திரட்டிகளும், சில ரகசியங்களும் - (பகுதி-1)நம்முடைய பதிவுகளை அதிகமான வாசகர்களிடம் சென்றடையச் செய்வதற்கு Aggregators எனப்படும் திரட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில திரட்டிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை மட்டும் நாம் பார்ப்போம். இது புதியவர்களுக்கான பதிவாகும்.

ஹேப்பி பர்த்டே நண்பா! - கூகுள் புதிய வசதி


கூகுள் தளம் இதுவரை பயனாளர்களின் பிறந்த நாள் அன்று கூகுள் முகப்பு தோற்றத்தில் "பிறந்தநாள் வாழ்த்து" படத்தைக் (Doodle) காட்டி வந்தது. தற்போது நமது நண்பர்களின் பிறந்தநாள் குறித்து நமக்கு நினைவூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..கடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ் என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி? என்று பார்த்தோம் அல்லவா? அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ  வைப்பது எப்படி என்று பார்ப்போம். 

சென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets

இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் தமிழ் பதிவர்கள் சந்திப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலந்துக் கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. என்னை போன்று கலந்துக் கொள்ள முடியாதவர்களுக்காக இங்கே விழாவின் நேரடி ஒளிபரப்பு.

ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]


ப்ளாக்கர் பயனாளர்கள் அனைவரும் நமது ப்ளாக்கில் தெரியும் Nav Bar (Navigation Bar) பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த Navbar பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனை எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

கணினியில் மென்பொருளை நீக்க [Video Post]


நம்முடைய கணினிகளில் அதிகமான மென்பொருள்கள் இருந்தால் கணினியின் வேகம் குறைந்துவிடும். அதனால் தேவையில்லாத மென்பொருள்களை அவ்வப்போது நீக்கிவிடுவது நல்லது. எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

சாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க


நம்முடைய கணினிகளில் பலவிதமான ஃபைல்களை வைத்திருப்போம். அவற்றில் முக்கியமான சிலவற்றை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மறைத்து வைக்க நினைப்போம். அப்படி தேவையான ஃபைல்களை அல்லது ஃபோல்டர்களை எளிதாக மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]


இணையத்தில் ஏதாவது தேட வேண்டுமென்றால் நாம் முதலில் செல்வது கூகுள் தளத்திற்கு தான். அத்தகைய கூகுள் பல்லாயிரக்கணக்கான பயனாளர்களால் தூக்கி எறியப்படுகிறது. வாருங்கள் நாமும் கூகுளை தூக்கி எறியலாம்.

உங்கள் வயது Youtube தளத்தில் தெரிகிறது


நமது Youtube Channel-ஐ பிரபலப்படுத்தும் வகையில் Subscribe Widget-ஐ நம் ப்ளாக்கில் வைப்பது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? இன்றும் யூட்யூப் பற்றிய பதிவு தான். யூட்யூபில் பலர் கவனிக்கத் தவறிய ஒன்று, உங்கள் வயது உங்கள் Youtube Channel-ல் தெரிகிறது. அதை மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க


யூட்யூப் - வீடியோக்களுக்கான கூகிளின் பிரத்யேக தளம். வீடியோக்களை பார்க்க மட்டுமின்றி, நமக்கென்று தனி சேனல் (Channel) கொடுத்து நம் வீடியோக்களைப் பதிவேற்றும் வசதியையும் தருகிறது. நம்முடைய யூட்யூப் சேனலுக்கான Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

ப்ளாக்கில் ப்ரொபைல் ஐடியை மறைக்க


சில நேரங்களில் நாம் இரண்டு ஜிமெயில் ஐடி வைத்திருப்போம். நம்முடைய ப்ளாகின் ஈமெயில் ஐடி வேறாகவும் நாம் உபயோகிக்கும் ஈமெயில் ஐடி வேறாகவும் இருக்கும். இதனால் பல சிரமங்கள் ஏற்படும். ஆக நாம் நம்முடைய ப்ளாகின் ஈமெயில் ஐடியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், சுலபமாக மாற்றி விடலாம். ஆனால் அதனால் புரொஃபைல் வியூ போன்றவற்றில் வேண்டாத மாற்றங்கள் ஏற்படும். இதை எவ்வாறு சமாளிப்பது என்று இங்கே விளக்குகிறேன்.

உங்களிடம் abc@gmail.com மற்றும் xyz@gmail.com என்று இரண்டு ஐடி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இப்போது ப்ளாக் abc@gmail.com ல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை xyz@gmail.com க்கு மாற்ற வேண்டும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்,

www.blogger.com/home க்குப் போய் குறிப்பிட்ட ப்ளாகின் setting க்குப் போக வேண்டும். அதில் Basic என்பதின் உள்ளே Permissions என்று இருக்கும். அதில் + Add authors என்று இருப்பதை க்ளிக் செய்து இன்னொரு ஈமெயில் ஐடி கொடுத்து Invite authors கொடுத்தால் Invitation போய் விடும். பிறகு அதைக் க்ளிக் செய்து Activate செய்தால் வேலை முடிந்தது. இதில் Author உரிமை, Admin உரிமை என்று இரண்டு இருக்கிறது. Author என்றால் எழுத மட்டும் செய்யலாம். Admin என்றால் டெம்ப்ளேட் மாற்றம் போன்ற எல்லா வேலைகளையும் செய்ய முடியும். தேவைப்பட்டதை நாம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை நான் சொன்னது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இவ்வாறு நாம் செய்து விட்டால் நம் ப்ளாக் டீம் ப்ளாகாக மாறி விடும். ஆக, நம்முடைய பழைய புரொஃபைல் காணாமல் போய் அதற்கு பதிலாக இரண்டு புரொஃபைலுடைய லின்க்கும் புகைப்படம் இல்லாமல் Contributors என்று காட்டும்.

புது ஈமெயில் ஐடியில் புரொஃபைல் வியூ நிச்சயம் குறைவாகவே இருக்கும். ஆக நாம் பழையதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு வழி இருக்கிறது. நாம் About Me ஐ நீக்கி விட வேண்டும். அதற்கு பதிலாக, Layout போய், Add a Gadget கொடுத்து, Html/Javascript ல் கீழ்கண்ட கோடிங்கை பேஸ்ட் செய்து Save செய்ய வேண்டும். சிவப்பு நிறத்தில் இருப்பதை மட்டும் தேவைப்படி மாற்றிக் கொள்ளவும்.

<div class="widget-content">
<a href="http://www.blogger.com/profile/10416524153221162278"><img alt="My Photo" class="profile-img" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg" height="80" width="60" /></a>
<dl class="profile-datablock">
<dt class="profile-data">
<a class="profile-name-link" href="http://www.blogger.com/profile/10416524153221162278" rel="author" style="background-image: url("//www.blogger.com/img/logo-16.png");">
SUMAZLA/சுமஜ்லா
</a>
</dt>
<dd class="profile-data">Erode, Tamil Nadu, India</dd>
<dd class="profile-textblock">SIMPLE AND HUMBLE</dd>
</dl>
<a class="profile-link" href="http://www.blogger.com/profile/10416524153221162278" rel="author">View my complete profile</a>
<div class="clear"></div>


src= என்னும் இடத்தில் உங்கள் பழைய ப்ளாகர் புரொஃபைலில் இருக்கும் படத்துக்கான url ஐக் கொடுத்து விடுங்கள். View My Complete Profile என்று இருப்பதைக் க்ளிக் செய்தால் address bar ல் உங்கள் ப்ளாகின் ஐடி தெரியும். எந்த புரொஃபைல் தெரிய வேண்டுமோ அதற்கான ஐடியை இங்கே தரவேண்டும்.

www.veethi.com நடத்தும் VEETHI VISUAL CONTEST புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.போட்டி பற்றிய அறிவிப்பு இங்கே: http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491

சகோ. சுமஜ்லா
About the Guest Author:
சகோதரி சுமஜ்லா அவர்கள் ‘என்’ எழுத்து இகழேல் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். மேலும் இவர் veethi.com தளத்தில் SEO Consultant ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.

நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புபதிவுகள் மூலம் மட்டுமே அறியப் பெற்ற பதிவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொருட்டு அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வருகிறது. இது பதிவர்களிடையே அன்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும். இதற்கு முத்தாய்ப்பாக சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யுங்கள்
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

  • நீங்கள் இதுவரை சந்தித்திராத பல பதிவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
  • வெளியூரிலிருந்து  வரும் பதிவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  •  சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
  • சகோதரி  சசிகலா சங்கர் அவர்களின் "தென்றலின் கனவு" நூல் வெளியிடப்படுகிறது.
  • டிஸ்கவரி புக் பேலஸ் சிறிய புத்தக கண்காட்சி பதிவர்களுக்காக 10% தள்ளுபடியுடன் நடைபெறவுள்ளது.
  •  பதிவர்களுக்கு வருமானம் வரும் வழிகள் (How to earn by ads) குறித்து "மக்கள் சந்தை" தளத்தின் சீனிவாசன் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
  • மக்கள்சந்தை.காம் சார்பாக  "நான் பதிவன்" என்ற ஒரு லட்ச ரூபாய் பரிசுப்போட்டி அறிவிக்கப்படவுள்ளது.

இவை  எல்லாவற்றையும் விட முக்கியமாக  "மதிய உணவு" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. :) :) :)

மேலும் விவரங்களுக்கு நண்பர் மதுமதி அவர்களின் தூரிகையின் தூறல் தளத்தை பார்க்கவும். மறக்காமல் அங்கே உங்கள் வருகையினை பதிவு செய்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததில் வருத்தமே! நீங்கள் இந்தியாவில் இருந்தால் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

டிஸ்கி: இந்த பதிவில் தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. அதனை விரைவில் இதே பதிவில் சொல்கிறேன்.மறக்காமல் திரும்ப வாருங்கள்!

விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு...


ஒரு பொருளை திறனாய்வு செய்து அதில் உள்ள சிறப்பம்சங்கள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் ஆகியவற்றை எழுதுவது விமர்சனம் ஆகும். இது புத்தகம் (Book Review), சினிமா (Movie Review), வீடியோ கேம் (Video Game Review), மின்னணு சாதனங்கள் (Electronic Product Review), மொபைல் (Mobile Review), மென்பொருள்கள் (Software Review) என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி நாம் எழுதும் விமர்சனங்களை கூகுள் தேடலில் பிரபலமாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

கூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)


லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களை (Olympics Games) முன்னிட்டு கூகுள் நேற்று வெளியிட்ட தடகளப் போட்டியை (Hurdle Game) விளையாடுவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? இன்று கூகுள் கூடைப்பந்தை விளையாடும் வகையில் DOODLE-ஐ உருவாக்கியுள்ளது.

ப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template


ப்ளாக்கர் தளம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அது நமது வலைப்பதிவுகளை மொபைல்களில் பார்க்க வசதியாக Mobile Template- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

வாங்க ஒலிம்பிக்கில் ஓடலாம்!


லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதனை முன்னிட்டி கூகிளில் நாள்தோறும் ஒவ்வொரு விளையாட்டைக் குறிக்கும் வகையில் DOODLE வெளியிட்டு வருகிறார்கள். இன்று Google Doodle-ல் தடகளப் போட்டிக்கான (Hurdle) Doodle இடம்பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை நாம் விளையாடும் வகையில் உருவாக்கியுள்ளார்கள்.

ரியல் ப்ளேயர் (Real Player Free) - Software Review

 
இன்று முதல் எனக்கு பிடித்த மற்றும் பயனுள்ள மென்பொருள்களை (Softwares) அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். Software Review என்று சொன்னாலும், விமர்சனம் எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது. மென்பொருள்களில் உள்ள சிறப்பம்சங்களையும், சில குறிப்புகளையும் மட்டும் பகிர்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இறைவன் நாடினால் பின்னால் ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்.

ப்ளாக்கர் டொமைனை புதுப்பிப்பது எப்படி?


பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவில் கூகுள் மூலம் Custom Domain வாங்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? அது ஒரு வருடத்திற்கு மட்டும் தான். அதற்குள் புதுப்பிக்கவில்லை என்றால் உங்கள் டொமைன் காலாவதி ஆகிவிடும். தற்போது அதனை புதுப்பிப்பது பற்றி பார்ப்போம்.

6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்


இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் அடையாளமாக இருப்பது மின்னஞ்சல்கள் ஆகும். கூகிள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவைகளை இலவசமாக (ஆனால் மறைமுக விலையுடன்) தருகின்றன. அவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹாட்மெயில் (Hotmail) என்ற பெயரில் வழங்கி வந்த மின்னஞ்சல் சேவையினை அவுட்லுக் (Outlook) என்ற புதிய பெயரில் வழங்குகிறது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers