Home » Archives for March 2012
ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்
சமீபத்தில் நமது பிளாக்கை பிரபலப்படுத்துவதற்கான Giveaways என்னும் பரிசுப்போட்டி பற்றி பதிவிட்டிருந்தேன். சோதனைக்காக பரிசுப்போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன். அந்த போட்டி முடிவடைந்துவிட்டது. வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம்.
கூகுள் மாற்றங்களும், ரகசியங்களும்
இணைய ஜாம்பவான கூகுள் மிகப்பெரிய மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே! சமீபத்தில் கொண்டு வந்த Google Play பற்றி கூட பார்த்தோம். அது போன்ற பெரிய மாற்றங்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில் பல சின்ன சின்ன மாற்றங்களையும் கொண்டு வரும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
புதுசா....புத்தம் புதுசா... Google+ Button
கூகுள் என்றாலே மாற்றம் என்று அகராதியில் இடம்பெறும் அளவு நாள்தோறும் புதுப்புது வசதிகளை கூகுள் அளித்து வருகிறது. நேற்று கூட கூகுளின் Google Play பற்றி பார்த்தோம். தற்போது கூகுள் பட்டனின் தோற்றத்தினை புதுசாக மாற்றியுள்ளது.
கூகிளின் புதிய வசதி: Google Play
கூகிள் தளம் தனது ஆன்ட்ராய்ட் மார்க்கெட், கூகிள் மியூசிக், கூகிள் ஈ-புக்ஸ் ஆகிய வசதிகளை ஒன்றிணைத்து கூகிள் ப்ளே (Google Play) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கணினிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி Cloud Computing தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
தமிழ்
தமிழ் மொழி இணையம் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக பங்குபெற்று வருகிறது. கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ், கைப்பேசிகளில் தமிழ், மென்பொருள்களில் தமிழ் என்று எங்கும் தமிழ் பரவி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் சில சங்கடங்களும் ஏற்படத் தான் செய்கிறது. அது பற்றி இறுதியில் பார்ப்போம்.

