2013-ல் சிறந்த 10 பதிவுகள்


2013-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை முடிக்கவிருக்கிறது. தற்போதைய உலக கலாசாரத்தின்படி டாப் டென் 2013 என்று எதையாவது பட்டியலிட்டாக வேண்டும். அதன்படி 2013-ல் சிறந்த பத்து பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

தமிழ் நுட்பம் - தொழில்நுட்ப இணையதளம்


புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் நுட்பம் இணையதளம். இந்த தளத்தில் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், ஆண்ட்ராய்ட், ஆப்பிள், ஐஒஎஸ், புதிய மொபைல், டேப்லட்  என்று அனைத்துவிதமான தொழில்நுட்ப செய்திகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...


வலைப்பதிவர்கள் பலருக்கு தங்கள் ப்ளாக் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ப்ளாக் மூலம் சம்பாதிக்க கூகுளின் ஆட்சென்ஸ் (Google Adsense) நமக்கு உதவுகிறது. ஆனால் தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் வைக்க அனுமதி இல்லை.

நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?


நீங்கள் ப்ளாக்கர் மூலம் கஸ்டம் டொமைன் வாங்கி பயன்படுத்துகிறீர்களா? ஆம் என்றால் கூகுள் சமீபத்தில் செய்த மாற்றத்தைப் பற்றி அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் டொமைனை நீங்கள் இழக்க நேரிடலாம்.

நவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு


மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கிய பிறகு முதல் மொபைலாக மோட்டோ எக்ஸ் என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் சிறிய பதிப்பாக Moto G ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் நவம்பர் 15-ல் வெளியிடுகிறது.

இன்னும் அறிவிக்கப்படாத இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 4.5 இன்ச் திரை, 5 மெகாபிக்ஸல் கேமரா வசதிக் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தைக் கொண்டது என்று தெரியவருகிறது. மேலும் இது குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Update: மோட்டோரோலாவின் Moto G மொபைல் வெளியானது

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் வெளியிடப்பட்டது

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது. 512MB Ram-ஐக் கொண்ட முதல்நிலை மொபைல்களுக்கு ஏற்றதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13)


தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (30/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!


நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம்’ என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம்.

22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது


LG நிறுவனம் சமீபத்தில் தனது முதன்மை (Flagship) மொபைலாக LG G2 மொபைலை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க மொபைல் ஆப்பரேடரான Sprint நிறுவனம் அடுத்த மாதம் இதனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது.

பிட்.. பைட்.. மெகாபைட்..! (23/10/13)


தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (23/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

விண்டோஸ் 8.1:

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் எட்டு இயங்குதளத்தின் முதல் அப்டேட்டாக பல புதிய வசதிகளுடன் Windows 8.1 பதிப்பை வெளியிட்டுள்ளது. அதிகமான பயனாளர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த பதிப்பில் Start பட்டனை மீண்டும் கொண்டுவந்துள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள் இந்த பதிப்பை Store அப்ளிகேசனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

பேஸ்புக் செயலிழந்தது!

கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் தளம் சில மணி நேரங்கள் செயலிழந்தது. இதனால் அதிகமானவர்களுக்கு நிலைத்தகவல்களை பகிரவோ, மற்றவர்களின் பகிர்வுகளை விருப்பமிடவோ முடியாமல் இருந்தது. பராமரிப்பு செய்யும்போது பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேஸ்புக் செய்தியாளர் கூறினார்.


நோக்கியாவின் முதல் டேப்லட்:


நேற்று அபுதாபியில் நடைப்பெற்ற Nokia World நிகழ்ச்சியில் நோக்கியா நிறுவனம் 6 இன்ச் அளவிலான Nokia Lumia 2520 என்ற தனது முதல் டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இத்துடன் 20MP கேமராவுடன் கூடிய Lumia 1520 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இவைகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது.

மேலும் விண்டோஸ் மொபைல்கலுக்கான Instagram அப்ளிகேசன் விரைவில் வரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.


புதிய பேஸ்புக் லைக் பட்டன்:


பேஸ்புக் நிறுவனம் புதிய லைக் பட்டனை சோதித்து வருகிறது.


புதிய ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் ரெடினா மேக்புக் ப்ரோ:
ஆப்பிள் நிறுவனம் நேற்று நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபேடினை (iPad Air) அறிமுகம் செய்தது. இது முன்பைவிட மெல்லியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Retina திரையுடன் கூடிய புதிய ஐபேட் மினியையும் (iPad Mini) அறிமுகம் செய்தது.

மேலும் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவிலான இரண்டு Retina MacBook Pro மடிக்கணினிகளையும் அறிமுகம் செய்துள்ளது.


இவைகள் பற்றிய முழுவிவரங்களுக்கு www.apple.com


BBM for iOS & Android:

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான Blackberry Messenger அப்ளிகேசன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. வெளியான எட்டுமணி நேரத்தில் ஐந்து மில்லியன் பயனாளர்களுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்ய வேண்டும்.

BBM for Android | BBM for iOS

இந்த வார சிரிப்பு படம்:


Log Out!

Hunt For Hint 3 - புதிர் வேட்டை!


2011-ஆம் ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்கள் இணைந்து Hunt For Hint என்னும் வித்தியாசமான புதிர் போட்டியினை தொடங்கினார்கள். இரண்டு வருடம் தொடர்ந்து மூன்றாம் வருடமாக தற்போது Hunt For Hint 3 புதிர் விளையாட்டை இன்று தொடங்கியுள்ளார்கள்.

கூகுள் விளம்பரத்தில் உங்கள் புகைப்படம்


கூகுள் நிறுவனம் தனது சேவை விதிமுறைகளில் (Terms of Service) சில முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி கூகுள் விளம்பரங்களில் உங்கள் புகைப்படத்தை கூகுள் பயன்படுத்த முடியும். இதற்கு Shared Endorsements என்று பெயரிட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)


கிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய புதிய தகவல்களை இங்கே பார்ப்போம். கிட்காட் பதிப்பு வெளியாகும்வரை புதிய தகவல்கள் இந்த பதிவில் புதுப்பிக்கப்படும்.

பிட்.. பைட்.. மெகாபைட்..! (09/10/13)


நீண்ட இடைவெளிக்கு பிறகு பிட்.. பைட்.. மெகாபைட்..! பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வார தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

தெருப்பார்வைக்கு வருகிறது தாஜ்மஹால்


உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் தாஜ்மஹால் விரைவில் கூகுள் தெருப்பார்வைக்கு வருகிறது. இனி வீட்டிலிருந்தே எந்த செலவும் இல்லாமல் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கலாம்.

அட்டகாசமான கூகுள் பார்


தொழில்நுட்ப உலகில் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் ஒன்று புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லது புதுமையாக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். முன்னது புது வசதிகளை கொடுப்பது. பின்னது புது தோற்றத்தைக் கொடுப்பது. தற்போது கூகுள் இரண்டாவதை செய்திருக்கிறது.

ஹேப்பி பர்த்டே கூகுள்!


கூகுள் - இணையத்தில் இதன் ராஜாங்கம் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் இன்று தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?


ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.

பதிவை கூகுள் ப்ளஸ்ஸில் தானாக பகிரலாம்

நம்முடைய பதிவுகளை பதிந்தவுடன் முதலில் நாம் செய்வது திரட்டி மற்றும் சமூக இணையதளங்களில் பகிர்தல். அதிகமானோர் தானியங்கியாக நம் பதிவுகளை பகிர விரும்புவோம். கூகுள் ப்ளஸ் தளம் தற்போது இந்த வசதியை தந்துள்ளது.

ஐபோன், ஐபேட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!


கூகுள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஐபோன், ஆண்ட்ராய்டுக்கான Google Authenticator என்ற அப்ளிகேசன் உள்ளது. இதனால் கூகுள் கணக்கு மூலம் நீங்கள் எந்த அப்ளிகேசன்களிலாவது உள்நுழைந்தால் Google Authenticator அப்ளிகேசன் மூலம் பிரத்யேக கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழையலாம்.

பேஸ்புக்கில் என்ன பேசுறாங்க?பேஸ்புக் தளம் வலைப்பதிவின் பரிமாணம் என்றே சொல்லலாம். அதனால் தானோ என்னவோ அதிகமான பதிவர்களுக்கு பதிவு எழுதும் ஆர்வம் குறைந்து பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வலைப்பதிவைவிட பேஸ்புக்கில் பகிரும் செய்திகள் அதிக நபர்களை சென்றடைகிறது.

பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்கலாம்


பேஸ்புக் தளம் சமூக வலைத்தள போட்டியில் முதல் நிலையை தக்கவைக்க தொடர்ந்து புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. தற்போது பேஸ்புக்கில் பொதுவில் (Public) பகிர்பவைகளை நமது பதிவுகளில் இணைக்கும் வசதியைத் தந்துள்ளது.

மோட்டோ எக்ஸ் (Moto X) - கூகுளின் சொந்த மொபைல்


கூகுள் நிறுவனம் மோடோரோலா நிறுவனத்தை முன்பு வாங்கியது தெரியும். விலைக்கு வாங்கியதில் இருந்தே அனைவருக்கும் எழுந்த முக்கிய கேள்வி, "கூகுள் எப்படிப்பட்ட முதன்மை மொபைலை (Flagship) உருவாக்கும்?". அந்த கேள்விக்கு விடை தான் - Moto X.

வாங்க.... ஏலியனுக்கு உதவி செய்யுங்க....

UFO என்பதன் விரிவாக்கம் Unidentified Flying Object என்பதாகும் .அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் .அவ்வப்போது வானில் சில விசித்திரமான பொருட்கள் பறந்து சென்று மறைந்து விடும்.அவையே ufo என குறிப்பிடப்படுகின்றன. இது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்லும் வாகனம் என்று நம்பப்படுகிறது.

தலைப்பை முதலில் எழுதுங்கள்...!


பதிவிற்கு இடைவெளி விட்டு இரண்டு நாள் கழிந்த நிலையில் ப்ளாக்கரில் தற்போது ஏற்பட்ட மாற்றம் பற்றி ஒரு குட்டி அப்டேட்! இந்த மாற்றத்தை நீங்கள் பிரச்சனை என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக!

இண்டிப்ளாக்கர் விருதும், சின்ன இடைவெளியும்


இண்டிப்ளாக்கர் (IndiBlogger) -
தமிழில் தமிழ்மணம், இன்ட்லி, தமிழ் 10 போல ஆங்கிலத்தில் பிரபலமான இந்திய திரட்டி தளம். தற்போது இண்டிப்ளாக்கர் தளம் 2013-க்கான வலைப்பதிவு விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (22/06/2013)

Instagram for Video
புதன்கிழமைதோறும் வெளிவந்த "பிட்..பைட்..மெகாபைட்" பகுதி இனி சனிக்கிழமைதோறும் வெளிவரும். நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

Minion Rush - மினியன்களின் அட்டகாசம்அதிகமான அனிமேசன் படங்களில் கதாநாயகப் பாத்திரங்களைவிட அதில் வரும் துணைப்பாத்திரங்கள் நம்மை அதிகம் ரசிக்க வைக்கும். அது போல Despicable Me என்ற ஆங்கில அனிமேசன் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் தான் மினியன்கள் (Minions).

Project Loon - கூகுளின் இணையப் புரட்சி?


இணையம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மின்னஞ்சல் பார்க்க/அனுப்ப, உறவினர்கள்/நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய, இதைவிட முக்கியமாக பேஸ்புக் பயன்படுத்த நமக்கு இணையம் அவசியம் ஆகிறது. ஆனால் இன்று உலகில் மூன்றில் இருவருக்கு வேகமான, மலிவான இணைய வசதி கிடைப்பது இல்லை.

ப்ளாக்கர் நண்பன் Version 4.0


நீங்கள் ப்ளாக்கர் நண்பன் தள பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தீர்களானால் தலைப்பைப் பார்த்ததும் இது எதைப் பற்றிய பதிவு என்று கணித்திருப்பீர்கள். ஆம், அது தான்! அதே தான்!

பிட்.. பைட்... மெகாபைட்....! (05/06/2013)


இந்த வாரம் (05/06/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

உணர்வுகளை வெளிப்படுத்த பேஸ்புக் வசதி


பேஸ்புக் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவருகிறது. நாளுக்கு நாள் புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது நம்முடைய மகிழ்ச்சி, துக்கம், சோம்பல் போன்ற உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள புதுவசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (29/05/2013)


இந்த வாரம் (29/05/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

ப்ளாக்கரில் பயனுள்ள Contact Form வசதி


நம்முடைய பதிவுகளில் வாசகர்கள் கருத்திட வசதியாக கருத்துப்பெட்டி (Comment Box) வசதி வைத்திருப்போம்(Feedback என்பதைத் தான் பின்னூட்டம் என்று சொல்ல வேண்டும் ). ஆனால் சில வாசகர்கள் தனிப்பட்ட முறையில் தம் சந்தேகங்கள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சொல்ல நினைப்பார்கள். இதற்கு Contact Form வசதி பயன்படுகிறது.

Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி


இந்த வார பிட்...பைட்...மெகாபைட்! பகுதியில் "Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது" என்று பார்த்தோம் அல்லவா? அந்த வசதியை "Hangouts" என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க!


கூகுள் நிறுவனம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது பல விளையாட்டுக்களை மறைத்து வைத்திருக்கும். தற்போதும் புதிய விளையாட்டை தனது பட தேடல் (Image Search) பக்கத்தில் வைத்துள்ளது. இதன் மூலம் படங்களை பந்தாடலாம்! :)

பிட்.. பைட்... மெகாபைட்....! (15/05/2013)


இந்த வாரம் (15/05/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

அன்னையர் தினம் - அழகிய கூகுள் டூடுல்


அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 15) கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில் சில தேர்வுகள் மூலம் நீங்கள் 27 விதமான அழகிய அன்னையர் தின டூடுல் படத்தை உருவாக்கலாம். பிறகு அதனை பிரிண்ட் கூட எடுக்கலாம்.

பாலஸ்தீனம் பிரதேசம் இல்லை, தனி நாடு!


இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீனம் நாடு பற்றி அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக கருதாமல் பிரதேசமாகவே கருதி வந்தது. கூகுளும் அதனை தனி பிரதேசமாகவே கருதிவந்தது.

ஆப்பிள் வழங்கும் 10,000$ பரிசு


ஆப்பிள் அப்ளிகேசன் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கிறது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (24/04/2013)

இந்த வாரம் (24/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பூமி தினம் கொண்டாடும் கூகுள்


இன்று ஏப்ரல் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் பூமி தினமாக (Earth Day)  கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு அனிமேசன் டூடுலை வெளியிட்டுள்ளது.

ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி


ப்ளாக்கரில் பல்வேறு கூகுள் ப்ளஸ் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் ப்ளஸ் தளம். தற்போது பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வசதிக்கு போட்டியாக ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இதனை நமது ப்ளாக்கில் வைப்பது பற்றி பார்ப்போம்.

ப்ளாக்கரில் அதிரடி மாற்றம்


ப்ளாக்கர் தளத்தில் உள்ள வசதிகளில் ஒன்று, நம்முடைய டெம்ப்ளேட்களை நம்முடைய விருப்பம் போல மாற்றி அமைக்கலாம். இதற்கு Edit HTML வசதி பயன்பட்டுவருகிறது. தற்போது இந்த Edit HTML வசதியை மாற்றியுள்ளது ப்ளாக்கர்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (10/04/2013)


இந்த வாரம் (10/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers