டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்


ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்திய டைனமிக் டெம்ப்ளேட்கள் (Dynamic Templates) பற்றி இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற  பதிவிலும், அதன் குறைகளைப் பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவிலும் பார்த்தோம். அதில் உள்ள முக்கிய குறையே அந்த டெம்ப்ளேட்டில் Gadget சேர்க்க முடியாதது தான். தற்போது பாதி குறையை சரி செய்துள்ளது ப்ளாக்கர்.

ஜிமெயில் வசதி மற்றும் கூகுள் Web history


 நாம் இணையத்தில் உலவும் போது சில தளங்களில் மின்னஞ்சல் (Email) முகவரிகளைக் க்ளிக் செய்தால் மின்னஞ்சல் அனுப்பும்படி இருக்கும். அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய அதனை க்ளிக் செய்தால் Default-ஆக Microsoft Outlook திறந்து அதிலிருந்து அனுப்பும்படி இருக்கும். தற்போது அது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்து நேரடியாக ஜிமெயிலில் இருந்தே மெயில் அனுப்பும் வசதியை Google Chrome தந்துள்ளது.

பதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி?


நாம் எழுதும் பதிவுகளில் மகிழ்ச்சி :) , சோகம் :( , கோபம் X( என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படி பகிரும்போது நம்முடைய உணர்வுகளை படங்களாக வெளிப்படுத்துவதற்கு Emoticons பயன்படுகிறது. இதற்கு Smileys என்றும் பெயர். அதனை ப்ளாக்கர் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

ப்ளாக் தொடங்கியாச்சு, அடுத்து?


 இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் 23-ஆம் பகுதி ஆகும். அனைத்து பகுதிகளிலும் ஒரே தலைப்பாக வைத்தால் வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்ற நண்பர்களின் ஆலோசனையை ஏற்று தலைப்பு அந்தந்த பகுதிகளில் உள்ளவற்றுக்கு ஏற்றவாறு கொடுக்கிறேன். இனி பதிவிற்கு செல்வோம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? - Word Verification [பகுதி - 22]

புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் பார்த்துவிட்டோம். பழைய டாஷ்போர்டில் உள்ள ஒரு முக்கியமான அமைவு புதிய டாஷ்போர்டில் இல்லை. அதனை பயன்படுத்துவதற்கு நாம் திரும்பவும் பழைய டாஷ்போர்டிற்கு மாற வேண்டும். அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

ப்ளாக்கை பிரபலப்படுத்த "பரிசுப்போட்டி"


நமது ப்ளாக்கை பிரபலப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடர் பதிவுகளில் பார்த்தோம். அவைகள் நாம் எந்த செலவும் இன்றி நமது பிளாக்கை பிரபலப்படுத்துவதற்கான வழிகள் ஆகும்.

கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக


கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-21]


நம்முடைய தளங்களில் பதியப்படும் புதிய பதிவுகள், கருத்துக்களை உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது. இது தமிழில் செய்தியோடை எனப்படும். அது பற்றிய அமைவுகளை இங்கு பார்ப்போம்.

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)


தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.

ரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி?


நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.

ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம்


மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணையதளம் சீன ஹேக்கர் குழுவினால் நேற்று ஹேக் செய்யப்பட்டது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் பட்டியல் கடவுச்சொற்களுடன் வெளியிடப்பட்டது.

சீனாவில்  இருந்து செயல்படும் ஹேக்கர் குழுமங்களில் ஒன்று Evil Shadow. இந்த குழு மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணைய வர்த்தக தளமான Microsoft Store தளத்தை நேற்று ஹேக் செய்தது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் விவரங்களையும், அவர்களின் கடவுச்சொற்களையும் வெளியிட்டது.


மேலும் அந்த தகவல்களை மைக்ரோசாப்ட் தளம் பாதுகாப்பற்ற (Unencrypted) முறையில் வைத்திருந்ததாகவும் அந்த ஹேக்கர் குழுமம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த தளத்தை மைக்ரோசாப்ட் தளம் திரும்பப்பெற்றுவிட்டது. ஆனால் தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளது.


மேலும் கடவுச்சொற்களை மாற்றுவது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பயனாளர்களுக்கு செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் இந்தியா தளம்  Quasar Media என்னும் இந்திய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தால் இயக்கப்படும் மற்ற தளங்களில் முக்கியமான தளங்கள்:


படங்கள் உதவி: ps.s.blog.163.com

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-20]


ப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது "Other" பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பதிவின் தலைப்பில் Bubble Comments Count

பிளாக்கர் தளங்களில் பதிவுகளின் தலைப்பில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அழகிய படத்துடன் காட்டலாம். இது Bubble Comments Count எனப்படும். சில டெம்ப்ளேட்களில் இது Default-ஆக இருக்கும். அப்படி இல்லாத தளங்களில் வைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-19]


நம்முடைய ப்ளாக் மொழியை தேர்ந்தெடுப்பதற்கும், ப்ளாக்கின் நேர மண்டலத்தை (Time Zone) தேர்ந்தெடுப்பதற்கும் Language and Formatting பகுதி பயன்படுகிறது. இதை பற்றி இங்கு பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]


நாம் பயணத்தில் இருக்கும் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ கணினியை அணுக முடியாமல் இருக்கலாம். சில நேரங்களில் ப்ளாக்கர் தளத்தை பார்க்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில் மொபைல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பதிவிடும் வசதியை ப்ளாக்கர் தந்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு


பிளாக்கர் தளம் சமீபத்தில் செய்த முகவரி மாற்றத்தினால் திரட்டிகளில் இணைப்பதிலும், சமூக தளங்களில் இணைப்பதிலும் சிறு பிரச்சனை இருந்தது. தற்போது அதற்கான முழுமையான தீர்வு கிடைத்துள்ளது. அதற்கு நிரல்களில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது.

சோதனையில் இருக்கும் புதிய Google Bar


சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய கூகுள் பார் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது புதிய Google (Navigation) Bar ஒன்றை சோதனை செய்து வருகிறது. அதனை நாம் எப்படி பெறுவது? என்பதை இங்கு பார்க்கலாம்.

பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி?


நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers