கூகுள் +1 பட்டனில் நண்பர்களின் பரிந்துரை


பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக களமிறங்கிய கூகுள் ப்ளஸ் தளம் பேஸ்புக் லைக் பட்டனுக்கு போட்டியாக கூகுள் +1 பட்டனைக் கொண்டு வந்தது நாம் அனைவரும் அறிவோம். சமீபமாக கூகுள் ப்ளஸ் ஒன் பட்டனில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் தற்போது Google +1 Recommendations என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook Application உருவாக்குவது எப்படி?


சமூக இணையதளங்களில் தனித்து விளங்குவது பேஸ்புக் தளம். நீங்கள் பேஸ்புக் பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள Facebook applications பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த பதிவில் நமது தளத்திற்கு தனியாக ஒரு பேஸ்புக் அப்ளிகேசன் உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு


SEO என்றொரு சங்கதி இருக்கிறது - Search Engine Optimization! அதாவது நமது தளத்தில் உள்ள தகவல்கள், தேடு பொறிகள் மூலம் எளிதாக கிடைத்திடுமாறு - தளத்தை வடிவமைக்கும் சூத்திரம்! இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம் - சிறந்த முறையில் SE Optimize செய்யப்பட்ட தளம் அதிகம் பேரை சென்றடையும்! ஆனால், அவ்வாறு வடிவமைப்பது எளிதா என்று நீங்கள் கேட்டால் - நிச்சயம் இல்லை! இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டுமானால் தலையணை சைஸுக்கு பெரிய புத்தகமாய் எழுத வேண்டியிருக்கும்! சரி, இருப்பதிலேயே எளிதான ஒரு ஆலோசனையைப் இந்தப் பதிவில் பார்ப்போம்!

அர்த்தமுள்ள URL முகவரி:

உங்கள் தளத்தில் உள்ள பல்வேறு பக்கங்களின் URL-களின் பெயர்களை - அந்த பக்கத்தில் என்ன தகவல் உள்ளதோ அதற்கேற்ப பொருத்தமாக வைக்க வேண்டும்! உதாரணத்திற்கு, உங்களை தொடர்பு கொள்ளுவதற்கான விவரங்கள் உள்ள பக்கத்திற்கு contact.html என தலைப்பு வைக்கலாம்! ஆனால் நீங்கள் பதிவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவின் URL முகவரியின் தலைப்பை நிர்ணயிக்கும் உரிமை உங்களிடம் இல்லை மாறாக அது உங்கள் பதிவின் தலைப்பை சார்ந்து உள்ளது! உதாரணத்திற்கு நீங்கள் Avengers படத்தின் விமர்சனம் எழுதி, பதிவின் தலைப்பை 'The Avengers - 2012 - Movie Review' என வைத்தால், பதிவின் URL தலைப்பு "avengers-2012-movie-review.html" என பொருத்தமாக வந்திடும்!

இந்த முகவரி விதிவிலக்கு ;) ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே - காரணம், ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழிகளில் டொமைன் நேம் மற்றும் URL முகவரிகள் வைக்கும் வசதி இன்னமும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை! எனவே, நீங்கள் பதிவின் பெயரை தமிழில் வைத்தால் கூகிள் ப்ளாக்கர் - தன்னிச்சையாக ஏதாவது ஒரு முகவரியை தெரிவு செய்யும்! முகவரிகளின் தலைப்பிற்கும், உங்கள் பதிவில் உள்ள தகவலிற்கும் எந்தவொரு தொடர்பும் இன்றி "1.html", "blog-post_19.html" என்று உபயோகமில்லாத ஒன்றாய் இருக்கும்!

உதாரணத்திற்கு எனது கீழ்க்கண்ட பதிவின் பெயர் முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால்,

என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி!

இதன் URL முகவரி இவ்வாறாக வந்துள்ளது:
http://www.bladepedia.com/2012/05/blog-post_16.html

பதிவின் பெயரில் ஆங்கில கலப்பு கீழ்க்கண்டவாறு இருந்தால்,
சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்!

URL முகவரியில் அந்த ஆங்கில சொற்களை காணலாம்! உண்மையில் இந்த SEO டிப்ஸ் பதிவை நான் எழுதக் காரணமாய் இருந்ததே மேற்கண்ட சலூன் பதிவுதான்! URL-இல் "sci-fi" என்ற ஆங்கில சொல் இருந்ததை கவனித்து ஆச்சரியப்பட்டு மற்ற பதிவுகளின் URL-களை ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்த உண்மை உறைத்தது!:

http://www.bladepedia.com/2012/06/sci-fi.html

சரி இதற்கு என்னதான் தீர்வு?! உண்மையில் பெரும்பாலானோர், தேடு பொறியில் தகவல்களை தேடும் போது ஆங்கிலத்தைத்தான் உபயோகிக்கிறார்கள்! உதாரணத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங் வழிமுறைகள் பற்றி தேடவேண்டுமானால், பொறுமையாய் தமிழில் யாரும் டைப் செய்து தேடுவதில்லை! மாறாக, "Online Shopping Tips" என்றே தேடுவார்கள்! எனவே, பதிவின் தலைப்பை முதலில் ஆங்கிலத்தில் வையுங்கள், பிறகு பப்ளிஷ் செய்த பின் உடனடியாக கீழ்க்கண்டவாறு எடிட் செய்து மீண்டும் தமிழில் மாற்றிக் கொள்ளலாம்! :)

Dashboard --> Posts --> பதிவை Edit செய்யவும் --> தலைப்பை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றவும் --> Update --> அவ்ளோதான்! :)

இன்னொரு முக்கிய விஷயம்! முதலில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது அதன் நீளம் 39 கேரக்டர்களை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! ஆம், அதுதான் உச்சபட்ச தலைப்பு நீளம் (.html என்பதை சேர்க்காமல்)!.அதே போல முடிந்த அளவு உங்கள் தலைப்பில் "Tamil" என்ற சொல் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் - எதற்கு என்று அறிய ப்ளாக்கர் நண்பரின் இந்த பதிவை பாருங்கள்: தமிழ் என்றால் ஆபாசமா?. உதாரணத்திற்கு, இந்த பதிவின் தலைப்பை முதலில் கீழ்க்கண்டவாறு வைக்குமாறு நண்பர் அப்துல் பாஷித்தை கேட்டுக் கொண்டேன்!

"SEO Tips Meaningful URL for Tamil Blogs"

பிறகு பப்ளிஷ் செய்த பின் உங்களுக்கு பிடித்த தமிழ் பெயராக மாற்றிக்கொள்ளுங்கள் என்ற அரிய வாய்ப்பையும் ;) அவருக்கு வழங்கினேன்! எனவே, நீங்கள் URL முகவரியில் காண்பது நான் வைத்த பெயர்! பதிவின் தலைப்பில் காண்பது 'ப்ளாக்கர் நண்பர்' வைத்த பெயர்! :) அப்புறம் என்ன தமிழ் தெரியாத யாராவது ஒருவர் "Meaningful URL for Blogs" அல்லது "SEO Tips" என்று தெரியாத்தனமாக தேடி வைத்தால் நம் தமிழ் பதிவும் அவர் தேடலில் இடம் பெற்று அவர் மண்டையை சொரிய வைக்கும்! ;)

என்ன புரிந்ததா நண்பர்களே?! :) வாழ்த்துக்கள்! நீங்கள் மேற்கண்ட பதிவை படித்ததின் மூலம் மேலும் சில SEO ஆலோசனைகளையும் பக்க விளைவுகளாக பெறுகிறீர்கள்! அவை என்ன என்று பார்ப்போம்! (யாருப்பா அங்கே தம் அடிக்க ஓடுவது?!)

2. அதிகமான Backlinks:

Backlink என்பது மற்றொரு தளத்தில் உங்கள் தளத்துக்கான இணைப்பு இருப்பது! இணைப்புக்களின் எண்ணிக்கை மற்ற தளங்களில் (குறிப்பாக பிரபல தளங்களில்) அதிகரிக்க அதிகரிக்க - உங்கள் தளத்தின் மதிப்பும், தேடு பொறியில் உங்கள் தளம் முன்னணியில் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்! அதே போல Alexa மற்றும் Google Page Rank-இல் உங்கள் தளம் முன்னேறும்! இந்த பதிவில் மட்டும் எனது ப்ளேட்பீடியா வலைப்பூவில் வெளியான மூன்று பதிவுகளின் URL-களை சுட்டிகளாக ஆங்காங்கே தெளித்துள்ளேன்! பிரபல தளமான ப்ளாகர் நண்பனில் இவ்வாறாக எனது Backlinks-இன் எண்ணிக்கையை கள்ளத்தனமாக அதிகரித்துள்ளேன்! :)

3. அருமையான Advertisement:

இதை படித்துக்கொண்டிருக்கும் ப்ளாகர் நண்பனின் - லட்சக்கணக்கான வாசக நண்பர்களிடம், ப்ளேட்பீடியா என்றொரு வலைப்பூ இருக்கிறது, அதில் கார்த்திக் என்ற ப்ளேடு பார்ட்டி படு மொக்கையாக எழுதி வருகிறார் என்ற (தமிழ்)நாட்டுக்கு தேவையான தகவலை பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்துள்ளேன்! இதன் மூலம் எனது வலைப்பூவை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்(!) வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!

இந்த முழுநீளப் பதிவை முழுதாய் படித்த வாசக நண்பர்களுக்கும், விருந்தினர் பக்கத்தில் விரிவாய் எழுத வாய்ப்பு வழங்கிய நண்பர் அப்துல் பாஷித்துக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் ப்ளேட்பீடியாவின் மனமார்ந்த நன்றிகள்! மாறாக ரொம்பவே கடித்திருந்தால் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! :)

Reference: Search Engine Optimization starter guide (PDF by GOOGLE)


கார்த்திக் சோமலிங்கா
About the Guest Author:
IT துறையில் பதினைந்து வருடங்களாக பணியாற்றி வரும் சகோ.கார்த்திக் சோமலிங்கா அவர்கள், அண்மையில் ப்ளேட்பீடியா என்ற வலைப்பூவை துவக்கி தமிழ் காமிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மொக்கை போன்ற பல பிரிவுகளில் நகைச்சுவையாக எழுதிவருகிறார்! விரைவில் கதைகளை வெளியிட்டு கலக்க போகிறார்!


நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபேட் சாதனத்தின் மூன்றாம் பதிப்பை "The New iPad" என்ற பெயரில் வெளியிட்டது. உலகமெங்கும் ஐபேடை விற்பனை செய்துவரும் ஆப்பிள், ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் போது அதன் விளம்பரத்தில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தால் தற்போது 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினொரு கோடி) அபராதம் கட்ட போகிறது.

ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?


ப்ளாக்கர் தளம் சமீபத்தில் Threaded Comments என்னும் புதிய கருத்துரை வசதியை தந்தது. அதாவது வாசகர்கள் கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. (எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? காப்பி & பேஸ்ட் from ப்ளாக்கர் நண்பன்). ஆனால் இந்த வசதி மற்ற தளங்களின் டெம்ப்ளேட்களில் (Custom Templates) சில நேரம் வருவதில்லை.

மைக்ரோசாப்டின் முதல் டேப்லட் - Surface


கணினிகளின் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மேசை கணினி (Desktop PC), மடிக்கணினி (Laptop) என்று மாறி வந்த கணினியின் அடுத்த பரிமாணமாக இருப்பது டேப்லட் (Tablet) எனப்படும் கையடக்கக் கணினியாகும். தற்போது ஆப்பிள் ஐபேட், ஆன்ட்ராய்ட் டேப்லட்கள் பிரபலமான நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் Surface என்னும் புதிய  டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க


ப்ளாக்கர் தளம் சமீபத்தில் Threaded Comments என்னும் புதிய கருத்துரை வசதியை தந்தது. அதாவது வாசகர்கள் கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. பயனுள்ள அந்த வசதியில் Reply என்னும் எழுத்துக்களுக்கு பதிலாக பட்டன் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்


நாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.

ஒரு பதிவு ஒன்பது பலன்கள்


சில சமயங்களில் ஒரு பதிவை எழுத நினைக்கும் போது இவ்வளவு சிறியதாக உள்ளதே இதை ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நினைத்தது உண்டு. அப்படி நினைத்தவற்றை தொகுத்து ஒரே பதிவாக இங்கே தந்துள்ளேன்.

ப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)


ப்ளாக்கர் நண்பன் தளம் தங்களின் அன்போடும், ஆதரவோடும் இரண்டு வருடங்களைக் கடந்து தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

மூன்றாம் ஆண்டின் முதல் பதிவான இது ப்ளாக்கர் நண்பன் தளத்தின் 200-வது பதிவாகும். இந்த பதிவில் உபயோகமாக எதுவும் சொல்ல போவதில்லை. ப்ளாக்கர் நண்பன் பற்றிய புள்ளிவிவரங்களையும், புதிய அறிவிப்பு பற்றியும்  தான் பகிர போகிறேன்.

கடந்த  ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

2010-20112011-2012
பதிவுகள்40160
பின்னூட்டங்கள்700+3550+
வருகையாளர்கள்13,000+59,580+
பக்க பார்வைகள்40,000+2,19,000+
நண்பர்கள் (Followers)200390

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அனைத்தும் அதிகரித்துள்ளது. அதற்கு வாசக நண்பர்களின் தொடர் ஆதரவு முக்கிய காரணமாகும்.

கடந்த இரண்டு வருடங்களில் அதிகமான வாசகர்களை பரிந்துரை செய்த முதல் ஐந்து தளங்கள்:

1. இன்ட்லி [கடந்த வருடத்திலும் இன்ட்லி தான் முதலிடத்தில் இருந்தது.]

2. கூகுள் [இரண்டாம் இடத்தில் கூகுள் இருப்பது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தினமும் பலர் கூகுள் தேடுபொறி மூலம் வருகின்றனர்.]

3. தமிழ்மணம் [கடந்த  வருடமும் மூன்றாம் இடத்தில் இருந்தது]

4. ப்ளாக்கர் [கடந்த வருடம் ப்ளாக்கர் டாஷ்போர்டிலிருந்து வந்தவர்களை கணக்கில் எடுக்கவில்லை]

5. தமிழ் 10 [கடந்த வருடம் நான்காவது இடத்தில் இருந்தது]
 நான்காவதாக

கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:

1. பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
2. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)
3. ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]
4. தமிழ்
5. ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி

நினைவில் நிற்கும் தருணங்கள்:

1. டெரர் கும்மி விருதுகள் 2011 போட்டியில் நான் எழுதிய சைபர் க்ரைம் - ஒரு பார்வை என்ற பதிவு விழிப்புணர்வு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது.

2. யூத்ஃபுல் விகடன் தளத்தில் வரும் குட் ப்ளாக் பகுதியில் என் பதிவு இடம் பெற்றது.

3. வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியர் பணி ஏற்றது.

4. கற்போம் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதியது.

5. என்னுடைய தமிழ் பற்றிய பதிவிற்காக நண்பர் ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய தமிழ் ரிப்பன்.

ப்ளாக்கர் நண்பன் Version 3.0:

கடந்த வருடம் version 2.0-ல் இருந்து ப்ளாக்கர் மட்டுமல்லாமல் மற்ற தொழில்நுட்ப செய்திகளையும் எழுத தொடங்கினேன் (அதனால் தான் இருநூறு பதிவை எழுத முடிந்தது). அதே போல இந்த வருடத்தில் இருந்து புதிய மாற்றத்தை செய்ய போகிறேன். இதனை பல ஆங்கில தளங்களிலும், சில தமிழ் தளங்களிலும் பார்த்திருப்பீர்கள்.

இனி ப்ளாக்கர் நண்பன் தளத்தில் Guest Posts எனப்படும் விருந்தினர் பதிவுகளும் இடம்பெறும். அதாவது நீங்கள் எழுதும் பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் உங்கள் தளத்தின் இணைப்புடன்  இலவசமாக பதியப்படும்.அதற்கான விதிமுறைகள்:

1. உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.

2. உங்கள் தளங்களிலோ, மற்ற தளங்களிலோ இடம்பெற்றிருக்க கூடாது.

3. சட்டத்திற்கு புறம்பான பதிவுகளாக இருத்தல் கூடாது.

4. கண்டிப்பாக அது தொழில்நுட்ப பதிவாக இருத்தல் வேண்டும். :) :) :)

மற்றபடி உங்கள் விருப்பம் போல் எழுதலாம். உங்கள் பதிவை பிரசுரிக்க முடியவில்லையெனில் வருத்தப்படக் கூடாது. தேவைப்பட்டால் நீங்கள் அனுப்பும் பதிவை திருத்தம் செய்து உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கப்படும்.

தற்போது விருந்தினர் பதிவு ஏற்றுக் கொள்ளப்படாது.
முதல் விருந்தினர் பதிவாக பிரபல தொழில்நுட்ப, பன்முக பதிவரின் பதிவு (இறைவன் நாடினால்) திங்கட்கிழமை வெளியாகும்.

கீழே இருப்பது காப்பி/பேஸ்ட் என்றாலும் மீண்டும் அதனை பதிவு செய்கிறேன்.

இதுவரை பின்னூட்டங்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,

என்னுடைய இந்த தளத்தின் சுட்டியை தங்கள் தளங்களின் Sidebar-லும், பதிவுகளிலும் பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,
  
இன்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும்,

எனது உளமார்ந்த   நன்றி!    நன்றி!    நன்றி!


என்றும் நட்புடன்,

ப்ளாக்கர் நண்பன் (எ) நூ.ஹ. அப்துல் பாஸித்

திருடப்பட்ட 6.5 மில்லியன் LinkedIn Passwords

linked in

LinkedIn என்பது தொழில்முறை சமூக வலையமைப்பு  (Professional Social Networking) தளமாகும். மற்ற சமூக வலையமைப்பு தளங்கள் போல பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தொழில் சார்ந்த விசயங்களை பகிர்ந்துக் கொள்வதற்கு பயன்படுகிறது. இங்கு கிடைக்கும் நண்பர்கள் மூலமாக பல நேரம் நமக்கு வேலைகள் கூட கிடைக்கலாம்.

சைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ்


ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதில் தற்போது பரவி வரும் ஃப்ளேம் வைரஸ் (Flame virus) பற்றியும் சொல்லியிருந்தேன். இது பற்றி மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் தேடிய போது சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தது.

ஃப்ளேம் வைரஸ் (Flame Virus):

ஃப்ளேம் என்பது மிகவும் நுட்பமான, பெரும் ஆபத்தை விளைவிக்கும் தீம்பொருள் (Malware) ஆகும். இது பல நாடுகளில் உள்ள நிறுவனங்களை குறிப்பாக ஈரானை தாக்கி வரும் இணைய ஆயுதம் (Cyber Weapon) ஆகும். 20MB கொள்ளளவு கொண்ட இந்த வைரஸ் தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களிலேயே மிக பயங்கரமானது ஆகும்.

ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சிகூடத்தை தாக்கியுள்ள இந்த வைரஸ் சைபர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் ரஷ்ய தொலைத்தொடர்பு அமைச்சர் இணைய ஆயுதங்களுக்கு தடை (Ban on Cyber weapons) விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்கா இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இணைய ஆயுத தடைக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் என்ன செய்யும்?

Image Credit: Reuters
 கணினியில் உள்ள மைக்ரோபோன் மூலம் பேச்சுக்களை பதிவு செய்ய முடியும், தானாக ப்ளூடூத் தொழில்நுட்பத்தை ஆன் செய்ய முடியும், நமது கணினியில் உள்ளவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப முடியும், கணினியில் உள்ள கோப்புகளை திருட முடியும். இன்னும் பல செயல்களை இந்த வைரஸால் செய்ய முடியும்.இதுவரை  உலகம் முழுவதிலும் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரையிலான கணினிகள் இந்த வைரஸால் பாத்திக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சூடான், சிரியா என மத்திய கிழக்கு நாடுகள் தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸை முதன் முதலாக கண்டுபிடித்தது ஆன்டி-வைரஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky) ஆகும். இந்த வைரஸ் ஆட்டோகேட் வரைபடங்களை (Autocad Drawings) திருடுவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் கண்டிப்பாக ஒரு நாட்டின் உதவியுடன் தான் செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

தற்போது இந்த வைரஸ் போலி Microsoft security Updates-ஆக பரவி வருகிறது. இதை உண்மை என நினைத்து நமது கணினியில் நிறுவினால் ஃப்ளேம் வைரஸ் நமது கணினியையும் தாக்கும். இந்த வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது உண்மையான Windows Security Updates செய்துள்ளது.

Image Credit: CNET
இந்த உண்மையான Update எண்: KB2718704. உங்கள் கணினியில் Automatic windows Updates வைத்திருந்தால் தானாக அப்டேட் ஆகியிருக்கும். இல்லையெனில் Control Panel => Windows Update சென்று அதனை நிறுவிக்கொள்ளுங்கள்.


மேலும் விரிவான தகவல்களுக்கு:

1. மால்வேர்' யுத்தம்! - தினமணி கட்டுரை


2. The Flame: Questions and Answers

3. Expert Issues a Cyberwar Warning

4. Iran Confirms Attack by Virus That Collects Information

Instagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்


Instagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் நாம் எடுக்கும் புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் கொடுத்து நண்பர்களுடன் பகிர்வதற்கு பயன்படுகிறது. இதனை தான் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் 5000 கோடிக்கு வாங்கியது.

ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்


அதிபயங்கர நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகத்தில் எங்கு அநியாயம் (?) நடந்தாலும் பொங்கி எழும் அமெரிக்காவின் போர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான இணையத்தாக்குதல் (Cyber Attack) தொடுப்பதற்காக உருவாக்கிய Stuxnet என்னும் வைரஸை உருவாக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு g|india


கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளை பற்றியும், இணையத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் வணிக பயனர்கள், வலை உருவாக்குநர்கள் (Web Developers) தெரிந்துக் கொள்வதற்காக அவ்வப்போது G|Days என்ற பெயரில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தும். அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கத்தை தற்போது இந்தியாவில் நடத்தப் போகிறது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers