுள் ப்ளே புக்ஸ் (Google Play Books) இந்தியாவிற்கு வந்துவிட்டது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (27/02/2013)


இந்த வாரம் (27/02/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி


நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும்,  குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய  மீடியாவாகவும் செயல்படுகிறது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (20/02/2013)


இந்த வாரம் (20/02/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்


விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணினிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது. இதை எப்படி செயல்படுத்துவது? என்பது பற்றி பார்ப்போம்.

நான் ********** உணர்கிறேன் [Video Post]


உங்கள் கணினி உலவியில் முகப்பு பக்கம் எது? என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் கூகுள். சரி, தினமும் கூகுள் தளத்திற்கு செல்கிறோம். அதில் உள்ள "i'm feeling Lucky" பட்டன் எதற்கு என்று தெரியுமா? அதில் மறைந்திருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?

பேஸ்புக் ஷார்ட்கட் - குட்டி பதிவு :)


பேஸ்புக்கில் பயன்படுத்த Special Characters என்ற பதிவில் பேஸ்புக்கில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு எழுத்துக்களைப் பற்றி பார்த்தோம் அல்லவா? சில வாசகர்கள் அதற்கான ஷார்ட் கட் கீ பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த குட்டி பதிவு.

பிட்.. பைட்... மெகாபைட்....! (13/02/2013)


இந்த வாரம் (13/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் பயன்படுத்த Special Characters


பேஸ்புக் பயன்படுத்தாதவர்களை தற்போது காண்பதே அரிதாக இருக்கிறது. அந்த அளவு பேஸ்புக் வளர்ச்சி அடைந்துள்ளது. பேஸ்புக்கில் சாதாரண எழுத்துக்கள் மட்டுமில்லாமல் சில பிரத்யேகமான எழுத்துக்களையும் (Special Characters) நாம் பயன்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இணையத்தில் இருந்து உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்.

ஜிமெயில் ஆயிரம் - அறிவோம் ஆயிரம்


ஜிமெயில் தளம் மெயில் அனுப்புவதற்கு புதிய Compose Mode-ஐ அறிமுகப்படுத்தியது பற்றி இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம் என்ற பதிவில் பார்த்தோம். அப்போது ஸ்மைலீஸ், நிகழ்ச்சிக்கான அழைப்பு (Event Invitation), அனுப்பும் மெயில்களுக்கு லேபில் கொடுப்பது போன்ற வசதிகள் விரைவில் வரவுள்ளதாகவும் பார்த்தோம்.

கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]


கூகுள் தேடுபொறி முன்னணியில் இருப்பதற்கும், தனித்துவமாய் இருப்பதற்கும் அன்றாடம் அது செய்து வரும் மாற்றங்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். தற்போது கூகுள் தேடலில் கால்குலேட்டர் வசதியில் செய்துள்ள மாற்றங்களைப் பார்போம்.

Google Mapathon 2013 - பரிசுகளை வெல்லுங்கள்!


கூகிள் இந்தியா நிறுவனம் Mapathon 2013 என்னும் போட்டியை அறிவித்துள்ளது. இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த இடங்களை கூகுள் மேப்பில் சேர்ப்பது தான் போட்டி. வெற்றி பெறுபவர்களுக்கு Samsung Galaxy Note 800 ஆண்ட்ராய்ட் டேப்லட், Samsung Galaxy S II GT I9100 ஆண்ட்ராய்ட் போன்கள் போன்ற பரிசுகளையும் தருகிறது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (06/02/2013)


சிறப்பு செய்தி ஒன்றுடன், இந்த வாரம் (06/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டில் பரவும் மால்வேர்:

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள தேவையில்லாத மெமரியை அழித்து, அதிக இடவசதி கொடுத்து, மொபைலை வேகமாக இயங்கவைக்கும் அல்லது இயங்க வைப்பதாக சொல்லும் அப்ளிகேசன்கள் கிளீனர் அப்ளிகேசன்கள் (Cleaner Apps) என்று அழைக்கப்படும். தற்போது இந்த பெயரில் அதிகமான அப்ளிகேசன்கள் மால்வேர்களை பரப்பிவருகிறது.

இது மற்ற மால்வேர்களைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மால்வேர் நேரடியாக நம் மொபைலை தாக்காது. மாறாக மால்வேர் உள்ள இந்த மொபைலை கணினியில் இணைக்கும் போது அந்த கணினியை தாக்கும் சக்திக் கொண்டது. இந்த மால்வேர் நம்முடைய கணினியில் உள்ள மைக்ரோபோனை பயன்படுத்தி நமக்கு தெரியாமலேயே ரெகார்ட் செய்யும் திறமைக் கொண்டது.

இந்த அப்ளிகேசன்கள் கூகுள் ப்ளே தளத்திலும் இருப்பது தான் கவலைக்குரிய செய்தியாகும். மேலும் பயனர்கள் இந்த அப்ளிகேசன்களுக்கு அதிக டவுன்லோட் மற்றும் மதிப்பீடுகளைக் கொடுக்கின்றனர். அதைக் கண்டு ஏமாற வேண்டாம். கிளீனர் அப்ளிகேசன்களை பயன்படுத்தாமல் இருப்பதே நன்று.

ப்ளாக்பெர்ரி Z10 & Q10:


கடந்த வாரம் சொன்னது போல ப்ளாக்பெர்ரி மொபைல் நிறுவனம் புதிய இயங்குதளமான Blackberry 10 OS-யை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு (ப்ளாக்பெர்ரிக்கு) புதிய வசதிகளைக் கொண்ட இந்த இயங்குதளத்தின் முதல் இரண்டு மொபைல்களாக BlackBerry Z10 மற்றும் BlackBerry Q10 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் புதிய அப்ளிகேசன்:

ஆப்பிள் ஐபோனில் நமக்கு அருகாமையில் இருக்கும் நண்பர்களின் இருப்பிடத்தை மேப் மூலம் அறிந்துக்கொள்ள உதவும் Find My Friends என்னும் அப்ளிகேஷனை போல பேஸ்புக் நிறுவனமும் புதிய அப்ளிகேசன் ஒன்றை வெளியிடவுள்ளது.

ஜாவா அப்டேட்:

ஜாவா மென்பொருள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்று பார்த்தோம் அல்லவா? அதனை சரி செய்து புதிய பதிப்பாக Java 7 update 13-ஐ வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்துள்ளது.

இது பற்றி படிக்க: Oracle released Java 7 update 13

புதிய யூட்யூப் சேனல் டிசைன்:


யூட்யூப் தளம் நமது சேனல் வடிவமைப்பில் சிறிது மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் நமது சேனல் பக்கத்திற்கு Subscribe செய்திடாத வாசகர்கள் வரும் போது (மட்டும்) பிரதயேக வீடியோவை வைக்கலாம். இது Channel Trailer எனப்படும்.

மேலும் பேஸ்புக் கவர் போன்று பெரிய படம் ஒன்றையும் வைக்கலாம். அதன் கீழே நமது தளத்திற்கான இணைப்பு மற்றும் நம்முடைய Google+, Facebook மற்றும் Twitter கணக்குகளுக்கும் இணைப்பு கொடுக்கலாம். இந்த வசதி ஒரு சிலருக்கே வந்துள்ளது. மற்றவர்களுக்கு வி...ரை...வி...ல்..... வரும் என்று தெரிவித்துள்ளது.

என்னுடைய யூட்யூப் சேனல் (இந்த வசதி இன்னும் வரவில்லை)



ஹேக் செய்யப்பட ட்விட்டர்:

கடந்த வாரம் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டது. இதன் மூலம் 250,000 கணக்குகள் திருடப்பட்டிருக்கலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. நீங்கள் ட்விட்டர் பயன்படுத்தினால் உடனடியாக கடவுச்சொல்லை மாற்றுங்கள்.

பேஸ்புக் கார்ட் - Facebook Card:



பேஸ்புக் நிறுவனம் கிரெடிட் கார்ட் போலவே புதிய கார்ட் ஒன்றை Facebook Card என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. நம்முடைய நண்பர்களுக்கு 10$, 25$, 50$, 100$ மதிப்புள்ள இந்த கார்டுகளை அனுப்பலாம். அந்த கார்ட் மூலம் அவர்கள் குறிப்பிட்ட கடைகளில் அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம். வழக்கம் போல இந்த வசதியும் தற்போது அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வி...ரை...வி...ல்.....

ப்ளாக்கர் நண்பன் - 300 (சிறப்பு செய்தி):

தமிழில் ப்ளாக்கர் மற்றும் தொழில்நுட்ப செய்திகளைப் பற்றி எழுதிவரும் ப்ளாக்கர் நண்பன் என்னும் தளம் இன்று முன்னூறாவது பதிவை எட்டியுள்ளது. முன்னூறாவது பதிவில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஒரு வார காலமாய் யோசித்து வந்த அந்த பதிவருக்கு எதுவும் தோன்றாததால் சாதாரண பதிவாகவே எழுதியுள்ளார்.


இந்த வார கார்டூன் (ஹிஹிஹிஹி):



Log out!
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers