ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-13]


கடந்த பகுதியில் Layout பக்கத்தில் உள்ளவற்றில் சிலவற்றை பார்த்தோம். தற்போது அதே பக்கத்தில் உள்ள Gadget-களை பற்றி பார்ப்போம். கேட்ஜட் என்பது நமது ப்ளாக்கில் வைக்கப்படும் சின்ன சின்ன பயன்பாடுகள் ஆகும். இது விட்ஜெட் (Widget) என்றும் அழைக்கப்படும்.

ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்..


அன்பு நண்பர்களே! அருமை சகோதரிகளே! ப்ளாக்கர் நண்பன் தளம் தற்போது டாட் காமிற்கு மாற்றப்பட்டுள்ளது. இனி http://bloggernanban.blogspot.com என்ற முகவரிக்கு பதிலாக www.bloggernanban.com என்ற புதிய முகவரியில் இயங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் பேஸ்புக் டைம்லைன்


சமீபத்தில் ஃபேஸ்புக் தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்.

ப்ளாக்கரில் புதிய கூகுள் ப்ளஸ் வசதி


ப்ளாக்கர் தளத்தை கூகுள் ப்ளஸ் தளத்துடன் இணைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக ப்ளாக்கர் தளத்திற்கும், கூகுள் ப்ளஸ் தளத்திற்கும் ஒரே ப்ரொஃபைல் பக்கத்தை பயன்படுத்தும் வசதி பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது அடுத்தக்கட்டமாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-12]


Layout பகுதி உங்கள் ப்ளாக்கில் புதிய புதிய கேட்ஜெட்களை (Gadget) வைப்பதற்கும், அதனை ஒழுங்குப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இந்த பகுதியில் மாற்றம் செய்வதற்கு கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

ஜிமெயிலில் கூகுள் ப்ளஸ் வசதிகள்


கூகுள் ப்ளஸ் தொடங்கியதிலிருந்து  பல்வேறு மாற்றங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் தளம். மேலும் தனது தளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருகிறது. ஏற்கனவே ஜிமெயிலில் சில கூகுள் ப்ளஸ் வசதிகளை அளித்துள்ள கூகுள் தளம், தற்போது பல பயனாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து மேலும் சில வசதிகளை ஜிமெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-11]

கடந்த பகுதியில் சொன்னது போல Template Designer என்பது நம்முடைய ப்ளாக்கை வடிவமைப்பதற்கு ப்ளாக்கர் தளம் தந்துள்ள கூடுதல் வசதியாகும். இதில் ஐந்து விதமான வசதிகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-10]


நமது ப்ளாக்கை நம் விருப்பப்படி வடிவமைக்க நமக்கு உதவுவது Layout மற்றும் Template பகுதிகள் ஆகும். முதலில் Layout பகுதியை பற்றி விரிவாக பார்ப்போம். நீங்கள் பழைய டாஷ்போர்டை பயன்படுத்தி வந்தால் அதில்  Layout என்பதற்கு பதிலாக Design என்று இருக்கும்.

Google Bar-ஐ 3 உலவிகளில் மிக எளிதாக பெறசமீபத்தில் கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள Google bar பற்றியும், அதனை க்ரோம் உலவியில் உடனடியாக பெற்றுக்கொள்வது பற்றியும் பார்த்தோம். (என்னையும் சேர்த்து) இன்னும் பலருக்கு அந்த வசதி வரவில்லை. தற்போது அவ்வசதியை ஃபயர்பாக்ஸ் (Firefox), க்ரோம் (Chrome) , இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் (Internet Explorer) உலவிகளில் மிக எளிதாக எப்படி பெறுவது? என்று பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-9]

Image Credit: www.extramortgages.com/

பதிவு எழுதுவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை (Statistics) அறிந்துக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய ப்ளாக்கை மேம்படுத்த உதவும்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]


வலைப்பதிவுகளில் (Blogs) முக்கியமான ஒன்று, பின்னூட்டங்கள் (Comments). நாம் எழுதும் பதிவுகளைப் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், பதிவு பிடித்திருந்தால் பாராட்டவும், பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்  இவ்வசதி பயன்படுகிறது. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?


 கடந்த பதிவில் கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar பற்றி  பகிர்ந்தேன் அல்லவா? இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar


கூகிள் என்பதற்கு அகராதியில் "மாற்றம்" என்ற பொருளையும் சேர்த்துவிடலாம். அந்த அளவிற்கு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூகிள் தேடல், ஜிமெயில் போன்ற தளங்களின் மேலே கருப்பு நிற பட்டையைக் கொண்டு வந்தது அல்லவா? அதன் தோற்றத்தை தற்போது மாற்றியுள்ளது.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-7]

 
ப்ளாக்கில் ஒவ்வொரு பதிவாக பகிரும் போதும் முகப்பு பக்கத்தில் மாறிக் கொண்டே வரும். About Me, Contact Me போன்று எப்பொழுதும் நிலையாக இருக்கும் பக்கங்களை (Static Pages) உருவாக்குவது பற்றி இப்பகுதியில் காண்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-6]


ப்ளாக் தொடங்குவது பற்றிய இத்தொடரில் மேலும் சிலவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
  

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5]


ப்ளாக் ஒன்றை நாம் உருவாக்கியப் பின் மற்றவர்களிடம் அதனை அறிமுகப்படுத்துவதற்கு முன் ப்ளாக்கர் பற்றி நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். ப்ளாக்கரில் உள்ள அமைவுகளைப் பற்றி இனி பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-4]


ப்ளாக் தொடங்குவது பற்றியும், புதிய பதிவு எழுதுவது பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். தற்போது ப்ளாக்கர் ப்ரொஃபைல் (Blogger Profile) பற்றி பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-3]கடந்த  பகுதியில் புதிய ப்ளாக் உருவாக்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? தற்போது புதிய பதிவு எழுதுவது பற்றியும், அதில் உள்ள வசதிகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

blog logo


கடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இதுவரை ப்ளாக் தொடங்கிய பிறகு செய்ய வேண்டியவைகளைப் பற்றித் தான் எழுதி வந்தேன். இணையத்தில் புதிதாக வரும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில் ப்ளாக் தொடங்குவது பற்றி முடிந்தவரை முழுமையாக எழுதலாம் என எண்ணியுள்ளேன். இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு என்பதால் அதிகம் பேர் அறிந்திருக்கும் தகவல்களாகத் தான் இருக்கும்.

புதிய பொலிவுடன் யாஹூ தேடல்இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்துக் கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகிள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகிள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது. சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகிள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்


சுமார்  63 மொழிகளில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவும் Google Translate பற்றி ஏற்கனவே தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி என்னும்  பதிவில் பார்த்தோம். அந்த பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பிரபலப் பதிவுகளில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்பிள் ஐபோன்களிலும் தமிழாக்கம் செய்யும் வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..


கூகிள் பிளஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ள கூகிள்+ பக்கத்தை பற்றியும், அதனை நம் தளத்திற்கு உருவாக்குவது எப்படி? என்றும் கடந்த பதிவில் பார்த்தோம். தற்போது பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்ற கூகிள்+ பேட்ஜ் (Google+ Badge) நமது தளத்தில் எப்படி வைப்பது? என்று பார்ப்போம். இதன் மூலம் கூகுள் பிளஸ் பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்கச் செய்யலாம்.

கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages


பேஸ்புக் தளத்திற்கு மாற்றாக களமிறங்கியுள்ள கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது Facebook Fan Pages-க்கு மாற்றாக Google+ Pages என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Facebook Fan Page போன்று கூகிள் ப்ளஸ்சிலும் தனிப்பக்கம் உருவாக்கலாம்.

கூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்


கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்திவருகிறது. தற்போது யூட்யூப் வீடியோக்களை கூகிள் ப்ளஸ் தளத்திலேயே பார்க்கும் வசதியையும், நாம் பார்க்கும் யூட்யூப் வீடியோக்களை நண்பர்களுக்கு பகிரும் வசதியையும் அளித்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

இணைய பாதுகாப்பு #4 - Phishing


இணைய பாதுகாப்பு பற்றிய தொடரில் நாம் தற்போது Phishing எனப்படும் மோசடி பற்றி பார்ப்போம். இதை பற்றி விரிவாக எழுதும் எண்ணம் இல்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு வந்த சில மின்னஞ்சல்களால் தற்போது இதைப் பற்றி கொஞ்சமாக எழுதுகிறேன்.

கூகிளின் அதிரடி மாற்றங்கள்


கூகிள் ப்ளஸ் வந்த பிறகு தனது எல்லா தளங்களின் தோற்றங்களையும் மாற்றி வருகிறது கூகிள் தளம் (இதனை எத்தனையாவது தடவை எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை). தற்போது மாற்றம் பெற்றிருப்பது ஜிமெயில் மற்றும் கூகிள் ரீடர் தளங்கள். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி?


சமூக வலையமைப்புத் தளங்களில் முன்னணியில் இருப்பது பேஸ்புக் தளம். இணையத்தளம்/வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ரசிகர் பக்கம் (Fan Page) என்றதொரு வசதியை அறிமுகப்படுத்தியது. இதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது அதனை அழகுப்படுத்துவது எப்படி? என்று பார்ப்போம்.

கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர்


கூகிள் ப்ளஸ் வந்த பிறகு தனது எல்லா தளங்களையும் அதனுடன் ஒன்றிணைத்து வருகிறது கூகிள் தளம். அதன்படி ப்ளாக்கர் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியது. ப்ளாக்கர் தளத்தையும் கூகிள் ப்ளஸ் தளத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக, இரண்டு தளங்களுக்கும் ஒரே சுயவிவர பக்கத்தை (Profile Page) பயன்படுத்தும் வசதியை அளித்துள்ளது.

எச்சரிக்கை: ஏமாற்றும் எரிதங்கள்


இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தொல்லைகள் தருபவற்றில் ஒன்று, Spam எனப்படும் எரிதங்கள். மின்னஞ்சல்கள், இணைய தளங்கள் என்று பல வழிகளில் இவைகள் நமக்கு தொல்லை தருகின்றன. இப்பதிவில் நமது தளத்திற்கு வரும் எரிதங்கள் பற்றி பகிர்கிறேன்.

எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்!

Bowl of Cookies 04.26.09 [116]

உங்களுக்கு விதவிதமாக சமைப்பதற்கு விருப்பமா? எப்படி சமைப்பது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். உங்களுக்காக கூகிள் தேடுபொறி உதவுகிறது. கூகிள் தேடலில் உடனடி பதில்கள் என்ற பதிவில் கூகிள் தேடலில் உள்ள சில சிறப்பம்சங்களை பார்த்தோம். அதில் இன்னொரு சிறப்பம்சம், Get Recipes என்னும் வசதி.

இணைய பாதுகாப்பு #3 - Safe Browsing

முந்தைய  பகுதிகள்:  
இணைய பாதுகாப்பு #1 - Passwords
 இணைய பாதுகாப்பு #2 - Personal Informations

இணையத்தில் உலவும் போது வைரஸ், மால்வேர் போன்று பல ஆபத்துகள் உள்ளன. அவற்றிலிருந்து பாதுகாப்பது பெறுவது நமது கையில் தான் உள்ளது. இப்பகுதியில் இணையத்தில் பாதுகாப்பாக உலவுவது (Safe Browsing) பற்றி பார்ப்போம்.

ப்ளாக்கரில் பிக்னிக் வசதி

பிக்னிக் (Picnik) என்பது புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் பயன்படும் இணையத்தளமாகும். 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையத்தளத்தை கூகிள் நிறுவனம் கடந்த வருடம் (2010) வாங்கியது. புதிய ப்ளாக்கர் தோற்றத்தில் பதிவில் நாம் சேர்க்கும் புகைப்படங்களை பிக்னிக் மூலம் திருத்தம் செய்யும் வசதியை அளித்துள்ளது ப்ளாக்கர் தளம்.

இணைய பாதுகாப்பு #2 - Personal Informations


முதல் பகுதி: இணைய பாதுகாப்பு #1 - Passwords
இணைய பாதுகாப்பில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது தனிப்பட்ட தகவல்கள் (Personal Informations). இணையத்தில் நமது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதின் மூலம் நம்முடைய ஆபத்திற்கு நாமே பாதை அமைக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது பற்றி இங்கு பார்ப்போம்.

"தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி.

கூகிள் பஸ்ஸிற்கு Good Bye!


பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு போட்டியாக கூகிள் தளம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய சமூக வலைப்பின்னல் கருவி தான் கூகிள் பஸ் (Google Buzz). ஆனால் அது அறிமுகமான சில நாட்களிலேயே அடிவாங்கத் தொடங்கியது.

ஆப்பிள் ஐபோன் 4S மற்றும் ப்ளாக்கர் மாற்றம்


உலகமெங்கும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோனின் ஐந்தாம் பதிப்பான Apple iPhone 4S சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நான் ஐபோன் பயன்படுத்தியது இல்லை. அதனால் விரிவாக இதை பற்றி சொல்லப் போவதில்லை. கொஞ்சம் மட்டும் பார்ப்போம்.

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க


நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான். திரட்டிகள் பற்றியும், அதன் ஓட்டுபட்டைகளை இணைப்பது பற்றியும் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்தோம். தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப் பட்டைகள் இணைப்பது பற்றி மேலும் சில தகவல்களுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

ஆன்லைன் வாசகர்களை கண்காணிக்க...


பதிவர்களில் யாரும் தங்கள் வாசகர்களை பற்றிய விவரங்களை (Stats) அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள். தங்கள் ப்ளாக்கிற்கு எங்கிருந்து வருகிறார்கள்? எந்த தளங்கள் நமக்கு பரிந்துரை செய்கிறது? தேடுபொறியில் எந்த வார்த்தைகளை தேடுவதன் மூலம் வருகிறார்கள்? என்பதனை தெரிந்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ப்ளாக்கை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இணைய பாதுகாப்பு #1 - Passwords


கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின் வளர்ச்சி அபாரமானது. எந்த இணையம் நமக்கு அதிகம் உதவுகிறதோ, அதே இணையம் தான் நமக்கு அதிகமான ஆபத்தையும் விளைவிக்கின்றது. அப்படிப்பட்ட இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

கூகிள் தேடலில் உடனடி பதில்கள்

கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்

ஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி

ப்ளாக்கர் தளம் தனது டாஷ்போர்ட் தோற்றத்தை மாற்றியுள்ளது அனைவருக்கும் தெரியும். நம்முடைய ப்ளாக்கை விதவிதமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற பதிவில் பார்த்தோம். தற்போது அந்த வசதியை அறிமுகப்படுத்திவிட்டது.

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

நம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

புதிய வசதிகளுடன் கூகிள் ப்ளஸ்

கூகிள் தளத்தின் சமூக வலைத்தளமான கூகிள் ப்ளஸ் தனது கள சோதனையை (Field Trial) முடித்துக் கொண்டு சோதனைக் களத்தில் (Beta Version) இறங்கியுள்ளது. தற்போது அழைப்பிதழ் இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் இணையலாம். அத்துடன் மேலும் சில புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசமாக பதிவேற்ற Google Sites

Google Sites
நமது பதிவுகளில் ஆடியோ, பவர்பாய்ன்ட், பிடிஎஃப் போன்ற கோப்புகளை இணைக்க வேண்டுமானால் முதலில் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு தான் அதனை Embed அல்லது Iframe என்னும் நிரலிகள் மூலம் நமது பதிவுகளில் இணைக்க முடியும்.

ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox

கூகிள் ப்ளஸ் வந்ததிலிருந்து கூகிள் தளம் தனது ப்ளாக்கர், யூட்யூப், ஆட்சென்ஸ், ஜிமெயில் போன்ற அனைத்து தளங்களையும் ஒரே மாதிரியான தோற்றமாக மாற்றி வருகிறது. தற்போது அதன் Sign-up பக்கங்களில் மாற்றம் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் ப்ளாக்கர் தளத்தில் Light Box எனப்படும் புதிய பட வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

TechMinar.com - கடலில் ஒரு துளி

இணையம் என்னும் சமுத்திரத்தில் ஒரு சிறு துளியாய் சங்கமித்துள்ளது Techminar.com என்னும் புதிய ஆங்கில தளம். இது ப்ளாக்கர்  உதவிக் குறிப்புகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய தளமாகும். இந்த புதிய தளத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Labs

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

மூன்றாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries

நான்காம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - K.I.S

ஆறாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - +1 Metrics

ஏழாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Diagnostics

எட்டாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - HTML suggestions

கூகுள்  வெப்மாஸ்டர் தொடரின் இறுதியாக, அவ்வளவாக பயன்படாத  Labs பற்றி பார்ப்போம். வெப்மாஸ்டர் பக்கத்தில் இடதுபுற sidebar-ல் இருக்கும் Labs என்பதை க்ளிக் செய்தால் அங்கு Instant Previews, Site Performance, Video Sitemapsஎன்று இருக்கும்.

கூகுள் வெப்மாஸ்டர் டூல் - HTML suggestions

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

மூன்றாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries

நான்காம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - K.I.S

ஆறாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - +1 Metrics

ஏழாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Diagnostics
Googlebot, உங்கள் தளத்தில் ஊடுருவும் போது, அது உங்கள் உள்ளடக்கத்தில் சில சிக்கல்களை கண்டறியும். இந்த சிக்கல்கள் Google தேடல் முடிவுகளில் உங்கள் தளம் தோன்றுவதை தடுக்காது, ஆனால் உங்கள் தளத்தின் பயனர் அனுபவம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். (கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்டது).
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers