பிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்


பல பதிவுகளில் சொன்னது போல, கூகுள் ப்ளஸ் வசதியை கிட்டத்தட்ட தனது எல்லா சேவைகளிலும் அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். அதில் ஒரு பகுதியாக ப்ளாக்கரில் சமீப காலமாக பல கூகிள் ப்ளஸ் வசதியை கொண்டு வந்தது.

அலெக்சாவில் ப்ளாக்கை இணைப்பது எப்படி?


இணையதளங்களை வரிசையிடும் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா தளம் பற்றியும், அலெக்ஸா Widget-ஐ நம் ப்ளாக்கில் இணைப்பது பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். அந்த Widget-ஐ வைக்காமலும் நம் தளத்தை அலெக்சாவில் இணைக்கலாம். அது பற்றி பார்ப்போம்.

ரீமிக்ஸ் செய்ய 40 லட்சம் வீடியோக்கள்


Creative Commons என்பது (வீடியோ உள்பட) நம் படைப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான சேவையாகும். யூட்யூப் தளம் கடந்த ஆண்டு Creative Commons videos என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது.  இதன் மூலம் நாம் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை மற்றவர்கள் பயன்படுத்தவும், மாற்றங்கள் செய்து வெளியிடவும் அனுமதி கொடுக்கலாம். இதற்கு Creative Commons Attribution license என்று பெயர்.

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸில் மட்டுறுத்தல்


பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் ப்ளாக்கரில் இணைப்பது பற்றி பார்த்தோம் அல்லவா?அதில் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் (Moderate) செய்யும் வசதியையும் பேஸ்புக் தளம் நமக்கு வழங்குகிறது. அதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்


பேஸ்புக் வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை கூகுள் நன்கு உணர்ந்துள்ளது. பேஸ்புக்கிற்கு போட்டியாக கொண்டு வந்துள்ள கூகுள் ப்ளஸ் தளத்தை கிட்டத்தட்ட தனது எல்லா தயாரிப்புகளிலும் கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கூகுள் தேடல் முடிவுகளை கூகுள் ப்ளஸ் நண்பர்களுடன் பகிரும் வசதியை தந்துள்ளது.

தமிழ்10 நூலகத்தில் என் பதிவுகள்


திரட்டிகளில் முன்னணியில் இருக்கும் தமிழ்10 திரட்டி தற்போது தமிழ்10 நூலகம் என்னும் தளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் பதிவர்களின் பதிவுகளை அவர்கள் அனுமதியுடன் மின்னூலாக (PDF ஃபைலாக) மாற்றி, இலவசமாக வாசகர்கள் பதிவிறக்கும் வசதியை தருகின்றனர்.

யூட்யூபில் முகத்தை மறைக்கலாம்


நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற்கு தான். இது வரை பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளம், இணையதளங்களில் வாசகர்கள் கருத்திடுவதற்கு வசதியாக FACEBOOK COMMENTS BOX என்னும் வசதியை தந்துள்ளது. இதனை நமது ப்ளாக்கில் சேர்ப்பது எப்படி? என்று பார்ப்போம்.

ப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்


ப்ளாக்கர் நண்பன் தளத்தில் நண்பர் ப்ளேட்பீடியா கார்த்திக் அவர்கள் Search Engine Optimization (SEO) பற்றிய ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற விருந்தினர் பதிவை பகிர்ந்திருந்தார். அதனை ப்ளாக்கர் தளம் படித்ததோ, என்னமோ? அவர் சொன்ன முறையை எளிமையாக செய்வதற்கான வசதியை தற்போது அளித்துள்ளது.

புகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்


சமூக வலைத்தளங்களின் அதிகம் செய்யப்படும் செயல்களில் ஒன்று புகைப்படங்களை பகிர்தல். பேஸ்புக் தளத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 மில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இதனால் புகைப்படங்களை திருத்தம் செய்து அழகுபடுத்தும் வசதியை பல தளங்கள் தருகின்றன.

தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள்

நல்லா பாருங்க, கூகுள்காரங்களே ஆப்பிள் லேப்டாப் பயன்படுத்துறாங்க..

தேடு இயந்திரங்களில் முன்னிலையில் இருக்கும் கூகுள், தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை நடத்துகிறது. இலவசமாக நடைபெறும் இந்த பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறது.

வேண்டாம் விட்ஜியோ (widgeo Counter)

நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. அவற்றில் நான் அதிக வலைப்பதிவுகளில் கண்ட ஒன்று “விட்ஜியோ (Widgeo Counter)”.

ஆப்பிள் iOS 6 சிறப்பம்சங்கள்


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது iOS இயங்குதளத்தின் ஆறாவது பதிப்பின் அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய பதிப்பு வரும் செப்டம்பர் மாதம் பயனாளர்களுக்கு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் ஐபோனின் அடுத்த பதிப்பாக iPhone 5 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. iOS ஆறாம் பதிப்பின் சிறப்பம்சங்கள் பற்றி சகோ. சின்னமலை அவர்கள் எழுதியுள்ளதை இங்கே பார்ப்போம்.

புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?


தலைப்பை பார்த்ததும் புதிய பதிவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். புதிதாக வலைப்பூ தொடங்கியவர்கள் முதலில் தொழில்நுட்பரீதியாக என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்ப்போம். இவைகளில் பல என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (Frequently asked Questions) ஆகும்.

கூகுள் சேவைகளுக்கு மூடுவிழா


தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

ஆன்ட்ராய்ட் கேம்ஸ்களை நீக்க புதிய வழி


கடந்த பதிவில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல் பற்றி பார்த்தோம். மேலும் கூகுள் ப்ளே தளத்தில் இருந்தே Applications/Games-களை நீக்குவதற்கு கூகுள் தந்துள்ள புதிய வசதியை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி இங்கே பார்ப்போம்.

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்


நீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை மொபைலில் நிறுவுவது பற்றி அறிந்திருப்பீர்கள். கணினி மூலம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவும் வசதியையும் கூகுள் தந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.

ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean


ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் ஆன்ட்ராய்ட் பற்றிய அறிமுகத்தையும், இதுவரை வெளிவந்த பதிப்புகளின் பெயரையும் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் பதிப்புகளுக்கு உணவின் பெயரை வைக்கும் கூகுள் தற்போது ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பாக ஜெல்லி பீன் (Android 4.1 - Jelly Bean)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers