சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்


கூகுள் தேடலின் அடுத்த பரிமாணமான Rich Snippets பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒரு பகுதியாக நமது புகைப்படத்தை கூகுளில் தெரிய வைப்பது பற்றியும் பார்த்தோம். தற்போது சமையல் குறிப்புகளைப் பற்றிய நம்முடைய பதிவுகளை Rich Snippets முறையில் கூகுளில் தனித்து தெரிய வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

அறிவது நல்லது - தமிழில் கூகிள் பாதுகாப்பு


இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி இணைய பாதுகாப்பு என்ற குறுந்தொடர் பதிவுகளில் பார்த்தோம். அதன் இறுதிப்பகுதியில் Good to Know என்ற பெயரில் கூகுள் தளம் தரும் குறிப்புகளைப் பற்றி கூறியிருந்தேன். தற்போது அந்த குறிப்புகளை எளிய தமிழில் விளக்குகிறது கூகுள்.

இந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்


கூகுள் நிறுவனம் மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வசதிகளை தந்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் வணிகர்களுக்கான ஒரு வசதி Google Places. இது வணிகர்கள் தாங்கள் வைத்திருக்கும் உணவகங்கள், அழகு நிலையங்கள், ஷோரூம்கள் போன்றவற்றை கூகுளில் பதிவு செய்வதற்கான வசதியாகும்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை (22/05/2012) தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் காலை பதினொரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம்.


1. http://tnresults.nic.in/
2. http://www.dge1.tn.nic.in/
3. http://www.dge2.tn.nic.in
4. http://results.sify.com/TamilNadu/HSC/index.php
5. http://dge3.tn.nic.in/


மொபைலில் முடிவுகளை பெற:

TN12 என்று டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு ஹால்டிக்கெட் எண்ணை டைப் செய்து 56767999 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். (இது http://www.schools9.com/ இணையதளம் வழங்கும் வசதியாகும். எஸ்.எம்.எஸ் கட்டணம் பற்றி தெரியவில்லை)

பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்


சமூக வலையமைப்புத் தளமான பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவின் NASDAQ பங்கு சந்தையில் நேற்று காலடி வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் நுழையப் போகிறது என்ற செய்தி வந்ததிலிருந்து உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. இது பற்றிய சில செய்திகளை இங்கு பார்ப்போம்.

கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph


கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகிள்.

திருடனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்பேஸ்புக் தளத்தால் ஆபத்து அதிகம் இருந்தாலும் நன்மைகளும் இருக்கத் தான் செய்கின்றன. இன்டர்நெட் சென்டரில் திருடியவர்களை சமீபத்தில் காட்டிக் கொடுத்துள்ளது பேஸ்புக். அது பற்றிய செய்தியினை இங்கே பார்ப்போம்.

செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்


பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேஸ்புக்கில் இது வரை கணினி, மொபைல்களில் இருந்து தான் பேஸ்புக் Status Update செய்திருப்போம். ஒரு மாறுதலுக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்வோமா?

இது நகைச்சுவை விளையாட்டு. யாரும் அடிக்க வரக்கூடாது.

பொதுவாக நாம் மொபைல்களில் இருந்து பேஸ்புக் ஸ்டேடஸ்அப்டேட் செய்தால் via Mobile, via iPhone, via Blackberry என்று வரும். அதற்கு பதிலாக via செவ்வாய் கிரகம், via Nokia 1100, via iPhone 5 என்பது போன்று Facebook Application நாமே உருவாக்கி செய்யலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.

முதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு சென்று Create New App என்பதை கிளிக் செய்யுங்கள்.


பிறகு App Name என்ற இடத்தில் செவ்வாய் கிரகம், Nokia 1100, iPhone5 போன்று உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கள்.

App namespace என்ற இடத்தில் ஆங்கிலத்தில் ஏதாவது கொடுங்கள். இது நீங்கள் உருவாக்கும் அப்ளிகேசனுக்கான முகவரி.

பிறகு continue என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கான அப்ளிகேசன் உருவாக்கப்படும்.


பிறகு edit icon என்பதையும் இடது புறம் உள்ள படத்தையும் தனித்தனியாக கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த படத்தை அப்லோட் செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.


மேலே உள்ளது போல வரும். அதில் App ID என்ற இடத்தில் இருக்கும் எண்ணை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.

பிறகு பின்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.

https://www.facebook.com/dialog/feed?_path=feed&app_id=439268769418013&&redirect_uri=https%3A%2F%2Fwww.facebook.com&display=popup

மேலே உள்ள சிவப்பு கலரில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் App ID எண்களைக் கொடுக்க வேண்டும்.


மேலே உள்ளது போல வரும். பெட்டியில் ஏதாவது எழுதி கீழே உள்ள share என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!செவ்வாய் கிரகத்தில் இருந்து நீங்கள் அப்டேட் செய்ததாக காட்டும்.

பிறகு  நீங்கள்அப்ப்ளிகேசன் பெயரை மாற்றினால் பழைய ஸ்டேடஸும் மாறிவிடும்.

நாளை புதன் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்யலாம். சரியா?

பேஸ்புக்கில் புது வசதி: File Sharing


பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் அதில் உள்ள குழுமங்கள் (Groups) பற்றி தெரிந்திருப்போம். இதுவரை பேஸ்புக் குழுமங்களில் தகவல்கள் (Status message), இணைப்பு (link), போட்டோ, வீடியோக்களை பகிரும் வசதி மட்டும் தான் இருந்தது. தற்போது கிட்டத்தட்ட அனைத்துவிதமான கோப்புகளையும் பகிரும் (File Sharing) வசதியை தந்துள்ளது.

அப்ளிகேசன் கடை திறக்கும் பேஸ்புக்


 அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கூகுள் , ஆப்பிள், நோக்கியா போன்ற செல்போன் நிறுவனங்கள் கடைகள் (stores) திறந்துவிட்டது. தற்போது பேஸ்புக் நிறுவனமும் Facebook App Center என்ற பெயரில் கடை திறக்கப் போகிறது. இன்னும் திறக்கபடாத அந்த கடையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

பிடிக்காத மெயில்களை தவிர்ப்பது எப்படி?


 ஜிமெயில் ஹேக் பற்றிய பதிவில் நண்பர்கள் ஃபெரோஸ் கான் அவர்களும், வைரை சதீஷ் அவர்களும் ஒரு சந்தேகம் கேட்டிருந்தனர். அதாவது நமக்கு வரும் குழும மெயில்களையோ, அல்லது வேறு மெயில்களையோ இன்பாக்ஸில் வருவதை தவிர்த்து தானாக அழிப்பது அல்லது தனி லேபில்ஸ் கொடுத்து தனியாக வைத்திருப்பது பற்றி கேட்டிருந்தனர். அதற்கு Filter வசதி நமக்கு உதவி செய்கிறது.

உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்கூகிள் இந்தியா வலைத்தளம் நமது தளங்களை சோதனை செய்வதற்காக India Site Clinic என்ற பெயரில் நல்ல வாய்ப்பை நமக்கு தருகிறது. இங்கு நம்முடைய தளங்களை சமர்ப்பித்தால் கூகிள் தேடல் தரக் குழு நம்முடைய தளங்களை ஆராய்ந்து, நம்முடைய தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள்.

ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில்/கூகுள்தகவல் தொடர்புக்கு அதிகம் பயன்படும் மின்னஞ்சல்கள் நம்முடைய பெரும்பாலான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அவைகள் எந்நேரமும் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களால் களவாடப்படலாம். நமது மின்னஞ்சல்களை பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி ஏற்கனவே ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது ஹேக் செய்யப்பட ஜிமெயில்/கூகுள் கணக்கை மீளப்பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers