கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?


 கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).

கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?


நம்முடைய கணினிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். தேவைப்படும் போது அதனை பார்ப்போம். ஆனால் வெளியிடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றால் அவற்றை பார்க்க முடியாது. லேப்டாப், மொபைல்களில் உள்ளவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு தீர்வாக வந்தது தான் மேகக் கணிமை (Cloud Computing) தொழில்நுட்பம். கூகிள் ட்ரைவ் சேவையும் இந்த தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்துகிறது.

 இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அணுக முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். பிறகு வெளியூருக்கு செல்லும்போது கூகிள் டிரைவ் மூலம் உங்கள் மொபைல்களிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம்.

இந்த  Cloud Storage சேவையினை Apple, Box.net, Dropbox, Microsoft என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தற்போது அந்த பட்டியலில் கூகிளும் சேர்ந்துள்ளது.

 Google Drive என்பது கணினி மற்றும் மொபைல்களுக்கான மென்பொருளாகும். தற்போது ஒவ்வொரு பயனாளர்களுக்கும் 5GB சேமிப்பகத்தை இலவசமாக தருகிறது. அதற்கு மேல வேண்டுமென்றால் பணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்:

  •  கூகிள் ட்ரைவ் மூலமாக தனியாகவோ, நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்.

  • ஃபைல்களை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

  • HD Video, Photoshop கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள் இல்லாமலேயே திறந்து பார்க்கலாம்.

  • கூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம்.

இன்னும்  பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எப்போதும்  போலவே தற்போதும் இந்த வசதியை சிலருக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ளதா? என்பதை பார்க்க https://drive.google.com/ என்ற முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.

 Get started with 5GB என்று இருந்தால் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். அதனை கிளிக் செய்து கணினிக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Notify Me என்று இருந்தால் இன்னும் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகவில்லை என்று அர்த்தம். அதனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கிற்கு கூகிள் ட்ரைவ் கிடைத்ததும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா?


தலைப்பை பார்த்ததும் "என்ன கேள்வி இது? யாருக்கு தான் குழந்தைகளை பிடிக்காது?" என்கிறீர்களா? உண்மை தான். நமக்கு எத்தனை கவலைகள் இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பு அவைகளை மறக்கடிக்கச் செய்துவிடும். அப்படி உங்கள் கவலைகளை (சில நிமிடங்களாவது) மறக்கச் செய்யும் புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?


 ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.

3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?


 3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை


 இணையதளங்களை அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.  "இணைய பாதுகாப்பு" பற்றி ஏற்கனவே தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். தற்போது ட்விட்டரில் பரவிவரும் வைரஸ் அல்லது எரிதங்கள் (Spam) பற்றி பார்ப்போம்.

ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா?


 ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

Instagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்Instagram என்பது நமது புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான மொபைல் மென்பொருள் ஆகும். பிரபலமான இந்த மென்பொருளை பேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 500 கோடி 5000 கோடி) கொடுத்து வாங்கியுள்ளது.

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்


 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்


கூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா? அதில் முதலும், முக்கியமானதுமான பதிவர்களாகிய உங்கள் புகைப்படத்தை கூகிள் தேடல் முடிவுகளில் பதிவின் பக்கத்தில் காட்டும் Authorship Markup பற்றி பார்ப்போம். இதன் மூலம் உங்கள் படத்தை கூகிளில் தெரியவைக்கலாம்.

இனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்


ப்ளாக்கர் தளம் புதிய வடிவில் மாறியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். இருந்தாலும் பழைய தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதியை ப்ளாக்கர் தளம் இதுவரை தந்திருந்தது. ஆனால் இன்னும் சில வாரங்களில் அனைவருக்கும் புது தளத்தையே தரவுள்ளது ப்ளாக்கர். அதன்பின் பழைய தோற்றத்தை யாரும் பயன்படுத்த முடியாது.

நம்மை முட்டாளாக்கும் கூகுள்?


 கூகுள் எப்பொழுதும் புதுப்புது வசதிகளை அடிக்கடி தந்துக் கொண்டிருக்கும். அதே சமயம் நம்மை முட்டாளாக்குவதற்கும் அது தவறவில்லை. வருடந்தோறும் நம்மை முட்டாளாக்கும் கூகுள் தற்போதும் சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி இங்கு பார்ப்போம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers