மோட்டோ எக்ஸ் (Moto X) - கூகுளின் சொந்த மொபைல்


கூகுள் நிறுவனம் மோடோரோலா நிறுவனத்தை முன்பு வாங்கியது தெரியும். விலைக்கு வாங்கியதில் இருந்தே அனைவருக்கும் எழுந்த முக்கிய கேள்வி, "கூகுள் எப்படிப்பட்ட முதன்மை மொபைலை (Flagship) உருவாக்கும்?". அந்த கேள்விக்கு விடை தான் - Moto X.

மோட்டோ எக்ஸ் - Moto X:

மோடோரோலா நிறுவனத்தை வாங்கிய கூகுள் நிறுவனம் நேற்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதி Moto X என்ற புதிய ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகப்படுத்தியது.

இதன் சிறப்பம்சங்கள்:

Operating System  Android 4.2.2 (Jelly Bean)
Display  4.7 inch (720 x 1280 pixels) AMOLED capacitive touch screen
Camera  10MP rear camera with "Clear Pixel", 2MP front camera
Processor  1.7 GHz X8 Mobile Computing System
RAM  2GB RAM
Internal Memory  16/32 GB Internal Memory
External Memory  No
Sim  Nano Sim
Battery  Li-Ion 2200 mAh battery
Features 3G, 4G, NFC, WiFi, Bluetooth, GPS, Java, Micro USB 2.0

  • மோடோ எக்ஸ் மொபைல் உறைகள் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பகுதி இரண்டு கலர்களிலும், பின் பகுதி 18 கலர்களிலும் வருகிறது. நமக்கு பிடித்தவாறு தேர்வு செய்துக் கொள்ளலாம்.
  • மோடோ எக்ஸ் கேமரா 10 மெகாபிக்ஸல் என்றாலும் இது "Clear Pixel" என்னும் தொழில்நுட்பம் கொண்டது. இதன் மூலம் குறைந்த வெளிச்சம் கொண்ட பகுதிகளிலும் துல்லியமான படங்களை எடுக்க முடியும்.
  • Quick Camera - கேமராவை பயன்படுத்த நீங்கள் மொபைலை சிறிது சுழற்றினாலே போதும். கேமரா ஆன் ஆகிவிடும்.
  •  இந்த மொபைலை நீங்கள் உங்கள் குரல் மூலமாகவே இயக்கலாம்.
  • Active Display - பொதுவாக நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 66 தடவை மொபைலை எடுத்துப் பார்ப்பதாக கூகுள் சொல்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் திரையை பார்ப்பதற்கு பட்டனை அழுத்துகிறோம். அதனை தவிர்க்க Active Display முறையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைலை பாக்கெட்டில் இருந்து எடுத்தாலோ, தலைகீழாக திருப்பினாலோ திரை தெரியும்.
விலை மற்றும் வெளியீடு:

மோட்டோ எக்ஸ் மொபைல் அமெரிக்காவில் இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதம் விற்பனைக்கு வரும். 16GB மொபைல் 200$ விலையிலும், 32GB மொபைல் 250$ விலையிலும் கிடைக்கும்.

மோட்டோ எக்ஸ் - ஐபோனுக்கு மாற்றா?

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களைப் பார்க்கும் போது மோட்டோ எக்ஸ் மொபைல் சிறந்த ஆண்ட்ராய்ட் மொபைலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் ஆப்பிள் ஐபோனுக்கு மாற்றாக அமையாது. அதற்கு கூகுள் இன்னும் அதிகம் பயணிக்க வேண்டும்.

3 கருத்துக்கள்:

  1. விலை கம்மியாத்தெரியுதே?

    ReplyDelete
  2. Thanks for this info. This would definitely be a hit market as the price and specs are attractive.

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers