ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?


ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.

சிறப்பம்சங்கள்:

iOS 6 vs iOS 7
  • Control Center - Airplane Mode, Wi-fi, Bluetooth போன்ற பொதுவான அமைவுகளை உடனடியாக செயல்படுத்த உதவுகிறது. திரையில் கீழிருந்து மேலே நகர்த்தி இதனை பயன்படுத்தலாம்.
  • Notification Center - புதிய மெயில்கள், Missed Calls மற்றும் அப்ளிகேசன்களின் அறிவிப்புகளை காணலாம். இதனை பயன்படுத்த திரையில் மேலிருந்து கீழே நகர்த்தவும்.
  • Camera - சாதாரண புகைப்படம், வீடியோ, பனோரமா புகைப்படம், சதுர அளவிலான புகைப்படம் என்று நான்கு வகை அமைவுகள் இருக்கிறது. மேலும் புகைப்படத்திற்கு வண்ணங்கள் கொடுக்க எட்டு Filters இருக்கிறது.
  • Photos -நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை Moments, Collections, Years என்று மூன்றுவிதமாக பிரித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு 2012 என்பதை தேர்வு செய்தால் அந்த வருடம் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் திரையில் காட்டும்.
  • Find My iPhone - தொலைந்து போன ஐபோன்களை கண்டுபிடிக்க Find My iPhone வசதி ஏற்கனவே உள்ளது. திருடர்கள் கையில் உங்கள் போன் கிடைத்தால் எளிதாக அந்த வசதியை நிறுத்திவிடலாம். இனி அந்த வசதியை நிறுத்த ஆப்பிள் ஐடியும், கடவுச்சொல்லும் வேண்டும்.
  •  AirDrop - உங்கள் ஐபோன்/ஐபேடிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஐபோன்/ஐபேடிற்கு புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.
  • Multitasking - ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று அப்ளிகேசன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம். Home பட்டனை இரண்டு முறை அழுத்தினால் திறந்திருக்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.
  • iTunes Radio - ரேடியோ மூலம் பாடல்கள் கேட்கலாம். உங்களுக்கென்று தனி ரேடியோ ஸ்டேசன் உருவாக்கலாம்.
மேலும் Safari உலவியையும், சிரி (Siri) அப்ளிகேசனையும் மேம்படுத்தியுள்ளது.

இவைகளை விட முக்கியமானதொரு சிறப்பம்சம் ஐஓஎஸ் 7-ல் நேரடியாக தமிழில் எழுத தமிழ் உள்ளீடு வசதி உள்ளது.

ஐஓஎஸ் 7 வெளியீடு:

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பை இன்று வெளியிடுகிறது. அமெரிக்க நேரப்படி காலையில் வெளியிடுவதால் அநேகமாக இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகலாம்.

எந்தெந்த சாதனங்களில் இதனை பெறலாம்?

  • iPhone 4 மற்றும் அதற்கு பிந்தைய ஐபோன்கள்
  • iPod Touch 5th Generation
  • iPad 2, iPad Retina Display, iPad Mini
இன்றே இதை நிறுவலாமா?

புதிய இயங்குதளத்தை நிறுவும்போது எந்தவித பிரச்சனைகளும் வரலாம். பரவாயில்லை என்றால் உடனே நிறுவலாம். இல்லை என்றால் இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து நிறுவுவது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்பு பட்டியல்களை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு Settings > General > Software Update பகுதிக்கு சென்று இயங்குதளத்தை அப்டேட் செய்துக் கொள்ளலாம்.

2 கருத்துக்கள்:

  1. சலாம்,

    நல்ல தகவல்...பொறுத்திருந்து பார்ப்போம் ஆப்பிள் பின்னுக்கு போகிறதா இல்லை ஜெயிக்கிறதா என!!!

    என் தளத்தில் இன்று: ஊதா கலரு ரிப்பன்
    tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    பயனுள்ள தகவல். ஜசாக்கலாஹ்

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers