பிட்.. பைட்... மெகாபைட்....! (26/12/2012)


சுதந்திரத்தைப் பற்றி அதிகம் பேசும் நாம், சமூக வலைத்தளங்களிடமும், மொபைல் அப்ளிகேசன்களிடமும் விரும்பியோ, விரும்பாமலோ நம் சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறோம். அதைப் பற்றி கவலைக்கொள்ளாத வரை நம் பாதுகாப்பு கேள்விக்குறியே! சரி, இனி இந்த வாரம் (26/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பதிவில் நண்பர்களை குறிப்பிட புது வசதி


கூகுள் ப்ளஸ் - பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக கூகுள் களமிறக்கிய சமூக வலைத்தளம். நிச்சயமாக கூகுள் ப்ளஸ் தளத்தை பேஸ்புக்குடன் ஒப்பிட முடியாது. பேஸ்புக் என்பது தனி ஒரு தளம் ஆகும். அதில் பயனர்கள் விரும்பி இணைகின்றனர்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (19/12/2012)


இணையத்தைப் பொருத்தவரை "இலவச சேவை" என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இலவசத்திற்கும் நாம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ விலைக் கொடுக்கிறோம். அதிலும் அதிகமாக நாம் கொடுக்கும் விலை, நம்முடைய தனியுரிமை (Privacy). சரி, இனி இந்த வாரம் (19/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

12-12-12 ஸ்பெஷல் பிட்.. பைட்... மெகாபைட்....!


நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் 12-12-12 தேதியான இன்று, 12 பகுதிகளைக் கடந்து 13-ஆவது பிட்...பைட்...மெகாபைட்...! பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த சிறப்பு பகுதியில் கடந்த வாரம் இணையத்தில் நடந்தவைகளை மேலோட்டமாக பார்ப்போம்.

Google+ Community உருவாக்குவது எப்படி?


சமூக இணையதளங்களின் போட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த போட்டியின் காரணமாக அவைகள் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது கூகுளின் சமூக தளமான கூகுள் ப்ளஸ் பேஸ்புக் க்ரூப் போன்று Google+ Community என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (05/12/2012)


இந்த வாரம் (05/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பதிவர்களுக்காக புதிய கூகுள்+ Followers Gadget


கூகுள் ப்ளஸ் தளம் வலைத்தளங்களுக்காக கூகுள் ப்ளஸ் பேட்ஜை முன்பு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நமது தளத்திற்கு வரும் வாசகர்கள் எளிதாக நமது கூகுள் ப்ளஸ் பக்கத்தினை பின்தொடரலாம். முன்பு பின்தொடர்பவர்களில் ஐந்து புகைப்படங்களை மட்டுமே காட்டியது. தற்போது பேஸ்புக் லைக் பாக்ஸ் போலவே மேம்படுத்தப்பட்ட புதிய ஃபால்லோவர்ஸ் கேட்ஜட்டை (Google+ Followers Gadget) அறிமுகப்படுத்தியுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (28/11/2012)


இந்த வாரம் (28/11/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க

 
ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது


இன்டர்நெட் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கூகுள் தான். ஜிமெயில், யூட்யூப், ஆட்சென்ஸ் என்று எண்ணற்ற வசதிகளுடன் இணையத்தில் முன்னணியில் இருக்கிறது கூகுள் நிறுவனம். மிகுந்த பாதுகாப்புடன் செயல்படும் கூகுளின் பாகிஸ்தான் தளத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (21/11/2012)


இந்த வாரம் (21/11/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!


நமக்குள்ளே எழும் கேள்விகள் தான் எத்தனை எத்தனை? எல்லாம் தெரிந்தவனும் இல்லை, ஒன்றும் தெரியாதவனும் இல்லை! நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லுவோம், தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்போம். கொஞ்சம் மொக்கையா இருக்கோ? சரி நேரிடையாக பதிவிற்கு செல்வோம்.

பதிவர்களுக்கான பேஸ்புக் வசதி - Debugger


பேஸ்புக் லைக் பட்டன், பேஸ்புக் ஃபேன் பேஜ், பேஸ்புக் லைக் பாக்ஸ் என்று இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளைத் தருகிறது பேஸ்புக் தளம். தற்போது நாம் பார்க்கப் போவது அதிகம் பேருக்கு தெரியாத பயனுள்ள பேஸ்புக் வசதி - Facebook Debugger.

பிட்.. பைட்... மெகாபைட்....! (07/11/2012)

கடந்த இரு வாரங்களாக வேலைப்பளு காரணமாக அதிகம் எழுத முடியவில்லை. புதன்கிழமை வந்ததும் தான் எழுத தோன்றுகிறது. இந்தவாரம் (07/11/2012) தொழில்நுட்ப செய்திகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம்


ஜிமெயில் எளிதாக மெயில் அனுப்புவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (31/10/2012)

விண்டோஸ் 8
இந்த வாரம் (31/10/2012) தொழில்நுட்ப உலகில் பல புதிய வரவுகளும், முக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றைப்பற்றிய சிறு தகவல்களை இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Update:

இது  இன்ட்லி தளத்தினரால் நடைப்பெற்ற தவறு இல்லை. இன்ட்லி தளத்தினர் www.mikemerritt.me/ என்ற தளத்தில் இருந்து TinyTips என்னும் நிரலை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிரல் மாறியிருக்கிறது. இதற்கான காரணத்தை www.mikemerritt.me/ தளத்தினரிடம் தான் கேட்கவேண்டும்,

இன்ட்லி நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பியுள்ளேன், பதில் வந்ததும் சொல்கிறேன்.

Update 2 (11:05pm IST, 24/10/2012):

 இன்ட்லி தளத்தினர் follower gadget நிரலில் Mike Meritt- தளத்தின் நிரல் இருக்கும் ஹோஸ்ங்கிற்கு நேரடியாக இணைப்பு கொடுத்திருக்கின்றார்கள். இதற்காக  www.mikemerritt.me தளத்தின் ஓனர் தான் வேண்டுமென்றே அந்த படத்தை இணைத்துள்ளார். அவரித் தொடர்புக் கொண்ட போது சொன்னார். அவரிடம் தற்போது அந்த படத்தை நீக்குமாறும், அவகாசம் கொடுக்குமாறும் கேட்டுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.

இன்ட்லி தளத்தினருக்கும் மெயில் அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.

Update 3 (11:25pm IST, 24/10/2012):

 www.mikemerritt.me தளத்தின் ஓனர் தற்காலிகமாக அந்த ஆபாச படத்தை நீக்கியுள்ளார். இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் நீக்க சொல்லியுள்ளார். இல்லையென்றால் மீண்டும் அந்த ஆபாச படத்தை வைத்துவிடுவார்.

Update 4 (1:35am IST, 27/10/2012):

 Mike Merritt கொடுத்த கேடு முடிந்தது. தற்போது மீண்டும் பழையபடி ஆபாச படம் வந்துவிட்டது. இதுவரை இன்ட்லி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. எந்த தளத்திலாவது அந்த ஆபாச படத்தைப் பார்த்தால் மறக்காமல் அந்த தளத்தின் நிர்வாகியிடம் இது பற்றி சொல்லி நீக்க சொல்லுங்கள்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (24/10/2012)


கடந்த வார 'பிட்.. பைட்... மெகாபைட்....!' பகுதி செய்திகளில் சிலவற்றின் Follow-Up செய்திகளையும், ஆப்பிள் பற்றிய ஸ்பெசல் செய்திகளையும், மேலும் சில இணைய செய்திகளையும் இந்த வாரம் பார்ப்போம்.

முகவரியை சுருக்குவதும், கண்காணிப்பதும்


இணையதள முகவரிகளை சுருக்குவதற்கு URL Shortening Service என்று பெயர். இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. தற்போது கூகுள் மூலம் முகவரிகளை சுருக்குவது பற்றியும், அதனை கண்காணிப்பது பற்றியும் பார்ப்போம்.

கூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்?


கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்.... (17/10/12)

இந்த வாரம் (17/10/12) இணையத்தில் நடைப்பெற்ற முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

Fearless Felix - விண்வெளி சாகசம்:ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவர் பூமியிலிருந்து 1,27,000 அடி உயரத்தில் இருந்து, அதாவது விண்வெளியின் விளிம்பிலிருந்து குதித்து சாதனைப் படைத்துள்ளார். எந்தவித இயந்திர உந்துதல்கள் இன்றி ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்த முதல் மனிதன் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

இந்த சாகசத்திற்கு ஸ்பான்சர் வழங்கிய Red Bull நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பியது. இந்த ஒளிபரப்பை அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 8 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்.

Samsung Galaxy SIII Mini:

கடந்த வாரம் சொன்னது போல சாம்சங் நிறுவனம் Samsung Galaxy SIII Mini மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 இன்ச் திரை, 5MP கேமராவுடன் கூடிய இந்த மொபைலில் ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பான ஜெல்லி பீன் இயங்குதளம் உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 25,000 ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள், கூகுளை மிஞ்சிய பேஸ்புக்:

மிகவும் மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் பேஸ்புக் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடத்தில் இருந்த கூகுள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ல் ஐபேட் மினி?


ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி தயாரித்து வருவதாக இணையத்தில் செய்தி வரும் வேளையில், வரும் அக்டோபர் 23-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆப்பிள் அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பிதழில் "We’ve got a little more to show you" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமாக இது ஐபேட் மினி பற்றிய அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு முதலிடம் - வருத்தமான செய்தி:

1. India 16.1%
2. Italy 9.4%
3. USA 6.5%
4. Saudi Arabia 5.1%
5. Brazil 4.0%
6. Turkey 3.8%
7. France 3.7%
8. South Korea 3.6%
9. Vietnam 3.4%
10. China 3.1%
11. Germany 2.7%
12. United Kingdom 2.1%
Other 36.5%

கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் கணக்கின்படி ஸ்பாம் ஈமெயில்கள் அனுப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக கணக்கெடுப்பில் ஸ்பாம் மெயில்களில் 16.1% சதவீத மெயில்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகின்றது. அதாவது சராசரியாக ஆறு ஸ்பாம் மெயில்களில் ஒன்று இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றது.

இதற்கு அர்த்தம் இந்தியர்கள் அதிகமான ஸ்பாம் மெயில்கள் அனுப்புகிறார்கள் என்பதில்லை. இந்தியாவில் உள்ள அதிகமான கணினிகள் மால்வேர்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கணினிகள் மூலம் இணையக் குற்றவாளிகள் ஸ்பாம் மெயில்களை அனுப்பி பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு காரணம் மால்வேர் பற்றிய விழிப்புணர்வு இந்தியர்களிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி நெக்சஸ் மொபைல்?


சோனி மொபைல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து Sony Nexus X என்னும் மொபைலை தயாரிப்பதாக இணையத்தில் செய்தி நிலவுகிறது.சோனி நிறுவனம் இதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.

தீக்குச்சிகள் - A Stop Motion Movie (விளம்பரம்):Stop Motion Movie என்பது ஒரு பொருளை சிறு, சிறு அசைவுகளாக புகைப்படங்கள் எடுத்து, பிறகு அதனை ஒன்றிணைத்து அனிமேசன் வீடியோவாக மாற்றுவதாகும். மேலே உள்ள வீடியோ பதிவுலக நண்பர் மணிநேசன் அவர்களின் ஒரு கனவு முயற்சி ஆகும்.

வாரம்  ஒரு கேள்வி:

"வாரம் ஒரு கேள்வி" பகுதி அவசியமா?

உங்கள் பதில்களை பின்னூட்டங்களில் தெரிவயுங்கள்.

Log Out!

பதிவர்களுக்கு பிளாக்கர் தந்த அதிர்ச்சி


இன்று ப்ளாக்கர் தளத்தை திறந்த பல பதிவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். காரணம் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இருந்த தங்கள் ப்ளாக்கின் பக்க பார்வைகள் (Pageviews) திடீரென்று பூஜ்யத்திலிருந்து தொடங்கியது தான். காரணம் என்ன?

பின்னூட்டங்களை வரிசையிட Version 2.0


ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிடுவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது ப்ளாக்கரில் Threaded Comments முறையில் உள்ள பின்னூட்டங்களை வரிசைப் படுத்துவது பற்றி பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (10/10/2012)

நாற்காலிகள் பேஸ்புக் போன்றது
இந்த வாரம் (10/10/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும்  இங்கே காணலாம்.

பதிவிற்கு தொடர்பில்லாத தலைப்பு


இதனைப் பற்றி எழுத வேண்டும் என கடந்த ஒரு மாதமாக நினைத்து வருகிறேன், ஆனால் இப்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. நாம் எதைப்பற்றி எழுதுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல தலைப்பு வைப்போம். பொதுவாக அந்த தலைப்பை க்ளிக் செய்தால் அந்த பதிவிற்கே செல்லும். ஆனால் தலைப்பை க்ளிக் செய்தால் பதிவிற்கு தொடர்பில்லாத வேறொரு முகவரிக்கு செல்லுமாறு வைக்கும் வசதி ப்ளாக்கரில் உள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (03/10/2012)


இந்த வாரம் (03/10/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளில் சிலவற்றை மட்டும்  இங்கே காணலாம்.

வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்

தமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்?
தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

கடலும் கூகுளும் பின்னே ஆன்ட்ராய்டும்


எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே தெரிகிறது கடல். கடல் அலைகளால் பாறைகள் மட்டும் அல்ல, நம்முடைய சோகங்களும் சில மணி நேரங்கள் கரைந்துவிடுகிறது. "ஐயையோ! ப்ளாக்கர் நண்பனுக்கு ஏதோ ஆயிடுச்சு!" என்று நீங்கள் நினைப்பதற்குள் நாம் பதிவிற்குள்ளே அல்லது கடலுக்குள்ளே சென்றுவிடுவோம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (26/09/2012)


இந்த வாரம் (26/09/2012) இணையத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

எச்சரிக்கை: மைக்ரோசாப்ட் பெயரில் மோசடி:

தற்போது மைக்ரோசாப்ட் பெயரில் ஒரு ஏமாற்று ஈமெயில் வந்துக் கொண்டிருக்கிறது. privacy@microsoft.com என்ற முகவரியில் இருந்து வரும் அந்த ஈமெயில், விண்டோஸ் அப்டேட் செய்யப்படவில்லை எனவும், அதற்கு ஈமெயில் முகவரியை மைக்ரோசாப்டுடன் இணைக்க வேண்டும் எனவும் சொல்லும். அப்படி வந்தால் அதனை உடனே அழித்துவிடுங்கள்.

Google News - பத்து வயது:

இணையதளங்களில் வெளிவரும் செய்திகளை திரட்டி தரும் கூகுள் சேவையான "Google News" தளம் தொடங்கப்பட்டு கடந்த 22-ஆம் தேதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்பட்ட "கூகுள் செய்திகள்" தற்போது 72 பதிப்புகளுடன், 30 மொழிகளில் இயங்குகிறது. மேலும் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகளை சேகரிக்கிறது.

இந்தியாவை ஏமாற்றிய ஆன்ட்ராய்ட்:

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களில் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்களும் உண்டு என்பது நமக்கு தெரியும். இது போன்ற அப்ளிகேசன்களால் மென்பொருள் உருவாக்குனர்கள் (App Developers) பணம் ஈட்ட முடியும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே இது போன்ற அப்ளிகேசன்களை Google Play தளத்தில் விற்க முடியும். கடந்த 22-ஆம் தேதி இந்தியாவை அந்த நாடுகளின் பட்டியலில் சேர்த்தது கூகுள். இந்திய மென்பொருள் உருவாக்குனர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் இந்தியாவை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இது பற்றி கூகுள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

அந்த  நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆப்பிள் ஐந்தும், ஐஓஎஸ் ஆறும்:

ஆப்பிளின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 5 மொபைல்கள் முதல் மூன்று நாட்களில் ஐந்து மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. மேலும் இதுவரை நூறு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன் மொபைல்கள் ஐஓஎஸ் 6 பதிப்புக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் சாப்பிடப் போகும் ஜெல்லி பீன்:

சாம்சங் மொபைலின் சமீபத்திய அறிமுகமான Samsung Galaxy S3 மொபைல்களுக்கு, ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Android 4.1 ஜெல்லி பீன் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது போலன்ந் (Poland) நாட்டு பயனாளர்கள் இதனை பெறலாம். மற்ற நாடுகளிலும் விரைவில் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Samsung Galaxy S3 மட்டுமின்றி,  Galaxy S2, Galaxy S2 LTE, Galaxy Beam,Galaxy Ace 2 ஆகிய மொபைல்களுக்கும், Galaxy Tab 2 7.0, Galaxy Tab 7.0 Plus, Galaxy Tab 2 10.1, Galaxy Note 10.1. ஆகிய டேப்லட்களுக்கும் விரைவில் வரவிருக்கிறது.

மீண்டும் களமிறங்கும் மைஸ்பேஸ்?

பேஸ்புக் தளம் வருவதற்கு முன்னால் முன்னணியில் இருந்த சமூக வலைத்தளம் மைஸ்பேஸ் (Myspace.com). பேஸ்புக் வந்த பிறகு அந்த தளம் ஆட்டம் கண்டது. 2005-ஆம் ஆண்டு 580 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட மைஸ்பேஸ் தளம், கடந்த வருடம் 35 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இந்த தளத்தை Specific Media நிறுவனத்துடன் இணைந்து வாங்கியது, அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake).

தற்போது மைஸ்பேஸ் தளம் இசையை மையமாக வைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. https://new.myspace.com/ என்ற தளத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்தால் உங்களுக்கு அழைப்பிதல் வரும். அப்படி வந்தால் நீங்கள் புதிய தோற்றத்தைப் பெற முடியும்.

வாரம்  ஒரு கேள்வி:

உலவியை திறந்ததும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த தளம்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Log Out!

மீண்டும் பாடம் நடத்தும் கூகுள்


கடந்த ஜூலை மாதம் கூகுள் தளம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை நடத்தியது. இது பற்றி தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது மீண்டும் பாடம் நடத்துகிறது கூகுள். இலவசமாக நடைபெறும் இந்த பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறது.

எச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி


சமூக வலையமைப்பு தளங்களில் பேஸ்புக் தளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு வசதியான கருவியாக திகழ்கிறது. பேஸ்புக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் (Scams) நடந்தேறி வருகிறது. இவற்றிலிருந்து ஒரு சிலர் தப்பித்தாலும், ஆயிரக்கணக்கானோர் தினமும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது பேஸ்புக்கில் பரவும் ஒரு மோசடியைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்


பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போட்டிக்கு இடையே ட்விட்டர் தளமும் முன்னணியில் இருந்துக் கொண்டிருக்கிறது. சமூக இணையதளங்களின் வெற்றி அது அறிமுகப்படுத்தும் புதிய வசதிகளில் தான் இருக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் தளத்தின் Cover Photo வசதியைப் போலவே ட்விட்டர் தளமும் Header என்னும் புதிய வசதியைத் தந்துள்ளது.

பிட்.. பைட்... மெகாபைட்....! (19/09/2012)ஆப்பிள் ஐபோன் அறிமுகம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை தாக்கும் மால்வேர், Snapseed அப்ளிகேஷனை கூகுள் வாங்கியது ஆகிய செய்திகள் இந்த வார இணைய உலகில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளது.

எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி


நேற்று எனக்கு ஈமெயில் ஒன்று வந்தது. அது கூகுள் அனுப்பியது போலவே இருந்தது. அதில் நான் புதிய இடத்திலிருந்து "Handel"-ஐ பயன்படுத்தியதாகவும், அந்த இடத்தை என் "Handel"-லில் இணைப்பதற்கு கூகுள் கணக்கு மூலம் அமைப்புகளை மாற்றவும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (12/09/2012)

ஐபோன் 5 அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ள அரங்கு
சமீபத்தில் தான் 200-ஆவது பதிவை எழுதியது போல இருக்கிறது, அதற்குள் 250-ஆவது பதிவு வந்துவிட்டது. இந்த பதிவிற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான (???) செய்தியை இறுதியில் கூறுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் அதிகமானவர்கள் இது எதைப் பற்றியது? என்று ஓரளவு கணித்திருப்பீர்கள். ஆம்... அது தான்... அதே தான்!

ஸ்டார் ட்ரெக் மற்றும் யூட்யூப் வருமானம்


கூகுள் தளம் அவ்வப்போது அன்றைய தினங்களுக்கு ஏற்ப தனது முகப்பு பக்கத்தை சிறப்பு டூடுல்களால் (Doodle) அலங்கரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல இன்று ஸ்டார் ட்ரெக் (Star Trek) தொலைக்காட்சி தொடரின் 46-ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி அனிமேசன் டூடுலை வைத்துள்ளது.

மாயப் படம் உருவாக்குவது எப்படி?
மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?

ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்


ஆப்பிள் - இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பழத்தை விட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். என்ன தான் ஆன்ட்ராய்ட் முன்னேறி வந்தாலும் இன்னும் முடிசூடா மன்னனாகவே இருக்கிறது. அந்த ஆப்பிளுக்கும் AntiSec ஹேக்கர்ஸ் எனப்படும் இணையக் கொள்ளையர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.

தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? #2


தமிழ்மணத்தின் ரகசியங்கள் (இப்படியும் சொல்லலாம்) பற்றி கடந்த பதிவில் பார்த்தோம் அல்லவா? தற்போது தமிழ்மணத்தில் உள்ள வேறு சில விவரங்களைப் பார்ப்போம். இந்த தகவல்கள் அதிகம் புதியவர்களுக்காக மட்டும்.

ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?


சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ட்விட்டர் தளம். பேஸ்புக், கூகுள் ப்ளஸ் என்று பல தளங்கள் வந்தாலும் தனக்கென்ற தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் ட்விட்டர் தளம், நாம் பகிரும் ட்வீட்களை நம்முடைய பதிவில் இணைக்கும் வசதியையும் தருகிறது.

சாம்சங் அபராதம்: 30 வண்டியில் காசுகள் (நம்பாதீங்க!)


இணையத்தில் தொழில்நுட்ப செய்திகளை வாசித்து வருபவர்களுக்கு ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கிடையே நடந்து வரும் "பேடன்ட் யுத்தம் (Patent War)" பற்றி தெரிந்திருக்கும். அதில் சமீபத்தில் ஆப்பிள் சாதனங்களை காப்பியடித்ததற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 5800 கோடி ரூபாய்) அபராதம் சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.

திரட்டிகளும், சில ரகசியங்களும் - (பகுதி-1)நம்முடைய பதிவுகளை அதிகமான வாசகர்களிடம் சென்றடையச் செய்வதற்கு Aggregators எனப்படும் திரட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில திரட்டிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை மட்டும் நாம் பார்ப்போம். இது புதியவர்களுக்கான பதிவாகும்.

ஹேப்பி பர்த்டே நண்பா! - கூகுள் புதிய வசதி


கூகுள் தளம் இதுவரை பயனாளர்களின் பிறந்த நாள் அன்று கூகுள் முகப்பு தோற்றத்தில் "பிறந்தநாள் வாழ்த்து" படத்தைக் (Doodle) காட்டி வந்தது. தற்போது நமது நண்பர்களின் பிறந்தநாள் குறித்து நமக்கு நினைவூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..கடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ் என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி? என்று பார்த்தோம் அல்லவா? அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ  வைப்பது எப்படி என்று பார்ப்போம். 

சென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets

இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் தமிழ் பதிவர்கள் சந்திப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலந்துக் கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. என்னை போன்று கலந்துக் கொள்ள முடியாதவர்களுக்காக இங்கே விழாவின் நேரடி ஒளிபரப்பு.

ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]


ப்ளாக்கர் பயனாளர்கள் அனைவரும் நமது ப்ளாக்கில் தெரியும் Nav Bar (Navigation Bar) பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த Navbar பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனை எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

கணினியில் மென்பொருளை நீக்க [Video Post]


நம்முடைய கணினிகளில் அதிகமான மென்பொருள்கள் இருந்தால் கணினியின் வேகம் குறைந்துவிடும். அதனால் தேவையில்லாத மென்பொருள்களை அவ்வப்போது நீக்கிவிடுவது நல்லது. எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

சாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க


நம்முடைய கணினிகளில் பலவிதமான ஃபைல்களை வைத்திருப்போம். அவற்றில் முக்கியமான சிலவற்றை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மறைத்து வைக்க நினைப்போம். அப்படி தேவையான ஃபைல்களை அல்லது ஃபோல்டர்களை எளிதாக மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers