மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்?
தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

கடலும் கூகுளும் பின்னே ஆன்ட்ராய்டும்


எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே தெரிகிறது கடல். கடல் அலைகளால் பாறைகள் மட்டும் அல்ல, நம்முடைய சோகங்களும் சில மணி நேரங்கள் கரைந்துவிடுகிறது. "ஐயையோ! ப்ளாக்கர் நண்பனுக்கு ஏதோ ஆயிடுச்சு!" என்று நீங்கள் நினைப்பதற்குள் நாம் பதிவிற்குள்ளே அல்லது கடலுக்குள்ளே சென்றுவிடுவோம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (26/09/2012)


இந்த வாரம் (26/09/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

எச்சரிக்கை: மைக்ரோசாப்ட் பெயரில் மோசடி:

தற்போது மைக்ரோசாப்ட் பெயரில் ஒரு ஏமாற்று ஈமெயில் வந்துக் கொண்டிருக்கிறது. privacy@microsoft.com என்ற முகவரியில் இருந்து வரும் அந்த ஈமெயில், விண்டோஸ் அப்டேட் செய்யப்படவில்லை எனவும், அதற்கு ஈமெயில் முகவரியை மைக்ரோசாப்டுடன் இணைக்க வேண்டும் எனவும் சொல்லும். அப்படி வந்தால் அதனை உடனே அழித்துவிடுங்கள்.

Google News - பத்து வயது:

இணையதளங்களில் வெளிவரும் செய்திகளை திரட்டி தரும் கூகுள் சேவையான "Google News" தளம் தொடங்கப்பட்டு கடந்த 22-ஆம் தேதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்பட்ட "கூகுள் செய்திகள்" தற்போது 72 பதிப்புகளுடன், 30 மொழிகளில் இயங்குகிறது. மேலும் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகளை சேகரிக்கிறது.

இந்தியாவை ஏமாற்றிய ஆன்ட்ராய்ட்:

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களில் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்களும் உண்டு என்பது நமக்கு தெரியும். இது போன்ற அப்ளிகேசன்களால் மென்பொருள் உருவாக்குனர்கள் (App Developers) பணம் ஈட்ட முடியும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே இது போன்ற அப்ளிகேசன்களை Google Play தளத்தில் விற்க முடியும். கடந்த 22-ஆம் தேதி இந்தியாவை அந்த நாடுகளின் பட்டியலில் சேர்த்தது கூகுள். இந்திய மென்பொருள் உருவாக்குனர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் இந்தியாவை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இது பற்றி கூகுள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

அந்த  நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆப்பிள் ஐந்தும், ஐஓஎஸ் ஆறும்:

ஆப்பிளின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 5 மொபைல்கள் முதல் மூன்று நாட்களில் ஐந்து மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. மேலும் இதுவரை நூறு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன் மொபைல்கள் ஐஓஎஸ் 6 பதிப்புக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் சாப்பிடப் போகும் ஜெல்லி பீன்:

சாம்சங் மொபைலின் சமீபத்திய அறிமுகமான Samsung Galaxy S3 மொபைல்களுக்கு, ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Android 4.1 ஜெல்லி பீன் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது போலன்ந் (Poland) நாட்டு பயனாளர்கள் இதனை பெறலாம். மற்ற நாடுகளிலும் விரைவில் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Samsung Galaxy S3 மட்டுமின்றி,  Galaxy S2, Galaxy S2 LTE, Galaxy Beam,Galaxy Ace 2 ஆகிய மொபைல்களுக்கும், Galaxy Tab 2 7.0, Galaxy Tab 7.0 Plus, Galaxy Tab 2 10.1, Galaxy Note 10.1. ஆகிய டேப்லட்களுக்கும் விரைவில் வரவிருக்கிறது.

மீண்டும் களமிறங்கும் மைஸ்பேஸ்?

பேஸ்புக் தளம் வருவதற்கு முன்னால் முன்னணியில் இருந்த சமூக வலைத்தளம் மைஸ்பேஸ் (Myspace.com). பேஸ்புக் வந்த பிறகு அந்த தளம் ஆட்டம் கண்டது. 2005-ஆம் ஆண்டு 580 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட மைஸ்பேஸ் தளம், கடந்த வருடம் 35 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இந்த தளத்தை Specific Media நிறுவனத்துடன் இணைந்து வாங்கியது, அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake).

தற்போது மைஸ்பேஸ் தளம் இசையை மையமாக வைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. https://new.myspace.com/ என்ற தளத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்தால் உங்களுக்கு அழைப்பிதல் வரும். அப்படி வந்தால் நீங்கள் புதிய தோற்றத்தைப் பெற முடியும்.

வாரம்  ஒரு கேள்வி:

உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Log Out!

மீண்டும் பாடம் நடத்தும் கூகுள்


கடந்த ஜூலை மாதம் கூகுள் தளம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை நடத்தியது. இது பற்றி தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது மீண்டும் பாடம் நடத்துகிறது கூகுள். இலவசமாக நடைபெறும் இந்த பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறது.

எச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி


சமூக வலையமைப்பு தளங்களில் பேஸ்புக் தளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு வசதியான கருவியாக திகழ்கிறது. பேஸ்புக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் (Scams) நடந்தேறி வருகிறது. இவற்றிலிருந்து ஒரு சிலர் தப்பித்தாலும், ஆயிரக்கணக்கானோர் தினமும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது பேஸ்புக்கில் பரவும் ஒரு மோசடியைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்


பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போட்டிக்கு இடையே ட்விட்டர் தளமும் முன்னணியில் இருந்துக் கொண்டிருக்கிறது. சமூக இணையதளங்களின் வெற்றி அது அறிமுகப்படுத்தும் புதிய வசதிகளில் தான் இருக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் தளத்தின் Cover Photo வசதியைப் போலவே ட்விட்டர் தளமும் Header என்னும் புதிய வசதியைத் தந்துள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (19/09/2012)ஆப்பிள் ஐபோன் அறிமுகம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை தாக்கும் மால்வேர், Snapseed அப்ளிகேஷனை கூகுள் வாங்கியது ஆகிய செய்திகள் இந்த வார இணைய உலகில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளது.

எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி


நேற்று எனக்கு ஈமெயில் ஒன்று வந்தது. அது கூகுள் அனுப்பியது போலவே இருந்தது. அதில் நான் புதிய இடத்திலிருந்து "Handel"-ஐ பயன்படுத்தியதாகவும், அந்த இடத்தை என் "Handel"-லில் இணைப்பதற்கு கூகுள் கணக்கு மூலம் அமைப்புகளை மாற்றவும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (12/09/2012)

ஐபோன் 5 அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ள அரங்கு
சமீபத்தில் தான் 200-ஆவது பதிவை எழுதியது போல இருக்கிறது, அதற்குள் 250-ஆவது பதிவு வந்துவிட்டது. இந்த பதிவிற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான (???) செய்தியை இறுதியில் கூறுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் அதிகமானவர்கள் இது எதைப் பற்றியது? என்று ஓரளவு கணித்திருப்பீர்கள். ஆம்... அது தான்... அதே தான்!

ஸ்டார் ட்ரெக் மற்றும் யூட்யூப் வருமானம்


கூகுள் தளம் அவ்வப்போது அன்றைய தினங்களுக்கு ஏற்ப தனது முகப்பு பக்கத்தை சிறப்பு டூடுல்களால் (Doodle) அலங்கரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல இன்று ஸ்டார் ட்ரெக் (Star Trek) தொலைக்காட்சி தொடரின் 46-ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி அனிமேசன் டூடுலை வைத்துள்ளது.

மாயப் படம் உருவாக்குவது எப்படி?
மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?

ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்


ஆப்பிள் - இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பழத்தை விட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். என்ன தான் ஆன்ட்ராய்ட் முன்னேறி வந்தாலும் இன்னும் முடிசூடா மன்னனாகவே இருக்கிறது. அந்த ஆப்பிளுக்கும் AntiSec ஹேக்கர்ஸ் எனப்படும் இணையக் கொள்ளையர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.

தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? #2


தமிழ்மணத்தின் ரகசியங்கள் (இப்படியும் சொல்லலாம்) பற்றி கடந்த பதிவில் பார்த்தோம் அல்லவா? தற்போது தமிழ்மணத்தில் உள்ள வேறு சில விவரங்களைப் பார்ப்போம். இந்த தகவல்கள் அதிகம் புதியவர்களுக்காக மட்டும்.

ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?


சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ட்விட்டர் தளம். பேஸ்புக், கூகுள் ப்ளஸ் என்று பல தளங்கள் வந்தாலும் தனக்கென்ற தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் ட்விட்டர் தளம், நாம் பகிரும் ட்வீட்களை நம்முடைய பதிவில் இணைக்கும் வசதியையும் தருகிறது.

சாம்சங் அபராதம்: 30 வண்டியில் காசுகள் (நம்பாதீங்க!)


இணையத்தில் தொழில்நுட்ப செய்திகளை வாசித்து வருபவர்களுக்கு ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கிடையே நடந்து வரும் "பேடன்ட் யுத்தம் (Patent War)" பற்றி தெரிந்திருக்கும். அதில் சமீபத்தில் ஆப்பிள் சாதனங்களை காப்பியடித்ததற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 5800 கோடி ரூபாய்) அபராதம் சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers